ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிகிச்சை!

First Published : 20 Dec 2009 03:54:42 PM IST


மனி​தர்​கள் நோயி​லி​ருந்து விடு​ப​டு​வ​தற்கு மாத்​திரை,​ ஊசி போன்​ற​வற்​றை​யெல்​லாம் பயன்​ப​டுத்தி அந்த நோயி​லி​ருந்து விடு​பட பல முயற்​சி​களை மேற்​கொள்​கி​றார்​கள். இந்​தப் பொருள் இந்த நிலைக்கு நல்​லது அல்​லது கெட்​டது என்று தெரிந்​து​விட்​டால் நோயின் தாக்​கத்தி​லி​ருந்து பாது​காப்​புப் பெற​லாம். அந்த வகை​யில் ஆயுர்​வே​தத்​தில் ஏதே​னும் குறிப்​பு​கள் உள்​ள​னவா?​

​இதற்​கான விளக்​கம் அஷ்​டாங்க சங்​கி​ர​கம் எனும் ஆயுர்​வேத நூலில் கீழ்க்​கா​ணும் விதத்​தில் காணப்​ப​டு​கி​றது.

உயி​ர​ளிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது பால்.

களைப்​பை நீக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது நீரா​டு​தல்.

உட​லைப் பருக்​கச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தது மாமி​சம்.

தாதுக்​க​ளுக்கு ஊட்​ட​ம​ளித்து மகிழ்ச்​சி​யு​றச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தவை மாமி​சச் சூப்​பும்,​ மாம்​ப​ழச் சாறு​மா​கும்.

உண​வுக்கு சுவை​ய​ளிக்​கும் பொருட்​க​ளில் சிறந்​தது உப்பு.

இத​யத்​திற்கு இன்​ப​ம​ளிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது புளிப்​புச் சுவை.

உட​லுக்கு வலு​வைக் கூட்​டும் பொருட்​க​ளில் உயர்ந்​தது கோழி மாமி​சம்.

வாதம்,​ கபம் இவற்​றைத் தணிப்​ப​வற்​றில் உயர்ந்​தது எள்-​எண்​ணெய்.

வாதம்,​ பித்​தம் இவற்​றைத் தணிப்​ப​வற்​றில் மேலா​னது நெய்.

பித்​தம்,​ கபம் இவற்​றைத் தணி​யச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தது தேன்.

உடலை உறு​திப்​ப​டுத்​தும் செயல்​க​ளில் சிறந்​தது உடற்​ப​யிற்சி.

உறக்​கம் தரும் பொருட்​க​ளில் மேலா​னது எரு​மைப் பால்.

சிறு​நீரை அதி​கம் தோற்​று​விக்​கும் பொருட்​க​ளில் சிறந்​தது கரும்பு.

வயிற்​றில் அமி​லச் சுரப்பை தோற்​று​விப்​ப​வற்​றில் சிறந்​தது கொள்ளு.

பித்​தம்,​ கபம் இவற்றை ஏற்​ப​டுத்​து​வ​தில் உளுந்து,​ எள்​ளு​டன் கலந்த கோதுமை மாவி​னால் செய்​யப்​பட்ட தின்​பண்​டம்,​ செம்​மறி ஆட்​டின் பால் இம்​மூன்​றும் முதன்​மை​யா​னவை.

ரத்​தக் கசிவை ஏற்​ப​டுத்​தும் ரத்​த​பித்​தம் என்ற நோயைக் கட்​டுப்​ப​டுத்​து​ப​வற்​றில் சிறந்​தது ​ ஆடா​தொடை.

இரு​ம​லைக் கட்​டுப்​ப​டுத்​து​வ​தில் சிறந்​தது கண்​டங்​கத்​திரி.

அப்​போ​து​தான் அடி​பட்ட உட்​கா​யங்​களை ஆற்​று​வ​தில் சிறந்​தது கொம்​ப​ரக்கு.

உட​லு​ருக்கி நோயைப் போக்​கு​வ​தற்​கும்,​ தாய்ப்​பாலை வள​ரச் செய்​வ​தற்​கும் ரத்​தப்​போக்​கைத் தடுப்​ப​தற்​கும் சிறந்​தது வெள்​ளாட்​டின் பால்.

அதிக வாந்​தியை நிறுத்​து​வ​தில் சிறந்​தது நெல்​பொறி.

மூல​நோ​யை​யும்,​ வீக்​கத்​தை​யும் தணிக்​கச் செய்​வ​தி​லும் மேலா​னது மோர்.

உடல் நல​மின்​மை​யைத் தோற்​று​விப்​ப​ன​வற்​றில் சிறு​நீர்,​ மலம் போன்ற இயற்கை உந்​து​தல்​களை அடக்​கு​தல் முதன்​மை​யா​னது.

பற்​க​ளுக்கு உறு​தி​ய​ளிப்​ப​தி​லும்,​ சுவை​யூட்​டு​வ​தி​லும் நல்​லெண்​ணெய்க் கொப்​ப​ளித்​தல் சிறந்த வழி​யா​கும்.

எரிச்​ச​லைத் தணிக்​கச் செய்​யும் பூச்​சுப் பொருட்​க​ளில் உயர்ந்​தவை சந்​த​ன​மும் அத்​தி​யு​மா​கும்.

எரிச்​சல்,​ தோல்​வி​யாதி இவற்றை நீக்​கும் பூச்​சுப் பொருட்​க​ளில் விலா​மிச்ச வேரும்,​ வெட்டி வேரும் உயர்ந்​தவை.

கண்,​ ஆண்மை,​ கூந்​தல் வளர்ச்சி,​ குரல் வளம்,​ வலிவு உடல்​மி​னு​மி​னுப்பு,​ காய​மாற்​று​தல் இவற்​றிற்​குப் பயன்​ப​டுத்​தும் பொருட்​க​ளில் அதி​ம​து​ரம் சிறந்​தது.

தாதுக்​க​ளுக்​குப் பல​ம​ளித்து ஆயுளை நிலை​நி​றுத்​து​வ​தற்​குச் சிறந்த பொருள் நெல்​லிக்​கனி.

நீர்ச்​சு​ருக்கு,​ வாதத்​தைக் கண்​டித்​தல் இவற்​றிற்​குச் சிறந்​தது நெருஞ்​சில்.

நீரி​ழிவு நோயைக் கண்​டிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது மஞ்​சள்.

