Health bits

NAGARAJI

புளிச்சக்கீரை :இந்த கீரையை வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும். மலச்சிக்கல், வாதநோய் மற்றும் சொறி சிரங்கு, புண்குணமாகும். பித்த தேகம் உள்ளவர்கள் இதைச் சாப்பிடக்கூடாது.

பொன்னாங்கண்ணி கீரை :கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். உடல் உஷ்ணம் குறையும், இரத்தம் விருத்தியாகும்.

முளைக் கீரை :நரம்புத்தளர்ச்சி, மாலைக்கண் நோய், வயிற்றுப்புண், நீரடைப்பு, மூக்கு, தொண்டை, வாய், பல் சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும்.

சாணாக்கீரை :மகோரதம் என்னும் வியாதியை பூரணமாக குணப்படுத்தும். இது குழிப்புண், ஆறாப்புண்களைக் கூட குணப்படுத்தும் சக்தியுள்ளது.

சிறுகசலைக் கீரை :மலத்தை இளக்கி வெளியேற்றும். உடல் சூடு தணியும், சிறுநீர் சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும்.

ஆரைக் கீரை :பித்த வியாதிகளைக் குணமாக்கும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதைக் கட்டுப்படுத்தும். இரத்தப்பிரமேகம் என்னும் வியாதியைக் குணமாக்கும்.

அரைக்கீரை :கண்சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாக்கும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

முருங்கைக் கீரை :தாதுவை விருத்தி செய்யும். பால் கொடுக்கும் தாய்மார்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நன்றாக பால் சுரக்கும்.

வெந்தயக்கீரை :ஜீரணச்சக்தியை உண்டாக்கும். உடல் பலம் தரும். அறிவைத் தெளிபடுத்தும், சுறுசுறுப்பு உண்டாகும்.

அகத்திக்கீரை :மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளையும் குணமாக்கும்.

வல்லாரை :காசநோய், ஈளை முதலியன அகலும். நினைவாற்றலைப் பெருகச் செய்யும்.

கரிசலாங்கண்ணிக் கீரை :கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கு நன்மை புரிகிறது.

மூட்டு வலியால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வலியைப் போக்க புதியதொரு மருந்தை அறிமுகப்படுத்துகிறார் அப்போலோ மற்றும் கெஸ்ட் மருத்துவமனை முடநீக்கியல் டாக்டர் ஏ.பி.கோவிந்தராஜ். நம்மிடம் அவர் கூறியதாவது... மூட்டுவலி, மூட்டு இறுக்கம், இயக்கக் குறைவு உண்டாக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் கீல்வாத நோய்க்குப் புதிய சிகிச்சை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் நோய் இருப்பவர்களுக்கு எலும்பு மூட்டுக்குள் உள்ள திரவம் காய்ந்துவிடுவதுடன், இணைப்புத் தசை நார்களும் சிதைந்து விடுகிறது. இதனால், எலும்புகள் உரசும்போது மூட்டு வலி ஏற்படுகிறது.

இதற்கு திரவத்தன்மையை உருவாக்கும் புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இயற்கைப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட `சன்விஸ்க்-ஒன்' என்ற மருந்து, ஊசிமூலம் மூட்டு எலும்புக்குள் திரவத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது. ஒரு தடவை ஊசி மூலம் செலுத்தினால் 6 முதல் 8 மாதங்கள் வரை வலி வராது. அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகளின் பக்க விளைவுகளில் இருந்து நோயாளிகளைப் பாதுகாக்கலாம். இதனால் மூட்டு வலி பறந்தே... பறந்து போகும் என்கிறார் ஏ.பி.கோவிந்தராஜ்.

மாநகராட்சி மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி கற்றுத்தரப்படுகின்றது. இதனால் கர்ப்பிணிகளுக்கு நார்மல் டெலிவரியாக வாய்ப்பு அதிகரிக்கும். எதையும் தாங்கும் மன உறுதியும் ஏற்படும். குழந்தை பெற்ற பெண்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி 24 மணி நேர மருத்துவமனைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிரசவ பாதுகாப்பு சாதனங்கள் 7 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 7 ஆயிரம் சாதனங்கள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சியில்தான் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கியிருக்கிறார்கள். குழந்தை பெறுவதை எளிதாக்கவும், உடல் தளர்ச்சியைப் போக்கவும் மென்மையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மாநகராட்சி ஓட்டுநர்களுக்கு மன உளைச்சலைப் போக்க யோகா பயிற்சி தொடங்கப்பட்டது. இதனால் ஒரு விபத்துகூட இதுவரை ஏற்படவில்லை. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்ததன் மூலம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது.


