ஃப்ரெஷ் ஜூஸ் ப்ளீஸ்!

பாட்டில் பானங்கள் எதையும் தொடாதீர்கள். புதிதாகப் பிழிந்த பழச் சாறுகளை மட்டுமே குடியுங்கள். ஐஸ் வாட்டருக்குத் தடா போட்டு, மண்பானைத் தண்ணீருக்கு வெல்கம் சொல்லுங்கள்.

கடுப்பு வராது!

மதியம் அரை லிட்டர் மோரில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துங்கள். சிறுநீர் கடுப்பு கிட்டே நெருங்காது.

என்ஜாய் தி கூழ்!

உடலை குளுமையாக்கும் நம்பர் ஒன் தானியம் கம்பு. ஒரு கப் கம்பு மாவுடன் 2 கப் நீர் சேர்த்து ‘கூழ்Õ சமைத்து நீர் ஊற்றி இரவு முழுவதும் வைத்து விட்டு, காலையில் மோர் ஊற்றி சாப்பிட, எந்த உஷ்ண பாதிப்பும் நம்மை அண்டாது.

நோ வலி!

அரிசியில் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து, ப்ரஷர் பேனில் வேக வைத்து, கஞ்சி செய்து சாப்பிடுங்கள். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி வரவே வராது.

ஹேவ் ஆனியன்!

உணவில் அதிகமாக வெங்காயம் சேருங்கள். ஆனியன் தோசை, ஆனியன் ஊத்தாப்பம் என்று ஜமாயுங்கள்.

கோ ஃபார் வெஜிடபிள்!

நொறுக்குத் தீனிக்கு பைபை சொல்லிவிட்டு, நிறைய காய்கறி சாலட், முளைப்பயறு, வெள்ளரிப் பிஞ்சு சாப்பிடுங்கள். குளிர்ச்சிக்கு குளிர்ச்சி. எடையும் குறையும்.

டேக் லெமன் ஜூஸ்

வெயிலில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், புறப்படும் முன், எலுமிச்சை சாற்றில் நீரும், உப்பும் கலந்து பருகி விட்டுப் போகவும். இது, உடலில் நீர்ச்சத்தை நிலைநிறுத்த உதவும்.

- எச்.அஹமது தஸ்மிலா,
கீழக்கரை.

கூலான கர்ட்டன்ஸ்!

வெயில் காலம் முழுவதும் வீட்டில் உள்ள ஜன்னல், கதவுத் திரைச்சீலைகள் பச்சை அல்லது நீல வண்ணத்தில் இருக்கவேண்டும்.

கல்கண்டு எங்கே?

வெயிலில் வெளியே செல்லும்போது கைவசம் கல்கண்டு வைத்துக்கொள்ளுங்கள். தாகத்தைத் தணிக்க இது மிகச் சிறந்தது.

கசகசா டிரிங்க்

வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். கசகசாவை மிக்ஸியில் அரைத்துக் கொதிக்க வைத்து பாலோடு சேர்த்துத் துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்றுவலி பறந்து போகும். ஒரு தம்ளர் பாலுக்கு ஒரு ஸ்பூன் சர்க்கரையும், இரண்டு ஸ்பூன் கசகசாவும் போடலாம்.

சூரியனையும் கூலாக்க...

வீட்டின் வெளிச்சுவரில் வெள்ளைச் சுண்ணாம்பு அடித்தால் கோடை காலத்து வெம்மையை இது தணித்துவிடும்!

சிம்பிள் டிரிங்க்

நீராகாரத்தில் வெங்காயம் அல்லது காரட் ஒன்றை நறுக்கிப் போட்டு நார்த்தங்காய் வற்றலுடன் 2 தம்ளர் பருகினால் வெயில் காலத்தில் ‘ஏசி’யில் இருப்பதுபோல் உடம்பு இருக்கும்.

முள்ளங்கி சாலட்!

முள்ளங்கி நல்ல குளுமை. கேரட் துருவலில் துருவி உப்பு, அரைமூடி எலுமிச்சைச்சாறு பெருங்காயம் கடுகு தாளித்துச் சாப்பிட வெயிலின் பாதிப்பு இருக்காது.

தர்பூஸ் கஸ்டர்ட்

தர்பூசணி பழங்களை நறுக்கித் துண்டுகளாக்கி கிண்ணங்களில் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.


கஸ்டர்ட் செய்யும்முறை
பால் - 2 டம்ளர்
கஸ்டர்ட் பவுடர் - 2 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.

முதலில் சிறிதளவு குளிர்ந்த பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து வைத்துக் கொள்ளவும். மீதிப் பாலைச் சுடவைத்து இந்தப் பாலில், ஏற்கெனவே சிறிதளவு பாலில் கலந்து வைத்துள்ள கஸ்டர்ட் கலவையைக் கலந்து ஒரு தடவை கிளறினால் போதும். உடனே திக்காகி விடும். இத்துடன் சர்க்கரை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவைத்து ஆறியவுடன் தர்பூசணி பழத்துண்டுகளுடன் கலந்து பரிமாறவும்.