நோயா​ளி​க​ளுக்​குள்ள குணங்​க​ளுள் மேலா​னது மருத்​து​வர் சொற்​படி நடத்​தல்.

நோயை வளர்க்​கும் பொருட்​க​ளில் வருந்​து​தல் குறிப்​பி​டத்​தக்க கார​ண​மா​கும்.

சோம்​பலை வளர்ப்​ப​தில் தூக்​க​மும்,​ வலுவை உண்​டாக்​கு​வ​தில் அறு​சு​வை​யுள்ள அன்​னத்​தைப் பயன்​ப​டுத்​த​லும் கார​ண​மா​கும்.

அமை​தி​யான மன​நி​லையே கரு நிலைத்​தி​ருப்​ப​தற்​குக் கார​ண​மா​கும்.

பசித்​தீ​யைக் கெடுப்​ப​தில் மாறு​பட்ட உண​வும்,​ மாறு​பட்ட வேளை​க​ளில் உண்​ப​தும் முக்​கி​ய​மா​ன​வை​யா​கும்.

ஒரே இடத்​தில் அமர்ந்து உண்​பது,​ நன்​றா​கப் படுத்து உறங்​கு​தல்,​ உண்​ணும் உணவு நன்கு சீர​ண​ம​டை​யச் செய்​வ​தில் சிறந்​தன.​

​(தொட​ரும்)​​​

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல்: 9444441771

உணவே மருந்து:

NAGARAJI B

கொழுத்த சரீரம் கொண்ட பெண்கள் கருத்தரிக்க இயலாமல் போவது உண்டு. இவர்கள் முதல் கட்டமாக தினமும் பத்து சிறிய வெங்காயத்தை உரித்துச் சாப்பிட்டு வரவேண்டும். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது தயிரில் போட்டுத் தயிர் பச்சடியாக காலை அல்லது பகல் உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். வெங்காயம் சாப்பிடுவதுதான் மிகவும் முக்கியம்.

மேலும், காராமணி, கொண்டைக் கடலை, பாசிப்பருப்பு, பசலைக்கீரை, நல்லெண்ணெய், ஆட்டு ஈரல், முட்டை இவற்றுள் மூன்றையாவது கரு உருவாகி குழந்தை பிறக்கும் வரை தினசரி பெண்கள் சாப்பிட்டு வரவேண்டும். காரணம், இவற்றில் தாராளமாக உள்ள ஃபோலிக் அமிலம் கரு உருவாகவும், ஆரோக்கியமாக வளரவும் பெரிய அளவில் உதவி செய்கிறது. குறிப்பாக, தினமும் 50 கிராம் காராமணிச் சுண்டல் சாப்பிட்டு வருவது நல்லது. பெண்களின் இரத்த சோகை குணமாகி உடலின் ஒவ்வொரு செல்லிலும் சிவப்பு இரத்த அணுக்கள் இருப்பதால் கண்டிப்பாக கரு உருவாகி விடும்.

மனைவி மட்டுமல்ல. கணவனும் வெங்காய மருத்துவத்தையும் ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். மேலும் மாத விலக்கு வந்து முடிந்த பத்தாவது நாள் முதல் அடுத்த பதினான்கு நாட்கள் கருத்தரிக்க உகந்த நாட்கள் என்பதையும் அறிந்து வைத்திருப்பது நல்லது.

உணவே மருந்து:

கொண்டைக் கடலை, சுண்டல், குழம்பு போன்றவற்றில் சீரகத் தூளையும் சேர்த்து சமைத்தால் உடனுக்குடன் உணவு ஜீரணமாகிவிடும்.

ஞாபகசக்தி அதிகரிக்க...

கைக்குத்தல் அரிசி, சம்பா, ரவை, தவிடு சலிக்காத கோதுமை மாவில் சப்பாத்தி, கேழ்வரகு, கம்பு, போன்றவை இடம்பெற வேண்டும். எந்த வேளை உணவிலும் இவற்றில் ஒன்றாவது இடம்பெற வேண்டும்.

உலர் திரட்சை, நெல்லிக்காய், ஆப்பிள், பாதாம்பருப்பு இவற்றுடன் ஒரு வேளை காய்கறி சாலட், இரண்டு வேளை பழசாலட் என்று சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி விழிப்பாக இருக்கும்.

மிக எளிய வழி, ஏழு பாதாம் பருப்புகளை ஒரு கிண்ணத்தில் இரவு ஊறப்போடவும். காலையில் எழுந்ததும் பல் சுத்தம் செய்த பிறகு ஏழு பருப்புகளையும் தோலை நீக்காமல் மென்று சாப்பிட்டு வரவும்.

கலோரி குறைவான சில உணவுகள்:

ஏழைகளின் எளிய உணவாக அவரைக்காய், மொச்சை போன்றவை போற்றப்படுகின்றன. அதே நேரத்தில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், தனிச்சிறப்பு வாய்ந்த புரதச் சத்து, வாரத்திற்கு இரண்டு வேளைகள் சாப்பிட்டால் கூடப் போதுமானது. குறைவான கலோரி என்பதால் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். பச்சைப் பட்டாணி, பீன்ஸ், காராமணி போன்றவற்றை மற்ற நாட்களில் பயன்படுத்தலாம்.

நீலம் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மூளைக்கும், தசைக்கும் பெரிய அளவில் நன்மை செய்கிறது. எனவே, கத்தரிக்காயை ருசியாக சமைத்து அடிக்கடி உணவில் சேர்க்கவும். சத்துஉணவு நிரம்பியது இக்காய் ஆழ்ந்த தூக்கத்திற்கும் கத்தரிக்காய் உதவும்.

ஊனம் இல்லாத குழந்தைகள் பிறக்கவும், எலும்பு மண்டலம் உறுதியாக இருக்கவும் ப்ராக்கோலி உதவுகிறது. காய்கறிகளுள் மிக உயர்தர இரும்புச் சத்து இதில் தான் இருக்கிறது.