தோல் பளபளப்பாக இருக்க காய்கறிகள்,பழவகைகள் நிறைய சாப்பிட்டால் தோல் பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் இங்கிலாந்து பிர்ஸ்டல் மற்றும் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிபுணர்கள், ஒருவரது கவர்ச்சியை அதிகரிக்கக் கூடிய இயற்கையான அம்சங்கள் பற்றி ஆராய்ந்தனர். சிறப்பு கம்ப்யூட்டர் சாப்ட்வேரை பயன்படுத்தி, 54 ஆண், பெண்களிடம் ஆய்வு நடத்தினர்கள்.

ஒருவரது தோலின் நிறத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருப்பதை அறிந்தனர். காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் வண்ணப் பொருள் (கரோபுனாய்ட் பிக்மென்டல்) சேர்ந்த தோல் வெளிர் மஞ்சளாகவும், அத்தகைய தோல் கொண்டவர்கள் முழு ஆரோக்கியமாகவும், கவர்ச்சியாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

இதுபற்றி ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் ஐயன் ஸ்டீபன் கூறுகையில், ``தாவரங்களில் உள்ள வண்ணப் பொருளில் நோய் எதிர்ப்புத் தன்மை (ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்) அதிகம். அது ரத்தம், தோலில் சேர்ந்திருப்பவர்களை நோய் தாக்குவது கடினம். அத்துடன் தோலின் நிறத்தை மெருகேற்றி, ஆளே கவர்ச்சியாக இருக்கும் என்கின்றனர்.



ஆஸ்துமா நோயினால் மூச்சுவிட சிரமம் ஏற்படும்போது ஒரு பழுத்த வாழைப்பழத்தை அனலில் வேகவைத்து மிளகுத்தூளில் தொட்டு உட்கொள்ள தகுந்த நிவாரணம் பெறலாம்.

மிளகு, வெல்லம், பசு நெய் ஆகிய `மூன்றையும் சேர்த்து லேகியமாகக் கிளறி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

ஒரு ஸ்பூன் மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும்.

சந்தனம், மிளகும், கற்பூரம் இம்மூன்றையும் சம அளவு எடுத்துஅரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும்.

மாதுளம் பழத்தை தோலுடன் இடித்து சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகுத் தூளையயும் சேர்த்துக் கொடுத்தால் மதுவினால் ஏற்படும் போதை மயக்கம் உடனே தெளியும்.

அருகம்புல்லுடன் மிளகு சேர்த்து கஷாயமிட்டு குடித்து வர எல்லாவகை நஞ்சும் தீரும். ரத்தம் சுத்தமாகும்.

வெற்றிலையில் 4 முதல் 5 மிளகை சேர்த்து சாப்பிட்டு வர சிறுவண்டுகள் பூச்சிக்கடி குணமாகும்.


சேனைக்கிழங்கு ஒரு அற்புதமான உணவுப்பொருள்.இது இரு வகைப்படும். நாட்டில் வளரும் ஒருவகை. காடுகளில் வளரும் இன்னொரு வகை. இதைச் சாப்பிடும்போது நாக்கில் அரிப்பதுபோல் இருக்கும். அதில் கால்சியம் சத்து இருப்பதால் அப்படி இருக்கும். மற்றபடி நோயாளிகள்கூட சாப்பிடக்கூடிய உணவுப்பொருள் இது.

சேனையில் வைட்டமின் ஏ,பி, மாமிசம், கால்சியம், இரும்பு, நிக்கோட்டினிக்ஆசிட், மினரல்ஸ், ரிபோபுளோவின் போன்ற சத்துப் பொருட்கள் உள்ளன.

ஜீரணிக்கும் உறுப்புகளை உந்தும். அதனால் பசி எடுக்கும். சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் போன்றவற்றில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும். சுருக்கமாகச் சொன்னால் சேனை ஒரு நல்ல மருந்து போன்றது.


தலையில் பேன் தொல்லை இருப்பவர்கள் துளசியைத் தலையணையில் வைத்துத் தூங்கினால் பேன்கள் தலையை விட்டு நீங்கி விடும்.

