dfd
சர்க்கரைவள்ளி லெமன் புட்டு
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சுட்டு உதிர்த்துக் கொள்ளவும்) - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை, எள் பொடி (இரண்டும் சேர்த்து) - கால் கப், கடுகு, பெருங்காயம், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் புரட்டி, உதிர்த்த வள்ளிக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை, எள் பொடிகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இறக்கும்போது, எலுமிச்சைச் சாறு விட்டு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
செய்முறை: வெறும் கடாயில் கம்பு மாவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசிறி... ஆவியில் வேக விட்டு எடுக்கவும். பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கரைசலில் வறுத்து, வேக வைத்து, ஆற வைத்த கம்பு மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.
செய்முறை: வெறும் கடாயில் தினை மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறி ஆவியில் வேக வைத்து ஆற விடவும். பொடித்த கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகாகக் காய்ச்சவும். நறுக்கிய தேங்காய் துண்டுகள், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கி, ஆற வைத்துள்ள கம்பு மாவில் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டிக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக விட்டு எடுக்க... தினை மாவு கொழுக்கட்டை ரெடி!
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து... கேழ்வரகு மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஆறியவுடன், அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு உருண் டைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். பிறகு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கட்டியில்லாமல் கிளறி, ஆற விடவும். மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விருப்பமான வடிவில் உருட்டி, ஆவியில் வேகவிட... தாளிப்பு கொழுக்கட்டைகள் தயார்!
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அரைத்து இதே போல் செய்யலாம்.
பூரணத்துக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி அதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். பூரணம் ரெடி.
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கழுவிய வாழை இலையில் பரப்பி, நடுவில் பூரணம் வைத்து, இலையோடு சேர்த்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்க.. வாழை இலை மணத்தோடு கொழுக்கட்டை தயார்! இதேபோல் பூவரசு இலையிலும் செய்யலாம். விருப்பத்துக்கு ஏற்ற பூரணம் வைத்து தயார் செய்யலாம்.
Subscribe to:
Posts (Atom)