கைத்குத்தல் அரிசியை விட இருமடங்கு புரதச்சத்து உள்ள உணவு, ஓட்ஸ் ஆகும். நார்ச்சத்தும் கெட்டியான மாவுச் சத்தும் உள்ள உடனடியாகக் கிடைக்கும் சிறந்த உணவு ஓட்ஸ். சப்பாத்தி, சாதம் தயாரிக்கும்போது ஓட்ஸையும் கலந்து தயாரித்தால் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வாரம் ஒரு நாள் பரங்கிக்காய் உண்டால் தினமும் உங்கள் இளமைத் துடிப்பை எந்த ஒரு சக்தியாலும் கொள்ளையடிக்க முடியாது. நம்முடைய உடலுக்கு அதிக அளவு கரோட்டீனாய்டு தேவை. எனவே, கரோட்டீனாய்டு சத்து உடலில் அதிகமாக இருந்தால் உங்கள் உடல் முதுமையடைவது தாமதப்படுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு கரோட்டீனாய்டு சத்து அதிகமுள்ள முதல் உணவு பரங்கிக்காய்தான். எல்லாவிதமான காய்கறிகளுடனும் பரங்கிக்காயைச் சேர்த்து சமைக்கலாம். கூடவே ஏதேனும் பருப்பு வகை ஒன்றும் சேரவேண்டும். பரங்கி விதைகளும் சாப்பிடலாம்.

மேற்கண்ட கலோரி குறைவான உணவுகள் அனைத்தும் உடல் எடை அதிகரிக்காமலும் கண்டிப்புடன் பார்த்துக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

NAGARAJI B

ந்த வயது ஆண், பெண் என்றாலும் உடல் உழைப்புத் தேவை. துணி துவைத்தல், தோட்ட வேலை போன்றவற்றின் போதும் இரத்த ஓட்டம் தலை முதல் கால்வரை சீராக இருக்கிறது.

குளிர்சாதன வசதியுள்ள வீடு, அலுவலகம், கார்களில் வசிப்பவர்கள் உடலுக்கு வைட்டமின் டி தேவை. இவர்கள் காலை பத்துமணி முதல் பகல் இரண்டு மணிக்குள் வெயிலில் நடப்பது, வேலை பார்ப்பது போன்றவற்றை வைத்துக் கொண்டால் வைட்டமின் டியை உடல் நன்கு தயாரித்துக் கொண்டு விடும் என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த உணவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யோகாசனம், உடற்பயிற்சியைப் போலவே, இந்த உணவுகள் பலன்களை அள்ளித் தருகின்றன.

எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஓய்வு நேரத்தில் கவலைப்படாமலும் ஓய்வெடுத்தால் உங்கள் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது என்று பொருள்.

இனி உணவுகள்:

முதலில் துத்தநாக உப்புச் சத்து தாராளமாக உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொட்டை வகை, விதை வகை, பருப்பு வகை, போன்றவற்றில் உள்ள இந்த உப்பு பிராஸ்டேட் சுரப்பி சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. பாதாம் பருப்பு, எள்விதை, பாசிப்பருப்பு போன்றவற்றில் இந்த உப்பு தாராளமாக இருக்கிறது. `முட்டை, இறைச்சி போன்றவற்றிலும் இந்த உப்பு அதிகம். சிறு நீரகத்தை பாதுகாத்து ஆண்மைக் குறைவு ஏற்படாமலும் இது தடுக்கிறது.

அடுத்து கீரைவகை, முளைவிட்ட தானியங்கள், கடலை வகை போன்றவற்றையும் தினமும் தவறாது உணவில் சேர்த்து வரவும். இதன் மூலம் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, செலினியம் போன்ற நோய் நச்சுமுறிவு மருந்துகள் தொடர்ந்து உடலுக்கு கிடைத்துவிடும்.

மூன்றாவதாக கால்சியம் சத்து நிரம்பிய பால், தயிர் கேழ்வரகு, கொழுத்த மீன் போன்றவற்றையும் உணவில் சேர்க்கவும்.

மேற்கண்ட மூன்று வகையான உணவுகளும் செல்களை வயதாவதால் சீரழித்து நோய்கள் உண்டுபண்ணுவதை உடனே தடுக்கும். இதன் மூலம் செல்களை சீரழிக்கும் ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் அதிகம் சுரக்காமல் தடுக்கும். இதனால் இரத்த ஓட்டம் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படும். கணவனைப் போலவே மனைவிக்கும் தாம்பத்யத்தில் ஆர்வம் இருந்தால் இரத்த ஓட்டம் எல்லா உறுப்புகளுக்கும் சீராகச் செல்கிறது என்று அர்த்தம். இல்லையெனில் மேற்கண்ட உணவுதான் மருந்து.

மேலும் நம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு இருந்தால்தான் இரத்தக் குழாய்களும், தசைப்பகுதியும் இறுக்கமின்றி ஓய்வாக இருந்து இரத்த ஓட்டம் தடையின்றி இருக்க உதவும். வால்நட், கோழிக்கறி, பிஸ்தா பருப்பு, வெண்ணெய், நெய் போன்ற உணவுகள் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரிக்க உதவுகிறது. கறுப்பு நிற சாக்லெட்டில் உள்ள ஆர்ஜினைன் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரிக்க பெரிய அளவில் உதவுகிறது. இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்து வரவும்.

சோம்பலாகவும் ஆர்வம் இன்றியும் இருந்தால் மிக உற்சாகத்துடன் வாழ இந்த உணவுகள் உதவும். தினமும் துள்ளலுடன் வாழ மேற்கண்ட உணவுகள் சிறந்த உணவு மருந்துகளும்கூட!

வைட்டமின் `சி ' நல்லதா?

ஆப்பிள், தக்காளி, சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உடலில் புற்றுநோய்க் கட்டிகள் தோன்றாமல் தடை செய்கின்றன. அடுத்து இரத்தம் கெட்டியாகாமல் தடையின்றி ஓட வழி செய்கின்றன. பார்வைத் திறனைப் பாதுகாத்து காட்ராக்ட் அபாயத்தைத் தவிர்க்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மூட்டு வலி ஏற்படாமலும் தடுக்கிறது. வந்துவிட்டால் உடனே குணமாக்குகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எல்லாவற்றையும்விட நமது தோலைப் பளபளப்பாக்குகிறது. திராட்சை சாறு, மாதுளம் பழம், ஆரஞ்சு என வைட்டமின் சி நிறைந்த பழங்களை விடாப்பிடியாக ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இளமைத் துடிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வதை உணரலாம்.

NAGARAJI B

நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்களுக்கு உண்மையிலேயே மருத்துவக் குணங்கள் நிரம்பிய மருந்துகள் போல செயல்படும் சில நல்ல உணவுகளை தி அமெரிக்கன் ஜார்னல் ஆஃப் கார்டியலாஜி பட்டியலிட்டுள்ளது.

