உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை.

உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.
கடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து, நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.
எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான். இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு.
சீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியா தான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.
* தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
* பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
* பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.
* உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
* தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.
* சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.
* ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
* பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
* அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.
* பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
சரியான "மேனியா'வா?
அநியாயத்துக்கு சிலருக்கு, அர்த்தமே இல்லாமல் கடுங்கோபம் வரும்; இந்த அனுபவம் உண்டா உங்களுக்கு? இப்படிப்பட்டவர்களை சரியான "மேனியா'வாக இருக்கிறாரே மனுஷன்...என்று அழைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
மேனியா என்றால் என்ன தெரியுமா? சாதாரண மனிதராக இல்லாமல், அடிக்கடி கோபம், தேவையில்லாமல் சீற்றம், எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள தயாரில்லா குணம் கொண்டவர் என்று பொருள். மனோரீதியான பிரச்னை உள்ளவர். சாதா மேனியாவாக உள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சில மணி நேரம், சில நாள், சில மாதம் தான் இப்படிப்பட்ட நிலை நீடிக்குமாம். ஆனால், மாதக்கணக்கில் நீடித்தால், மனோதத்துவ நிபுணரை பார்க்கத்தான் வேண்டும்.
யாருக்கு வருகிறது மேனியா? அதன் அறிகுறி என்ன?
* பகட்டாக தான் இருப்பர்; ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; எதிர்வாதம் எப்போதும் உண்டு. உச்சமாக சண்டையும் போடுவர்.
* திடீரென உணர்ச்சிவசப்படுவர்; "நீ சொல்றது தப்பு, உனக்கு ஒண்ணும் தெரியாது' போன்ற வசனங்கள் அடிக்கடி வரும்.
* அதிகமாக செலவழிப்பர்; ஆடம்பரம் பிடிக்கும்; செக்ஸ் போக்கு அதிகமாக இருக்கும்.
* தூங்குவது குறைவாகத்தான் இருக்கும்; ஆனால் சோர்வே தெரியாது.
* எதிலும் திட்டமிடாத நிலை உள்ளதால், இவர்கள் கடனாளி ஆவதுண்டு. அதனால், மது, போதைக்கும் அடிமையாகிவிடுவர்.
* எந்த ஒரு சிறிய சண்டையும் விர்ர்ர்ரென தலைக்கு ஏறி விடும் என்பதால், எந்த விளைவுகளும் இவர்களுக்கு வந்து சேரும்.
* நார்மலான மனிதர்கள் அல்ல என்பதால், இவர்கள் சாப்பிடுவதிலும், சிரிப்பதிலும், அழுவதிலும் மிகவும் அதிகமாகவே இருப்பர். இவர்கள் எல்லா நடவடிக்கையும் நார்மலுக்கு மாறாகவே இருக்கும்

* உப்பில்லா பண்டம் குப்பையிலே... என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.
* உப்பை குறையுங்க; இல்லே, தீராத தொல்லை தான் என்று பயமுறுத்திவிட்டனர் டாக்டர்கள்.

உப்பு பற்றி உப்பு பெறாத விஷயம் என்று யாரும் நினைக்கத் தயாரில்லை. ஆனால், உடம்புக்கு வராத வரை உப்பு பற்றி கவலைப்படுவதும் இல்லை. சிலரை பார்த்தால், தட்டில், அரை ஸ்பூன் உப்பை போட்டு வைத்திருப்பர். தேவைப்படும் போது, இவர்களே, சாம்பார் முதல் தயிர் சாதம் வரை சேர்த்துக்கொள்வர்.
கொழுப்பு தேவை; அதிகமானால் ஆபத்து; எண்ணெய் தேவை; அதிகமானால் ரத்த அழுத்தம் தான். இனிப்பு தேவை; அதிகமானால் ஷுகர். இப்படித்தான் உப்பு தேவை தான்; அதிகமானால் ரத்த அழுத்தம் எகிறிவிடும்; மாரடைப்பு வருமோ என்ற பீதி கிளம்பும்.
அப்படி என்ன தான் இருக்கு?
சோடியம் - குளோரின் ஆகிய இரண்டு ரசாயனங் களும் சேர்ந்தது தான் உப்பு; இயற்கை கனிமங்களில் ஒன்று ; சோடியம் குளோரைடு கலவைகளில் ஒன்று. வெண்மை நிறம் கொண்டது சோடியம்; குளோரினோ, பச்சை மஞ்சள் கலந்தது; தண்ணீரில் கரைந்து விடும்; காற்றில் வாயுவாகி விடும்.