நீரிழிவு நோய்க்கு துளசி நல்ல மருந்து. துளசியைக் கழுவி நீரில் ஊற வைத்து அந்த நீரைப் பருகினால் நீரிழிவு நோய் எட்டிப் பார்க்காது. அது போல் காலையில் துளசி இலையை ஒரு கைப்பிடி எடுத்து நன்கு சுத்தம் செய்து மென்று வந்தாலும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தலாம்.

வியர்வை நாற்றம் இருந்தால் துளசி இலையை முதல் நாள் தண்ணீரில் கசக்கிப் போட்டு மறு நாள் குளித்து வர வியர்வை நாற்றம் உடலிலிருந்து அகலும்.துளசி இலைகளை மென்று தின்றாலும் வியர்வை நாற்றம் போகும்.படைபத்து முதலிய சரும நோய்களுக்குத் துளசிச் சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து பூசி வந்தால் குணம் கிடைக்கும்.



* முள்ளங்கி இலைச்சாற்றை 5 மி.லி. அளவு எடுத்து 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், சிறுநீர்க்கட்டு சூதகக்கட்டு, எளிய வாதநோய்கள் குணமாகும்.

* முள்ளங்கி கிழங்குச்சாறு 30 மில்லி 2 வேளை குடித்து வர சிறுநீரகக் கோளாறு நீர்த்தாரைக் குற்றங்கள் குணமாகும்.

* முள்ளங்கியை உணவுடன் சேர்த்து வர சூட்டைப் பெருக்கி உடம்பை சமச்சீராக வைத்துக்கொள்ளும். எனவே தாராளமாக சிறுநீர் வெளியேறும். பசியை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்கும்.

* முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியதில் கைப்பிடியளவு எடுத்து கஞ்சி செய்து குடித்து வர வீக்கம், சுவாசக் குறைபாடுகள் குணமாகும்.

* முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக்கல்லடைப்பு குணமாகும்.



* 100 கிராம் பேரீச்சம்பழத்தில் 300 கலோரிச் சத்து நம் உடலுக்குக் கிடைக்கிறது. மேலும் கால்சியச்சத்து அதிகமாகவும், பாஸ்பரஸ் வைட்டமின் `சி' போன்றவற்றுடன் இரும்புச் சத்தும் இந்தப் பழத்தில் இருப்பதால் இது மிகச் சிறந்த டானிக் போலவும், செயல்படுகிறது.

* பேரீச்சம்பழம் பழுதடைந்துள்ள உடல் பாகங் களை சீர் செய்து உடனடியாக உடலுக்கு சக்தியைத் தந்துவிடுகிறது.

* கரும்புச் சர்க்கரையைவிட மிக உயர்ந்த தரமான பழச் சர்க்கரையும் மாவுச் சர்க்கரையும் இந்தப் பழத்தில் நமக்குக் கிடைக்கிறது.

* வியாதியிலிருந்து மீண்டவர்கள் இழந்த ஆரோக்கியத்தைப் பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேரீச்சம்பழத்தைப் பாலில் கொதிக்க வைத்து இரவில் அருந்தி வந்தால் போதும்.

* பேரீச்சம்பழத்தை சாதாரணமாக அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடனும் சாப்பிடலாம்.

*எளிதாக செரிக்கக் கூடியது பேரீச்சம்பழம். இதயவலி, இதய நோயினால் அவதிப்படுவோர்களுக் கும் நல்ல இயற்கை மருந்து.

* அஜீரணக்கோளாறு உள்ள குழந்தைகளுக்கும் பல்முளைக்கும் காலத்திலும் (குழந்தைகளுக்கு) பேரீச்சம்பழத்தை நசுக்கி தேன் சேர்த்து டீஸ்பூனால் கொடுத்தால் நலம் பயக்கும். பல்ஈறுகள் உறுதிப்படும்.

NAGARAJI

லதோஷமும்,சளிக்காய்ச்சலும் வராமல் தடுத்துக் கொள்ள இயற்கையான வழிமுறைகள் உள்ளன. அப்படியே இவை எட்டிப் பார்த்தாலும் உடனே தடுக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள் உள்ளன.