இந்த உணவுகள் இருதய நோய், புற்றுநோய், முதுமை அடைவதை தாமதப்படுத்துதல், வேறு ஏதேனும் நோய்கள் வந்தால் தனிச்சிறப்புடன் செயல்பட்டு அவற்றைக் குணமாக்குதல் ஆகிய பண்புகளுடன் செயல்படுகின்றன.

முதல் உணவு, பரங்கிக்காய்தான். பரங்கிக்காய், செல்கள் முதுமை அடையாமல் பாதுகாக்கின்றன. புற்றுநோய், இதயநோய் வளர்ச்சியடையாமல் தடுத்துக் குணப்படுத்த இதில் பீட்டாகரோட்டீன் தாராளமாக உள்ளது. கலோரி, கொழுப்பு, சோடியம் உப்பு போன்றவை இதில் குறைவாக உள்ளன. நார்ச்சத்துகள் தாராளமாக உள்ளன. பரங்கி விதையில் மக்னீசியம், இரும்புச் சத்து ஆகியவற்றுடன் புரதச் சத்தும் நன்கு கலந்து உள்ளன.

இரண்டாவது நஞ்சை முறிக்கும் சக்தி நிறைந்த பழம், மாதுளை. உடலில் உள்ள கட்டி, வீக்கம், அழற்சி போன்றவற்றை மாதுளம் பழச்சாறு குணமாக்குகிறது. பிராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் வந்துவிட்டாலும் தடுக்கிறது. இதயத்திற்கும், மூளைக்கும் நன்கு இரத்தம் கிடைக்கவும் உதவுவதால் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்கு நன்கு கிடைத்து விடுகிறது. எனவே இளமைத் துடிப்புடன் இதய நோயின்றி வாழலாம். இயன்றபோதெல்லாம் மாதுளம் பழம் சாப்பிடவும். சாறாகவும் அருந்தலாம்.

மூன்றாவதாக லைகோபைன் என்ற ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்த தக்காளி. இதைச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. நுரையீரல் புற்றுநோய், பிராஸ்டேட் சுரப்பி, மார்பகம் போன்ற உறுப்புகளில் புற்று நோய் தாக்காமல் இந்த லைகோபென் பாதுகாக்கிறது. 3 முதல் 6 தக்காளிப் பழங்களை சாறாக அல்லது சாலட்டாக சேர்த்துக் கொள்ளவும். உடல் பருமனையும், அதிகப் பசியையும் தக்காளி குறைக்கிறது.

நான்காவதாக, வரமிளகாய்த் துவையல். ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி நிறைந்தது. கண்களைப் பாதுகாக்கும். பீட்டா கரோட்டீனும் தாராளமாக இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். அதிசய மருந்து சிவப்பு மிளகாய். காரக்குழம்பும் நல்லதே.

ஐந்தாவதாக இஞ்சி சேர்த்த தேங்காய் சட்னி, சமையல், சுக்கு தேநீர் என்று இஞ்சியையும் சேர்த்து வரவும். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல் என்ற கூட்டுப்பொருள் இரத்தக் கொதிப்பு, ஒற்றைத் தலைவலி, மூட்டு வலி போன்றவற்றைக் குணமாக்குவதுடன் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவுகிறது. தாம்பத்யத்தில் ஆர்வம், மலட்டுத் தன்மையைக் குணமாக்குதல், மூளையை விழிப்புடன் வைத்திருத்தல் இஞ்சியின் சிறப்பம்சங்களாகும்.

ஆறாவதாக, பசலைக் கீரை உட்பட அடர்நிறத்தில் உள்ள தண்டுக்கீரை, புதினாக்கீரை போன்றவற்றை உணவில் சேர்க்கவும். ஒரு நாள்விட்டு ஒரு நாள் அவித்த பசலைக் கீரையை உணவில் சேர்த்து வரவும். இதனால் வயதாக வயதாக பார்வை மங்குதல், காட்ராக்ட் போன்ற பிரச்னைகளை பசலைக் கீரையில் உள்ள லுட்டைன் (LUTIEN) பாதுகாத்து பார்வைத் திறனை அதிகரிக்கிறது. மேலும் ஆன்ட்டிஆக்ஸிடென்ட்டுகளான வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவற்றுடன் ஃபோலேட்டும் நிரம்பி வழிகிறது. உறுதியான எலும்பிற்குத் தேவையான கால்சியம், தசை அணுக்களின் ஆரோக்கியத்திற்கான மக்னீசியமும் இந்தக் கீரையில் நிரம்பி வழிகின்றன. பருப்பு, தேங்காய் போன்றவை சேர்த்து பசலைக் கீரையை சமைக்கவும்.

மேற்கண்ட ஆறு உணவுகளில் ஐந்து உணவுகளாவது உணவில் சேர்த்து வந்தால் உங்களை அறியாமலேயே நோய்களிலிருந்தும் முதுமை அடைவதில் இருந்தும் மீண்டு நீண்ட நாள் வாழ்வீர்கள். மற்றவற்றைத் தவிர்த்தாலும் மாதுளம் பழம், பரங்கிவிதைகள், தக்காளி இந்த மூன்றையாவது தினமும் தவறவிடாது சேர்த்து வாருங்கள். வாழ்நாள் முழுநலத்துடனேயே இதனால் அதிகரிக்கும்.

NAGARAJI B

ற்போது எங்கே பார்த்தாலும் விவாகரத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மாதம் ரூ.70 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் வரை சம்பளம் பெறுகிறவர்களும் நம் திருமண வாழ்க்கை போதும் என்று 30 வயதிற்குள்ளேயே பிரிந்து வாழத் தீர்மானித்துவிடுகின்றனர்.

இப்படிப்பட்டவர்கள் காதல், தாம்பத்தியம், அன்பு, பாசம் போன்றவை குறையாமலிருக்கவும், பிரச்னைகள் படை எடுத்து வந்து தாக்கும்போது ஒற்றுமையாக இருந்து சமாளித்து வாழவும் சில உணவுகள் நேரடியாக உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த உணவுகளைப் புதுமணத் தம்பதிகளும், குடும்ப வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டவர்களும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இனிமையான அன்பான வாழ்க்கை தொடரும்.