பல்வேறு உப்புகள் உள்ளன:
* சோடியம் பைகார்பனேட்: பேக்கிங் சோடா என்பது இது தான். சுத்தம் செய்ய பயன்படுவது. மருத்துவ குணங்கள் கொண்டது.
* சோடியம் நைட்ரேட்: உரம், வெடிக்கு பயன்படுவது.
* சோடியம் ஹைட்ராக்சைடு: பேப்பர் , சோப்பு, சில உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் காஸ்டிக் சோடா எனப்படுவது.
வேணும்... ஆனா வேணாம்
உடலில் உப்பு தேவை; அதிக அளவில் உப்பு , வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறி விட்டால், அதை ஈடு செய்ய வேண்டி உப்பு கரைசல் தேவை. உடலில் உப்பு குறைந்தால் தண்ணீர் வற்றிய நிலைக்கு தள்ளப்படுகிறது. அப்போது வாந்தி, மயக்கம் வருகிறது. அதை தீர்க்க அதிக அளவில் தண்ணீர், எலக்ட்ரால் கரைசல் குடிக்க செய்கின்றனர் டாக்டர்கள்.
உடலில் அதிக உப்பு சேர்ந்தாலும் தொல்லை தான். அதிக உப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும்; அடிக்கடி சிறுநீர் போவர். சிறுநீர் மூலம் தான் அதிகப்படியான உப்பு வெளியேற்றப்படுகிறது.
உப்புல சூப்பர் பலன்
* வெது வெதுப்பான தண்ணீரில் உப்பை கரைத்து தொண்டையில் நிறுத்தி கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு போய்விடும். புண் இருந்தாலும் போய் விடும்.
* தேய்க்கும் பற்பசையில் உப்பு உள்ளது; அதுபோல சோப்பிலும் உள்ளது. உடலில் உள்ள எரிச்சல், தோல் பிரச்னை இதனால் போய் விடும். பல் பாதுகாப்புக்கு உப்பு முக்கியம்.
எவ்ளோ ஓகே
நாம் குடிக்கும் தண்ணீரில் உப்பு உள்ளது. அதனால், உணவில் சேர்ப்பது உட்பட ஒருவரின் உப்பு தேவை ஒரு டீஸ்பூன் தான் என்பது தான் நிபுணர்களின் கருத்து.
உப்பு போட்டாலே, உணவு அயிட்டங்களுக்கு தனி சுவை வந்து விடும் தான்; ஆனால், அதற்காக நாற்பதை தாண்டியும் உப்பை குறைத்துக் கொள்ளாமல் இருந்தால் தொல்லை தான்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பினால் இவை ஏற்படுகிறதா என்று சர்வதேச சர்ச்சை நீடித்தாலும், உப்பை குறைத்தால் இதய நோய் கட்டுப்படுகிறது என்பது உண்மை .
பிரஷர் குறையும்
"லப் டப்' என்று இதயத்துடிப்பு கேட்கிறதே, அப்போது இதயம் சுருங்கி, விரியும். அப்போது ஏற்படும் அழுத்தம் தான் "சிஸ்டாலிக்' என்று அழைக்கப்படுகிறது.
மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செலுத்தப்படுவது அந்த அழுத்தம் மூலம் தான்.
இதயத்துடிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் மட்டும் தான் இதயம் ஓய்வெடுக்கிறது. இந்த இடைவெளியில் ஏற்படும் அழுத்தம் தான் ரத்த அழுத்தம் "டயஸ்டாலிக்' என்று பெயர்.
ரத்த அழுத்தம் 130/85 என்பது நார்மலானது; சுருங்கி விரியும்போது எடுக்கப்படுவது தான் முதலானது; அதை டாப் நம்பர் என்பர்; அதுபோல, இரண்டாவது குறிக்கப்படுவது தான் டயஸ்டாலிக்.
மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி, உப்பு குறைக்கப்பட்டாலே, ரத்த அழுத்த அளவு தானாகவே குறைந்து விடும்.
எதை கைவிடணும்?
* பிரஷ் பழங்கள், காய்கறிகளை சாப்பிட பழகலாம்; உப்பு குறைத்து உணவு சாப்பிட பழக வேண்டும்.
* பாட்டில் பானங்களை கண்டிப்பாக கைவிட வேண்டும். அதில் உப்பு அதிகம்.
* பாக்கெட்டில் அடைக் கப்பட்ட உணவு, நீண்ட நாள் பாதுகாப்புக் காக சோடியம் பயன் படுத்தப்படுகிறது. உப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஊறுகாய், உப்பு போட்ட நொறுக்குகளை மறந்து விட வேண்டும்.