நச்சு நுண்மங்களையும், நோய் நுண்மங்களையும் உடலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் வெள்ளைப் பூண்டு முதலிடத்தில் இருக்கிறது. இதில் உள்ள அலிசின் என்ற பொருள் கல்லீரலை முழுமையாகத் தூய்மை செய்கிறது. இதன் மூலம் இரத்தமும் சுத்தமாக்கப்பட்டு வெள்ளை இரத்த அணுக்களை தொடர்ந்து உற்பத்தி செய்யத் தூண்டி விடப்படுகிறது. நாம் அறியாமல் சுத்தம் இல்லாத உணவுகளைச் சாப்பிட்டிருந்தாலும், குளிர்காலத்தில் ஜலதோஷம்,காய்ச்சல் தாக்காமல் இருக்கவும் காலையில் பூண்டுப்பற்களில் 5,6ஐ நல்லெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் போதும். உணவுகளில் பூண்டு சேர்த்து வந்தாலும் இப்படி தனியாகச் சாப்பிடுவது நல்லது.

அடுத்து இஞ்சி. உணவில் இஞ்சி சேர்த்துச் சமைப்பது. ஒரு வேளை சுக்கு காபி அருந்துவது. ஜலதோஷமும், சளிக்காய்ச்சலும் (FLU) இருந்தால் இரண்டு வேளை சுக்குக்காபி அருந்தி வர வேண்டும். இஞ்சியில் உள்ள உடனே ஆவியாகும் நறுமண எண்ணெய் வகைகள் உடலுக்கு வெப்பத்தையும் தந்து உடலை வியர்க்கச் செய்து காய்ச்சலையும்குணப்படுத்துகிறது. உடலில் உள்ள விஷப் பொருள்களையும் உடனே வெளியேற்றுகிறது. மேலும் நெஞ்சில் உள்ள சளியையும் வெளியேற்றி நுரையீரல்கள் நன்கு செயல்பட உதவுவதால் மூச்சு இரைப்பு குறைந்து நன்கு சுவாசிக்க முடியும். ஜீரண மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், உணவுகள் ஜீரணமாகவும் இஞ்சி சேர்த்து சமைத்த உணவுகளை ஒரு வேளையாவது உணவில் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளிர்காலத்தில் தொண்டை வலியையும் குணப்படுத்தி உடலில் எரிச்சல் ஏற்படாமலும் தடுக்கிறது, தேன். இருமல் மருந்துகளை விட தேன் சிறப்பாகச் செயல்பட்டு தொற்று நோய், இருமல், சளி, ஆஸ்துமா, அலர்ஜி போன்றவற்றைத் தடுக்கிறது. தினமும் ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் சளிக் காய்ச்சல் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சளி முற்றிலும் நீர்த்துப் போகும்.

அடுத்து தயிர். உடலில் தீங்கு விளைவிக்கும் நோய் நுண்மங்கள் இருந்தால் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது போல தயிரில் உள்ள அசிட்டோபிளஸ், ஃபிடஸ் என்ற இரு தோழமையுள்ள பாக்டீரியாக்கள் உள்ளன. ஜலதோஷமும், சளிக்காய்ச்சலும் குணமாகும்வரை இரண்டு கோப்பை தயிர் சாப்பிட்டு வரவும். நல்ல பாக்டீரியா சேர்த்த தயிர் இப்போது எங்கும் கிடைக்கிறது. வீட்டில் உறைய வைக்கும் தயிரும் நல்ல தயிரே.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் என அடர்த்தியான பச்சை நிறத்தில் உள்ள தண்டுக்கீரை, பசலைக்கீரை, முளைக்கீரை என ஏதாவது ஒருவகைக் கீரையை உணவில் சேர்த்து வரவும். இவை மகா ஆற்றலுடன் ஜலதோஷம், சளி, காய்ச்சல் போன்றவற்றை உண்டாக்கும் நோய் நுண்மங்களை அழித்து உடல்நலத்தைப் புதுப்பிக்கின்றன.

குளிர்காலத்திலும், ஜலதோஷம், சளிக்காய்ச்சல், மற்றும் பிற உடல் நலப்பிரச்னைகள் இருக்கும்போதும் தினமும் ஓர் எலுமிச்சைப் பிழிந்து அதில் சுடுதண்ணீர் ஒரு டம்ளர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து காலையில் அருந்தி விடவும். காரணம், இதில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் கலப்பதால், இரத்தத்தில் உள்ள காரச்சத்து (Alkaline) கூடுகிறது. இதனால் உடலில் இரசாயன மாற்றம் ஏற்பட்டு நோய்கள் உடனே குணமாகின்றன. மேலும் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய்க் கிருமிகளை விரைந்து அழிக்கும் தன்மை கொண்டதாகும்.

இதனால் ஜலதோஷம்,சளிக்காய்ச்சல் இன்றி ஆண்டு முழுவதும் நலமுடன் வாலூம்.