இனி, அந்த உணவுகள் :
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இது, உங்களை மனஉறுதி மிக்கவராகவும், தாம்பத்திய வாழ்வில் ஆர்வம் உடையவராகவும் தயார்ப்படுத்தும். ஸ்ட்ராபெர்ரியில் பழச்சர்க்கரையும் அதிகம். இது, மூளையைப் புதுப்பித்து இனிமையான மனத்தையும் வழங்குகின்றது.

அடுத்து, ஏலக்காய். இது நறுமணச் சுவையுள்ள மருந்துப்பொருள். வெற்றிலைப் பாக்குடன் ஏலக்காயும் சேர்த்தும் சாப்பிட்டால் தம்பதிகளுக்கு காதல் உணர்வு பொங்கி எழும்.

உடல் முழுவதும் இரத்தம் தங்கு தடையின்றி பாய்ந்து கொண்டிருந்தால்தான் குடும்பத்தில் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற உணர்வு உச்சத்தில் இருக்கும். தம்பதிகள் விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். நாம் அன்புடன் நடந்துகொண்டால் நமது துணைவி/துணைவர் அன்புடன் நம்மை நேசிப்பார் என்பதை எளிதில் உணர வைக்கிறது வெள்ளைப்பூண்டு. காதல் மணத்தம்பதிகளுக்கு இரண்டு வருடங்களிலேயே வாழ்வு வெறுத்துப் போகாமலிருக்க தினமும் வெள்ளைப்பூண்டில் பத்துப் பற்களை எண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வரவும். பூண்டு, இரத்தத்திற்கு வீரியம் ஊட்டி, நோய் நுண்ம நச்சுப்பொருட்களை வெளித்தள்ளுகிறது. இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்ப நிலையையும் சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள்கூட உடல் மற்றும் மனரீதியாகத் தினமும் இளமைத்துடிப்புடன் முதல்வர் மு.கருணாநிதியைப் போலக் குடும்பப் பாசத்துடன் வாழமுடியும், அன்பு குறையாமல்.

உடலில் உள்ள அதிக வெப்பத்தைக் குறைப்பதால் அஸ்பராகஸ் கீரையை வாரத்தில் இருநாட்கள் சேர்த்து வரவும். உடல், மனஆற்றலை அஸ்பராகஸ் கீரை அதிகப்படுத்துகிறது. மேலும் இதில் பொட்டாசியம், உப்பு அதிகம் இருப்பதால் இரத்தம் திரவ நிலையிலேயே இருந்து மாரடைப்பு. பக்கவாதம் வராமல் தடுக்கிறது. பிரச்னைகள் இருந்தாலும் மனதை அமைதியாக்கிக்கொண்டு மனைவி, மக்களைக் குறை சொல்லாமல் ஆற்றலுடன் வாழ இந்தக் கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்து வரவும்.

சிப்பி (ஷீஹ்ƒ‡மீக்ஷீ), பப்பாளி, பாசிப்பருப்பு போன்ற உணவுகளில் தாராளமாக உள்ள துத்தநாக உப்பு தாம்பத்தியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டமும் புதுப்பிக்கப்படுவதால் சண்டையில்லாமல் திருமண வாழ்க்கையை நடத்திச் செல்லவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் இருபாலர்களுக்கும் இந்த உணவுகளால் புதுப்பிக்கப்படுகின்றன. மதிய உணவில் பாசிப்பருப்புக் கூட்டும். நல்லெண்ணெயும் கலந்து முதலில் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இரவு, மறுநாள் காலை வரை அதிகம் பசிப்பது குறையும். ஆனால், மனமும் மூளையும் விழிப்புடன் இருந்து காரியங்களையும் உறவுகளையும் அழகாக நிர்வகித்து உங்களை அமைதியாக வாழ வைக்கும்.

இத்துடன் வாழைப்பழம், குங்குமப்பூ சர்பத், ஆலிவ் எண்ணெய், தேன் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேருங்கள். பிரச்னைகள் அதிகம் இருந்தால் இரண்டு வாழைப்பழம், ஒரு சாக்லெட் பார் என்று சாப்பிடுங்கள்.
மேற்கண்ட அனைத்து உணவுகளும் கணவன் மனைவியை மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள அனைத்து வயதுக்காரர்களையும் சண்டை சச்சரவில்லாமல் சமாதானத்துடன் வாழத் தூண்டுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

NAGARAJI B
வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலமும், நோய் எதிர்ப்புச்சக்தியை புதுப்பித்து இதயத்தைப் பாதுகாக்கும் எல்லாஜிக் அமிலமும் தாராளமாக இருக்கிறது. பலர் மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால்தான் அவர்களுக்கு எல்லாஜிக் அமிலம் தொடர்ந்து கிடைத்து இதயம் பாதுகாக்கப்படுகிறது. மூன்று வேளையும் அசைவம் சாப்பிடுகிறவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிடுவது போல், சைவ உணவுக்காரர்கள் மாதுளம் பழத்துடன் வால்நட் பருப்பையும் சாப்பிட்டுவந்தால் இதயநோயோ தொற்றுநோயோ மற்றவகை உடல் நலப்பிரச்னையின்றியோ நலமுடன் வாழலாம். வால்நட் பருப்பும், மாதுளம் பழமும் தினமும் சாப்பிடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சற்று செலவு அதிகமானாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை மருந்து மாத்திரை இன்றி இந்த இரு உணவுகளின் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம்.

சோர்வை விரட்ட...
தொடர்ந்து உடலுக்கு சக்தி தரும் உணவுகளாக ஆப்பிள், ஆரஞ்சு, சோயாபால், மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்), தயிர், வறுத்த சூரியகாந்தி விதைகள் போன்றவை இருக்கின்றன. நாள் முழுவதும் சோர்வு எட்டிப்பார்க்காமல் இருக்க ஆரஞ்சு சாறு இரண்டு வேளை, இரண்டு ஆப்பிள், ஒரு கப் தயிர், மதிய உணவில் சோயாமொச்சை போன்றவைகூடப் போதும்.