* எதைத் தான் சாப்பிடறதுன்னு குழப்பமா?
* புதிது புதிதா ஏதாவது வாங்கி சாப்பிடாதீங்க
* குண்டாக இருந்தால், ஒபிசிட்டி...ன்னு சொல்லிடறாங்க; ஒல்லியாக இருந்தால் அனிமிக்'குன்னு சொல்றாங்க.
* "புல் கட்டு' கட்டினா சாப்பாட்டு ராமன்னு பட்டம் தந்திடறாங்க; சாப்பிடாமலே இருந்தா "டயட்'டான்னு கேட்கறாங்க...
* இதைச் சாப்பிடாதே... அதைச் சாப்பிடாதே...ன்னு ஆளாளுக்கு ஒரு ஐடியா தர்றாங்க.
இப்படி எல்லாம் ஒரு "மண்டை காய் வைக்கிற' குழப்பம், பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. போதுமான சுகாதார விழிப்புணர்வு இப்போது தான் வரத் துவங்கி இருக்கிறது. அதிலும், சிலர் அதிக விழிப்புணர்வுடன், தாங்களே டாக்டராகி விடுவதும் உண்டு. அப்படிப்பட்டவர்கள், அவர்கள் மட்டுமின்றி, அடுத்தவர்களுக்கும் தவறான தகவல் தந்து , கடைசியில் தவிக்க வைக்கின்றனர்.
எதைத்தின்னால்...
ஏகப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள், துறை வாரியாக நிபுணர்களின் "டிவி' பேட்டிகள், அடிக்கடி எச்சரிக்கை தகவல்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. "மால்'களில் உடனடி ரசம், குழம்பு பொடி போய், இட்லி பவுடர் வரை வந்து விட்டது; இன்னொரு பக்கம், காய்கறி, பழங்களுக்கும் கிராக்கி அதிகரித்து வருகிறது.
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சாலட் கள் முதல் கார்ன் பாட்டில்கள் வரை வாங்கி வேறு சாப்பிடுகின்றனர் சிலர்; இன்னும் சிலர், காலில் "நிக்' ஷூ, அரை நிஜார், டீ ஷர்ட் அணிந்து, காதில் "வாக்மென்' மாட்டிக் கொண்டு வியர்க்காமல் நடந்து, டயர் தேய்ந்த தள்ளு வண்டியில் கிடைக்கும் அருகம் புல் ஜூஸ் குடிப்பதும் நகர வாழ்க்கையின் கொடுமை. மொத் தத்தில் எதைத் தின்னால் பித்தம் தெளியும் என் பது போல பலருக்கும், சாப்பிடும் விஷயத்தில் குழப்பமே மிஞ்சுகிறது.
ஆரோக்கிய உணவு எது?
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இல்லாத பட்சத்தில், உடல் பெருக்காத நிலையில் வழக்கமான உணவு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. சத்தான உணவுகள் என்று பார்த்து காய்கறி, பழங்களை சேர்ப்பது மிக நல்லது.
அசைவ விரும்பியாக இருந்தால், தரமான, ஆரோக்கிய சூழலில் உள்ள அயிட்டங்களை வாங்கி, துல்லியமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் தரம் குறைந்தால் தான் ஆரோக்கிய கேடு வருகிறது.
* உணவுகளில், கொழுப்பு, எண்ணெய் சமாச்சாரங் களை நாற்பதுடன் குறைத்து கொள்ள வேண்டும். அதுபோல, நொறுக் குத்தீனிகளையும் மறந்திட வேண்டும் என் பது டாக்டர்களின் பொதுவான அட்வைஸ்.
காதை பொத்துங்க
மருத்துவ, சுகாதார குறிப்புகள் மட்டுமின்றி, ஆராய்ச்சி தகவல்களும் இப்போது குவிந்து வருகின்றன. பற் பசை , சோப்பு, முக பவுடர்கள், லோஷன்கள் மட்டுமல்ல, உணவுப் பொருள் டப்பாக்களிலும் புரியாத மருத்துவ குறிப்புகளுடன் தான் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
"ஓஹோ ஏதோ நல்ல பொருள் போலிருக்கிறது ' என்று போலி விளம்பரங்களை பார்த்து சாப்பிடுவோர் அதிகம். இந்த விஷயங்களில் சிலர், டாக்டரின் ஆலோசனை பெறாமல், தங்கள் உணவு முறையை மாற்றக்கூடாது; மருந்துகளையும் விழுங் கக்கூடாது. இதுபோல, புதிதாக எந்த டானிக், சத்தான உணவு பொருள் வந்தாலும் அதை வாங்கி குழந்தைகளுக்கு சாப்பிட வைப்பதும் சில பெற்றோருக்கு வாடிக்கையாகி விட்டது.