தேவை

சாம்பல் பூசணித் துருவல் - லு கப், வெள்ளரிக்காய்த் துருவல் - லு கப், கேரட் துருவல் - லு கப், நெல்லித் துருவல் - ரு கப், தயிர் - ரு கப், எலுமிச்சை சாறு - ரு தேக்கரண்டி, புதினா இலை - 10, மிளகுத் தூள் மற்றும் உப்பு - ருசிக்கு ஏற்ப.

செய்முறை

அனைத்து துருவல்களையும் மிக்ஸியில் இட்டு அரைத்து சாறு எடுக்கவும். இத்துடன் புளிப்பு இல்லாத தயிர், எலுமிச்சை சாறு, புதினா, மிளகுத் தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து கலக்கி சுவைக்கவும்.

பலன்கள்

சூட்டைத் தணிக்கும். குண்டு உடலைக் குறைக்கும்..


21.04.10 மற்றவை

ப்படியே கேட்கறப்பல்லாம் அவளுக்கு சாக்லெட்டும் ஐஸ்கிரீமுமா வாங்கிக் கொடுத்து குட்டிச்சுவராக்குங்க.. அப்புறம் சாப்பிடமாட்டேங் கிறான்னு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு அலைங்க..’’

குழந்தைகளிடம் பாசத்தைக் காட்டுவதற்காக மனைவியிடம் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ளாத அப்பாவே இருக்க முடியாது.. சில வீடுகளில் அப்பாவின் இடத்தில் அம்மா!

ஒரு சின்ன சாக்லெட் விஷயத்தில் இப்படி பதர்ற அளவுக்கு என்ன இருக்கிறது?

காரணம் பெரும்பாலான குழந்தைகள் சாக்லெட், ஜெல்லின்னு விரல் அளவுக்கு சாப்பிட்டுவிட்டு வேறு எதுவுமே தின்பதில்லை. இதை குழந்தை செய்யும் தவறாக எடுத்துக்கொள்வதா, அவர்களின் மாறிவிட்ட ரசனை என்பதா?

முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு குழந்தையிடம் உனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டால், பொரிகடலை, பட்டாணி, காராச்சேவு, கடலைமிட்டாய், கைமுறுக்கு, பனங்கிழங்கு, கொடுக்காப்புளி, நாவற்பழம், நெல்லிக்காய், எலந்தப்பழம் என பட்டியல் தொடரும்... பார்ப்பதற்கு இவை சாதாரணமாகத் தெரிந்தாலும் சத்தும் ஆரோக்கியமும் இதில் இயற்கையாகவே இருக்கும்.

இன்றுள்ள குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள்? 5 முதல் 12 வயது குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர்களிடம் ஒரு சர்வே எடுத்ததில் கிடைத்த பதில் இதுதான்...

வாழ்க்கை முறையில் நமக்குப் பழக்கமில்லாத இந்த சமாச்சாரங்கள் குழந்தைகளை எப்படி கவர்ந்தது? ‘நொந்தாலும் நூடுல்ஸ் வேகலைன்னாலும் வெரைட்டி ரைஸ்’ என்கிற அளவிற்கு அவர்களை எப்படி இந்த ஜங்க் ஃபுட்டுகள் அடிமையாக்கியது?

‘‘குழந்தைகளை மூளைச் சலவை செய்ததில் மீடியாக்களுக்கு மேஜர் பங்கு உள்ளது. பிள்ளைகளின் டேஸ்டை மீடியாக்கள் புரிந்து வைத்திருக்கும் அளவிற்கு பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை’’ என்கிறார் பல குழந்தைகளை வைத்து பராமரிக்கும் ‘காஞ்சனா பாட்டி மை கிராண்ட் மா’ஸ்பிளேஸ்’ எம்.டி. ப்ரீதாசுரி.

‘‘எந்த சாப்பாடாக இருந்தாலும் கைகளில் ஒட்டக்கூடாது; கலர் கலரா இருந்தாலும் விதவிதமான டேஸ்ட்ல இருக்கணும் என்பதுதான் இன்றைய குழந்தைகளின் டேஸ்ட். இது ஃபாதர் மதருக்கு தெரியுதோ இல்லையோ பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தெரிந்துள்ளது. அவர்கள் விரும்புகிற மாதிரி ஜங்க் ஃபுட்டுகளை தயாரிக்கின்றனர். நம் தாய்மார்களோ இன்றும் ஒரே மாதிரி தோசை, பிசுபிசுன்னு பருப்பு சோற்றை பிசைஞ்சு குடுத்தா எந்தக் குழந்தை சாப்பிடும்?

தோசை மீது விதவிதமான கலர்ல காய்கறிகளை பூவாகத் துருவித் தெளித்து தினசரி ஒரு டேஸ்ட்ல, தினசரி வெவ்வேறு வடிவத்தில் கொடுத்துப் பாருங்க... பிஸாதான் ஃபேவரைட்னு சொல்ற பிள்ளைகூட கேழ்வரகு தோசையை சாப்பிட ஆரம்பித்துவிடும்..’’ என்று தாய்மார்களின் தவறை மட்டுமல்லாது அதைத் தவிர்க்கும் ஆலோசனைகளையும் அள்ளிவிட்டார் டயட்டீஷியன் டாக்டர் புவனேஸ்வரி.