பச்சை மிளகாய் நல்லதா?
உடல் எடையை வேகமாகக் குறைக்க விரும்பினால் பச்சை மிளகாயை உணவில் தவறாமல் சேர்த்து வரவும். அதே நேரத்தில் அளவும் அதிகரிக்கக் கூடாது. பச்சை மிளகாயில் வைட்டமின் `சி' அதிகமாக இருக்கிறது. இது வேகமாக சாப்பிட்ட உணவுகளை வளர்சிதை மாற்றம் அடையச் செய்கிறது. இது மட்டுமா? கூடுதல் கலோரி இருந்தாலும் எரித்துக் கரைத்து விடுகிறது. எல்லாவற்றையும் விட இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற பசியார்வத்திற்கும் கடிவாளமிடுகிறது. மேலும் பச்சைமிளகாய் உறைத்ததும் மூளையில் டாப்பமைன், எபிநெப்ரைன், நார்பைன்டரின் போன்றவை உடனே சுரந்து எழுச்சியுடன் வாழ நம்மைக் கட்டுப்படுத்தும். கவலையையும் முற்றிலும் குறைக்கும். இதனால் தேங்காய் சட்னியில் பச்சை மிளகாயை நன்கு சேருங்கள். சமையலிலும் சேருங்கள்.

சுறு சுறுப்புடன் வாழ...
எலுமிச்சம் பழம் ஒன்றை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்திருங்கள். அதை எடுத்து முகர்ந்து பார்த்தால் உடனே எச்சரிக்கை உணர்வும், சுறுசுறுப்பும் உடனே புதுப்பிக்கப்பட்டுவிடும். எலுமிச்சம் பழ வாசனைக்கு மட்டுமே இத்தகைய தனிச்சிறப்பு உண்டு. மேலும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க பட்டாணி, மொச்சை, கொண்டைக்கடலை, அசைவம் எனில் மீன், கோழிக்கறி, கொழுப்பு நீக்கிய தயிர், போன்றவை உணவில் இடம் பெற வேண்டும். பழங்களுள் ஆப்பிள், திராட்சை, பீச், அன்னாசி போன்றவை உடலுக்கும் மனதிற்கும் உடனடியாக சக்தியை ஊட்டுகின்றன. காய்கறிகளில் ப்ராக்கோலி இந்த வகையில் முதலிடத்தில் இருக்கிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்க...
கையில் குறிப்பு ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லா வேலைகளையும் வரிசையாகப் பார்த்து முடிக்கவும், பள்ளி, கல்லூரித் தேர்வுகளை பதட்டமின்றி எழுதி முடிக்கவும் மூளையில் உள்ள சோலினெர்ஜிக் (சிபிளிலிமிழிணிஸிநிமிசி) என்ற நரம்புகளைப் புதுப்பிக்க வேண்டும். ஒரு முட்டையை ஆம்லட்டாகச் சாப்பிட்டால் இந்த நரம்புகளுக்கு முட்டையின் மஞ்சள் கருவில் இருந்து கோலைன் (சிபிளிலிமிழிணி) என்ற சத்து கிடைத்து ஞாபக சக்தி உடனடியாகப் புதுப்பிக்கப்படுகிறது. ப்ரூன் (ஜீக்ஷீ–ஸீமீ) பழமும், ஓட்ஸ் மீல் ஒரு டம்ளரும் (கஞ்சியாக) அருந்தலாம். முதுமை அடையும்போது ஏற்படும் ஞாபகசக்தி குறையை தினை, அவரைக்காய், ஆப்பிள், வேர்க்கடலை, பீட்ரூட், நண்டு, மீன் போன்றவை நீக்குகின்றன. ஓட்ஸ் கஞ்சியும், முட்டையும் சாப்பிடுகிறவர்கள் மேற்கண்டவற்றையும் உணவில் சேர்த்து வரவும். சாவியை எங்கேயாவது வைத்துவிட்டுத் தேடுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தவும். ஒன்று அல்லது இரண்டு காரட்டுகளை தோல் சீவாமல் அழுக்குப் போக நன்கு கழுவி ...விட்டு மிக்ஸியில் அரைக்கவும். பிறகு கொஞ்சம் மோர் சேர்த்து இந்த காரட் சாற்றை அருந்தி வரவும். பார்வைத் திறனையும் போனஸாக இந்தச் சாறு பாதுகாக்கும்.

தாவர வகை உணவுகளி-லிருந்து புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பை தாராளமாகப் பெறலாம். கிட்னி, பீன்ஸ், ஈரல், கோழிக்கறி, முட்டை, மீன், தானியங்கள், விதைகள், தக்காளி, பூண்டு, வெங்காயம், செலரிக்கீரை ஆகியவற்றில் செலினியம் உப்பு தாராளமாக இருக்கிறது.

இயன்றபோதெல்லாம் காளான், ப்ராக்கோலி உணவில் சேர்த்தாலும் செலினியம் உப்பு உடலில் நன்கு சேர்ந்துவிடும்.

இந்த உப்பு தாராளமாக இருந்-தால் தோல், முடி, கண்கள் போன்-றவை ஆரோக்கியமாகத் திகழும். செலினியம் ஆண்-கள் மலட்டுத்தன்மை அடையாமல் பாதுகாக்கிறது. ஆண்மையை அதிகரிக்-கிறது. மூட்டு வலி ஏற்படாமல் பாது-காக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் தைராய்டு சுரப்பியில் தேவையான இயக்குநீர் நன்கு சுரக்கவும் வழி செய்கிறது. எனவே, குறைந்த பட்சம் தினமும் வெள்ளைப் பூண்டும், வெங்காய தயிர்ப்பச்சடியும் உணவில் நன்கு சேருமாறு பார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் செலினியம் உப்பு உடலுக்கு நன்கு கிடைத்துவிடும்.

தினமும் மாதுளம் பழச்சாறு!
ஒருவருடம் தினமும் ஒரு டம்ளர் மாதுளம் பழச்சாறு அல்லது ஒரு பெரிய மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு முழுமையாகக் கட்டுப்-படும். கொலஸ்ட்ரலும் கரைக்கப்படும் என அமெரிக்கா-வில் பரி-சோதனைச்-சாலையில் ஒரு வருடம் மாதுளம்-பழச்சாறு அருந்தி வந்தவர்களை தொடர்ந்து கண்-காணித்து வந்ததில் உறுதி செய்யப்-பட்டுள்ளது. பொறாமைக் குணத்தை ஒழிப்பதில் மாதுளை முதலிடத்தில் இருக்கிறது.