"கட்' பண்ணா "நோ'
நகர வாழ்க்கையில் வழக்கமான சமையல் வேலைகளை கூட செய்ய முடியாத அளவுக்கு பலரும் "பிசி'யாகி விட்டனர். காய்கறிகளை நறுக்கி , சுத்தம் செய்து சமைப்பதற் கும் கூட இப்போது ஆபத்து வந்து விட் டது. காரணம், "கட்' செய்த காய்கறிகளும், பழங்களும் விற்பனை செய்ய ஆரம் பித்து விட்டனர் பலரும்.
எந்த ஒரு காய்கறியையும், பழத்தையும் துண்டுகளாக வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடுகின்றன என்பது தான் மருத்துவ உண்மை. "கட்' செய்யப்பட்ட பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது; முழுப்பழத்தை வாங்கி, அதை நன்றாக சுத்தம் செய்து , நறுக்கி சாப்பிடலாம்.
மாத்திரை போபியா
சிலருக்கு எப்போது பார்த்தாலும் ஏதாவது மாத்திரையை விழுங்கிக்கொண்டே இருக்க வேண்டும்; சிலர் கையில் "பாம்' வைத்துக்கொண்டு அதை தடவிக் கொண்டே இருப்பர். உண்மையில், இவர்களுக்கு எந்த கோளாறும், வலியும் இருக்காது.
உணவு சாப்பிட்டபின், ஜீரணத்துக்கு என ஒரு மாத் திரை வாயில் போட்டுக்கொள்வர்; தலைவலி வராமலேயே டப்பாவை பாக்கெட்டில் இருந்து எடுத்து தடவிக்கொள்வர். இதுவும் ஒரு வகையில் "போபியா' தான்.
இப்படி சாப்பிட்டு வருவதால், உடலில் எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தியும் விடலாம் என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.

ஆரோக்ய வாழ்வு வாழவேண்டுமெனில், மனிதர்களுக்கு எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறையால், எலும்புகள் வலுவிழந்து காணப்படும். தடுமாறி கீழே விழ நேரிட்டால், எலும்பு முறிவு ஏற்படும். எனவே எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.



கீரை வகைகள், மீன், பால், பாலாடை, தயிர், பேரீச்சை, முட்டையில் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களில் "கார்பனேடட்' முறையில் தண்ணீர் மாற்றப்பட்டிருப்பதால், அவற்றை தொடர்ந்து குடிக்கும் போது எலும்புகள் வலுவிழந்துவிடும். இத்தகைய குளிர்பானங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


* சன் ஸ்ட்ரோக் சாதா விஷயமல்ல
* முன்னெச்சரிக்கை மிக முக்கியம்
உடலுக்கு வெப்பம் தேவை; அதுவே, அளவுக்கு மீறும் போது, வியர்வையாகவோ, தோல் வழியாகவோ வெளியேறி விடும். ஆனால், அதையும் மீறி வெப்பம் தாக்கும் போது, உடல் திணறிப்போய்விடும்.
இப்படிப்போகும் போது, உடலில் உள்ள வெப்பம் 41 செல்சியஸ் டிகிரியை தாண்டி விடும் போது தான் ஆபத்து காத்திருக்கிறது. அது தான் 'சன் ஸ்ட்ரோக்' ஆரம்பம். அந்த நிலையில், உடலில் நீர் வற்றிப்போகிறது; வெப்பம் அதிகரிக்கிறது. அதனால், உறுப்புகள் பாதிக்கின்றன; விளைவு, உச்சகட்டமாக மரணம் தான்.வெயிலுக்கு மரணம் என்று படிக்கிறோமே தவிர, எதனால் மரணம் என்பதை பெரும்பாலோர் உணருவதில்லை. விழிப்புணர்வு இருந்தால் பலிகளை தவிர்க்கலாம்.
தலைசுற்றல், வாந்தியா?
இதற்கு அறிகுறிகள் பல உண்டு; தொடர்ந்து, வெயிலில் அலைந்து கொண்டிருப்பவர்கள், அதிலும் வயதானவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, காய்ச்சல் போல உணர்வர்; தண்ணீர் மேல் தண்ணீர் குடிப்பர். ஆனால், வெப்பம் தாங்க முடியாது.