‘‘குழந்தைகள் சாப்பிடும் இந்த ஜங்க் ஃபுட் அயிட்டங்கள் அனைத்திலும் அதிகம் இருப்பது கொழுப்புச் சத்து. அதை அளவுக்கதிகமாகச் சாப்பிடும்பொழுது ஒபிஸிட்டி பிராப்ளம் உருவாகி விளையாட்டிலும் படிப்பிலும் அவர்களை மந்தமாக்கிவிடுகிறது. அத்துடன் கூட்டுக் குடும்பம் போன்று பகிர்ந்து உண்ணும் பழக்கத்திற்கும் இடமில்லாமல் போனதால் எதைச் சாப்பிட்டாலும் தாராளமாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இதுதான் பிரச்னையின் மையம். Naturally they are in danger zone" என எச்சரிக்கிறார் குழந்தை நல மருத்துவர் ரவிசங்கர்.

‘‘குழந்தைகள் ஜங்க் ஃபுட்டை அதிகம் உண்பதால் உடல் எடை கூடுதல் மட்டுமின்றி மூளையையும் பாதிக்கும்’’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் பால்கென்னடி. இப்படி எச்சரிக்கை மணிகள் எத்தனை அடித்தாலும் யார் காதிலும் விழுவதில்லை என்பதுதான் சோகம்!

‘‘ஜங்க் ஃபுட்டுகள் சாதாரணமாக நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் உடலுக்குத் தேவையான சத்துக்களை கிடைக்கவிடாமல் தடுக்கிறது. சின்ன வயதில் பி.பி. போன்ற வயோதிக வியாதியை வரவழைக்கிறது..’’ என்று நம்முள் கிலியை ஏற்படுத்துகிறார் டயட்டீஷியன் டாக்டர் புவனேஸ்வரி.

ஏதோ சென்னையில் மட்டும் இப்படியொரு நிலைமை என்று நினைக்காதீர்கள். சேலம், மதுரை, திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் நிலவரம் இப்படி கலவரமாகத்தான் இருக்கிறது என்பதை நமது சர்வே சுரீரென்று சுட்டிக்காட்டயது..

தேநீர்

அளவோடு தேநீர் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதே.தேநீர் குடல் புண்ணை ஆற்றுவதில் அருமருந்தாக செயல்படுகிறது.அடிக்கடி பேதியாகும் பொழுது கறுப்பு டீ குடித்தால் பேதி உடனே நின்றுவிடும். ஆனால் கறுப்பு டீ அடிக்கடி குடித்தால் பித்தம் ஏற்படக்கூடும். அரேபியர்கள் பால் கலவாத கிரீன் டீ எனப்படும் கறுப்பு டீயையே சாப்பிடுகின்றனர்.

தேநீரை மிகச் சூடாக குடிக்கக்கூடாது.அதனால் உணவுக் குழாயில் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது. தேநீரை சாதாரண சூட்டில் அதாவது வெது வெதுப்பாகக் குடிக்கலாம். ஆபத்தில்லை.


*சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் எலுமிச்சைப் பழத்துக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.அவசரத்துக்கு வீட்டில் எலுமிச்சை வைத்தியம் செய்து பாருங்கள்.மருத்துவரைத் தேடி அலையாமல் வீட்டு கிச்சனில் உங்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும்!

* எலுமிச்சைப் பழத்தை இரண்டாக அறுத்து நெற்றிப் பொட்டில் வைத்து லேசாகத் தேய்த்தால் தலைவலி குறையும். (காய்ச்சல் இருக்கும்போது இதைத் தவிர்க்கவும்)

* பேதி அதிகமாகப் போனால் உடல் சோர்வு, பலகீனம், குமட்டல், தாகம் அதிகமாக இருக்கும். இவ்வேளையில் எலுமிச்சைப் பழசாறு அருந்தினால் நிவாரணம் உடன் கிடைக்கும்.

* கோழி முட்டையில் நெல்லிக்காய் அளவு எடுத்து, எலுமிச்சை சாற்றில் கலந்து, சிறிது இஞ்சி கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஈளை இருமல் குணமாகும்.

* எலுமிச்சை இலையை சிறிது, சிறிதாக வெட்டி நீர்மோரில் சேர்த்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ‘சி’ சத்து கிடைக்கும்.

* தேள் கடித்த இடத்தில் எலுமிச்சைப் பழத்தை அறுத்து, அதன் சாற்றை கடிவாயில் வைத்து தேய்க்க வேண்டும்.எரிச்சல் குறைந்த பின்பு மருத்துவரிடம் காண்பித்தல் நலம்.

* வெந்நீரில் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு வாய் பிசுபிசுப்பாக இருந்தால் எலுமிச்சைப் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி கொதிநீரில் போட்டு அந்த நீரைப் பருகலாம்.