பீட்ரூட் சாப்பிட மறவாதீர்கள்:
பீட்ரூட் கிழங்கு சாப்பிட மறவா-தீர்-கள். காரணம், இதில் ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்றவை உள்ளன. மேலும் பீட்ரூட் கீரையில் மிகச் சிறந்த அளவில் கால்சியம், பீட்டா கரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை உள்ளன. சமைக்கப்பட்ட பீட்ரூட் கிழங்-கில் ஃபோலேட் அதிக அளவாக உயர்ந்து அதிக இரத்த அழுத்தம், ஞாபகமறதி நோயான அல்ஜீமர்ஸ் போன்றவை வரா-மலும் முன்கூட்டியே தடுத்தும் விடுகிறது.

ஜெர்மனியில் பீட்ரூட் சாறு எல்லா இடங்களிலும் விற்பனை செய்யப்-படுகிறது. லெட்டூஸ், பசலைக்கீரை போன்றவற்றில் உள்ளதைவிட அதிக-மாக பீட்ரூட் சாறில் மட்டுமே நைட்-ரேட் உப்பு அதிகம் உள்ளது. இது நைட்ரிக் ஆக்ஸை-டாக உடலில் மாறி இரத்தக் குழாய்களின் இறுக்கத்தைத் தளர்த்தி-யும், இரத்தத்தைக் கட்டிப்படாமல் காப்பாற்றி இதன்மூலம் அதிக அளவு ஆக்ஸிஜனை உடலுக்கு வழங்குகிறது. இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்க பீட்ரூட், பசலைக்கீரை, லெட்டூஸ் நன்கு உணவில் சேர்த்து வாருங்கள்.

இனிப்புவகை உணவுகள் உங்களை புத்திக்கூர்மையுள்ள மனிதராககூட உறுதியாக உயர்த்தும். எனவே, உங்களுக்குப் பிடித்தமான இனிப்பு வகையை அவ்வப்போது அளவாகச் சாப்பிட வேண்டும். மிகவும் சிறப்பு, சர்க்கரைப் பொங்கல், ரவையில் தயாரிக்கப்படும் உக்காரை (உக்ரா) போன்றவை உடலுக்கும் கெடுதல் செய்யாமல் மூளையை புதுப்பித்து உற்சாகப்படுத்தும்.

முந்திரிப் பருப்பு நல்லதா?

மற்ற கொட்டை வகையை-விட கொழுத்த சரீரம், சிறு-நீரகக்கல் முதலியவற்றை முறியடிப்பதில் முந்திரிப் பருப்பு முதலிடத்தில் இருக்கிறது. நெய் உட்பட எதிலும் வறுக்காமல் அப்படியே முந்திரிப் பருப்பை சாப்பிடுவதே முக்கியம்.

முந்திரிப் பருப்பில், மகனீசியம் உப்பு தாராளமாக இருப்பதால் எலும்பு மண்டலமும், பற்களும் உறுதியாக, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள செம்பு, சக்தியை உடலுக்குத் தரு-கிறது. மேலும் ஆன்ட்டிஆக்ஸி-டென்ட்டு-களை உடல் நன்கு பயன்-படுத்திக் கொள்ள பாதுகாப்பாக இருந்து இந்த செம்பு சக்தி உதவு-கிறது.

இதயம் தொடர்பான அனைத்-துப் பிரச்னைகளையும், கொழுத்த சரீரத்தையும், நீரிழிவையும் குறைப்-பதில், குணமாக்குவதில் முதலிடத்-தில் இருக்கிறது முந்திரிப்பருப்பு. இதில் தாராளமாக உள்ள இரும்புச் சத்து இரத்த அணுக்கள் சரியாகச் செயல்படவும், செரிமானப் பொருள் வகை சிறப்பாகச் செயல்படவும் ஊக்குவிக்கிறது. அளவுடன், தவற-விடாமல் தினமும் சாப்பிட வேண்-டிய அரிய பருப்பு, முந்திரி. வறுத்து சாப்பிட்டால் உடல் பரும-னாகும்.

NAGARAJI B

ன்றைய இந்தியர்கள் சராசரியாக 65 ஆண்டுகள் வாழ்கின்றனர். இனிமேல் இந்தியர்களின் சராசரி வயது 100 ஆக இருக்கும். இதே நேரத்தில் முதுமைத் தோற்றத்தால் தளர்ச்சியடையாமல், நோய்கள் எதுவுமின்றி அறிவுக் கூர்மையுடனே தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம். கவிஞர் வைரமுத்து, `நான் 150 ஆண்டுகள் வரை வாழ்வேன். இதற்கு ஏற்ப என் உடல்நலனைப் பாதுகாத்து வருகிறேன்' என்று ஒருமுறை சொன்னார். இது, 2000 ஆண்டிற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் சாத்தியமே!

ஜார்ஜ் எஸ்.ரூத் என்ற அமெரிக்கரே இந்த உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளார். இவர் அமெரிக்க தேசிய முதுமையியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

அதிக ஆண்டுகள் வாழ விரும்பினால் நீங்கள் இப்போதும் சாப்பிடும் உணவில் 25 முதல் 40 சதவிகிதமே உண்ண வேண்டும். 1800 கலோரி என்றால் இதில் 1350 கலோரியைத் தவிர்க்க வேண்டும். இதனால் விரைந்து ஒல்லியாக மாறுவீர்கள். உணவைக் குறைவாக எடுத்துக் கொள்வதால் முதுமை அடைவது தாமதப்படுத்தப்படுகிறது.

எலிகளுக்கு குறைந்த அளவே கலோரி உணவு கொடுக்கப்பட்டபோது, சில எலிகளுக்கு மட்டுமே குறைந்த அளவு புற்றுநோய் அபாய அறிகுறி தெரிந்தது. ஆனால் இந்த எலிகள் குண்டாகவோ, நீரிழிவு நோய் அபாயமோ என எதுவும் இன்றி ஆரோக்கியமாக இருந்தன. இதே முறைதான் மனிதர்களுக்கும்!

கூடுதலாகச் சாப்பிட்டால் உடல் பருமனாகி பெருங்குடல் புற்று நோயும், நீரிழிவு நோயும் கண்டிப்பாக உருவாகும். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும் உண்டாகும் என்கிறார் இன்னொரு அமெரிக்க ஆராய்ச்சியாளரான எரிக் ரவ்ஸியன் என்பவர்.

நீங்கள் இப்போது உண்பதில் 25 முதல் 40 சதவீதமே தினமும் உண்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதற்காக நீங்கள் சாப்பிடும் உணவு மிகவும் சத்துள்ள உணவுகளாக இருக்க வேண்டும் என்கிறார் இவர்.