இது மட்டுமின்றி, வாந்தி, மயக்கம் ஏற்படும்; சோர்வு வரும்; படுக்கலாம் என்றால் தலை சுற்றும். கிறுகிறுப்பு தொடர்ந்து இருக்கும். சில சமயம், மாரடைப்பு போல, பெரும் வலி இருக்கும். தசைப்பிடிப்பு வெடிப்புகளும் ஏற்படும்.
திணறும் மூச்சு
உடலில் வெப்பம் ஏறிய நிலையில், வியர்வை வராது; மூச்சு திணறும்; உடலில் ஆங்காங்கு சிவந்து போகும். தடிப்பும், வெடிப்பும் ஏற்படும். எதிலும் கவனம் போகாது; இது தான் உச்சகட்டம்; உடனே டாக்டரிடம் போய்விடுவது தான் நல்லது.
உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை வெளியேற்ற போதுமான நீர்ச்சத்து தேவை. அப்படி இருந்தால் தான் தோல் வழியாக வியர்வையாக வெளியேறும். இல்லாவிட்டால், வெப்பம் தங்கி விடும்.இந்த நிலையை தான் தண்ணீர் வற்றிப்போய் விட்டதாக கருதுகிறோம். தண்ணீர் வற்றி விட்டால் சன் ஸ்ட்ரோக் வருவது நிச்சயம்.
யாருக்கு வரும்?
பெரும்பாலும் வயதானவர்கள், பலவீனமானவர்களுக்கு வரும். வெயிலிலேயே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வரும். அதனால், அவர்களை வெயிலில் அலைய விடாமல் செய்தால் தவிர்க்கலாம்.
இதய, சர்க்கரை, சிறுநீரக நோய்க்காக மருந்து சாப்பிடுவோர் , வெயிலில் போகவே கூடாது; அப்படி போனால், தற்காத்துக்கொள்வது நல்லது; அவர்களுக்கு 'சன் ஸ்ட்ரோக்' வரும் வாய்ப்பு அதிகம்.
முதல் உதவி என்ன
வெயிலில் மயக்கம் அடைந்தோ, கிறுகிறுத்தோ போவோரை கண்டால், அவர்களை, நிழலில் மல்லாந்து படுக்க வைத்து, உடலை குளிர்ப்படுத்த வேண்டும்; தண்ணீர் தெளிக்க வேண்டும். பின், உடலில் இருந்து வியர்வை வெளியேற, அவர் அருகே மின்விசிறியை வைத்து காற்று வர வைக்க வேண்டும்.
தொடை இடுக்கு, கைகள் இடுப்பு, கழுத்து பக்கவாட்டு பகுதிகளில் ஐஸ் 'பேக்கிங்' வைக்கலாம்; அப்படி செய்தால், உடல் வெப்பம் 100 பாரன்ஹீட் டிகிரிக்கு குறையும்.அவருக்கு உப்பு - தண்ணீர் கரைசலை தரலாம்; இப்போது 'எலக்ட்ரால்' கரைசல் கடைகளில் விற்கப்படுகிறது. அதை தந்தால் அவர் உடல் வெப்பம் குறைந்து விடும்.

98.3 ஐ தாண்டக்கூடாதுங்க!
* நம் உடல் வெப்பம் 98.3 செல்சியஸ் டிகிரியாக இருக்க வேண்டும். இதை தாண்டினால், முதலில் காய்ச்சல்; அடுத்து 'சன் ஸ்ட்ரோக்' தான்.
* உடல் வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல், தலைசுற்றல், கிறுகிறுப்பு, வாந்தி வரும். பெண்களுக்கு முகப்பரு வரவும் இது தான் காரணம்.
* வெயில் காலத்தில், அதிக தண்ணீர் குடிப்பதுடன், காபி, டீயை குறைத்து, தர்பூசணி சாப்பிடலாம்; அது போல, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களின் ஜூஸ் குடிக்கலாம்.
*பசலைக்கீரை உட்பட பச்சைக்கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதுபோல கேரட்டும் நல்லது.
*கோடை காலத்தில் அடிக்கடி உணவில் வெள்ளரி சேர்க்க வேண்டும்; தனியாகவும் சாப்பிடலாம்.
*வயிற்றுப் பிரச்னைகளுக்கு தயிர் நல்லது: முகத்தில் சுரசுரப்பு போகவும் அதை தடவலாம்.
*கொழுப்பு, ஜங்க் புட் உணவுகளை சாப்பிடுவதை குறைத்தால், தோல், முகம் வெயிலில் பாதிக்காமல் இருக்க செய்யலாம்.