சர்க்கரையும், கொழுப்பும் குறைவாக உள்ள சத்துணவு தேவை. குறிப்பாக, மதிய உணவில் அல்லது காலை உணவில் இரண்டு ரொட்டி (சப்பாத்தி) அல்லது ஒன்றரை கோப்பை கைக் குத்தல் அரிசி, ஒரு கப் பாசிப் பருப்பு கூட்டு அல்லது காராமணி சுண்டல், ஆவியில் வேக வைக்கப்பட்ட காய்கறிகள், கீரை சாலட், பழசாலட், தயிர் ஏதேனும் ஒரு பழம். இதுவே ஒரு நாளைக்கான உணவு. இரண்டு வேளை இதே முறையில் சாப்பிட்டு வரவேண்டும்.

அசைவ உணவுக்காரர்கள் அவித்த காய்கறிகளுடன் முப்பது கிராம் மட்டுமே கோழி அல்லது மீனை வறுக்காமல் குழம்பு வடிவில் சாப்பிட வேண்டும். ஆனால், பாசிப்பருப்பு, சுண்டல், தயிர் போன்றவற்றில் தலா அரை கோப்பை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பவர்கள் இதே முறையில் மிகவும் குறைவாகச் சாப்பிட்டு வந்தால் போதும். நோய்களுக்காக மருந்து மாத்திரை சாப்பிடுகிறவர்கள் உங்கள் மருத்துவர் மற்றும் சத்துணவு நிபுணர் உதவியுடன் சாப்பிடும் அளவைக் குறைக்கலாம்.

கலோரி அளவைக் கணக்கிட்டுச் சாப்பிடுவதால் பசி அதிகரிக்குமே. இதைத் தவிர்க்கவும் ஒரு வழி சொல்கின்றனர். ஒருவேளை மட்டும் திராட்சைச் சாறு ஒரு டம்ளர் அருந்தலாம். சர்க்கரை சேர்க்காமல் மிக்ஸியில் சாறாக்கி அருந்த வேண்டும். இதனால் பசியின்மை இன்றியே சக்தியுடன் வாழலாம்.

திருமணம் செய்து கொள்வது, பால்ய நண்பர்களின் உறவைப் புதுப்பித்து வருவது, நாய் ஒன்றைச் செல்லமாக வளர்த்து வருவது, இவை எல்லாம் மன இறுக்கம், இரத்தக் கொதிப்பு முதலியவற்றைக் குறைக்கின்றன. மாரடைப்பு வந்து மீண்டவர்கள் கூடுதலாக ஏழு ஆண்டுகள் வாழவும் உதவி செய்கின்றன.

நோயாளியாக இருந்தாலும் நீண்ட நாள் வாழ இவற்றுடன் தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி தேவை. காலை, மதியம், மாலை என பத்து பத்து நிமிடங்கள் இவற்றைச் செய்து வந்தால் போதும்.

அதிக ஆண்டுகள் உறுதியாக, நலமுடன், அறிவுக் கூர்மையுடன் வாழ முதல் கட்டமாக உணவைக் குறைத்து உண்ண ஆரம்பித்தால் போதும். மற்றவை தானாக வந்துவிடும்.

NAGARAJI B
ருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க தினமும் ஐந்தாறு பூண்டுப் பற்களை நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் போதும். இதயநோய், ஆஸ்துமா என எதுவும் எட்டிப் பார்க்காது. இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாகவே உணவில் வெள்ளைப்பூண்டு சேர்த்து வருகிறார்கள். 2008ஆம் ஆண்டு பிர்மிங்ஹாமிலுள்ள அலபாமா பல்கலைக்கழக நிபுணர்கள் நோய் நுண்மங்கள், நோயைப் பரப்பும் காளான்கள் ஆகியவை உடலுக்குள் செல்லாதபடி தடுக்கும் சக்தி வெள்ளைப்பூண்டிற்கு உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இதயம் மிக வலுவாக இருந்து இயங்கும் என்பதும் இவர்களது கருத்தாகும்.

டேவிட் கிராஸ் என்ற மருத்துவர் தலைமையில் அமைந்த அமெரிக்க ஆராய்ச்சிக் குழுவினர் வெள்ளைப்பூண்டு நுட்பமான மதிப்புமிக்க உயர்ந்த டானிக் என கண்டுபிடித்துள்ளனர். இது உடலுக்குள்ளேயே குறிப்பிட்ட பொருளைத் தயாரித்து இரத்தக்குழாய்கள் குறுகிவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இரத்த உறைவு ஏற்படாமல் தடுக்கிறது.

இதனால் இருதயம் சிறப்பாக தொடர்ந்து இயங்குகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

பூண்டில் ஒருவித நெடி நிலவக் காரணம் அதில் உள்ள தாவரக் கந்தகம்தான். இந்தப் பொருளுக்கு அலிசின் என்று பெயர். பூண்டு நாற்றம் பலருக்குப் பிடிக்காது.

ஆனால், இந்த அலிசின் என்ற பொருள் இந்த ஓட்டம் தடைபடாமல், இரத்தம் உறையாமல், இரத்தக்குழாய்களை வலுவாக வைக்கிறது. கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது. எனவே பூண்டை இதன் வாடைக்காகத் தவிர்ப்பது நல்லது அல்ல.

அலபாமா மாநில மருத்துவக் கழக ஆராய்ச்சியின் புதிய முடிவில் அலிசினுடன் பூண்டில் உள்ள இன்னொரு இரசாயணம் தூதுவராகச் சேர்ந்து வளர்சிதை மாற்றம் அடைகிறது. இந்தப் பொருளும் இரத்தக்குழாயின் துப்புரவுத் தொழிலாளிபோல் வேலை செய்கிறது. இதனால் இருதயத்திற்கும் சீராக இரத்தம் செல்கிறது.

அலிசின் பொருள் பிரிகிறது. அதில் இருந்து அலிசின் இரத்த சிவப்பு அணுக்களுடன் நன்கு இணைந்து ஹைட்ரஜன் சல்பைடாக பி2ஷி மாறுகிறது. இந்த ஹைட்ரஜன் சல்பைடு இரத்தக்குழாய் செல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நல்ல பாதுகாவலனாகும். இது குறைந்த அளவே சுரந்தாலும் இரத்தக் குழாய்களில் உள்ள அனைத்து செல்களிலும் இந்த இரசாயனம் சங்கமித்துவிடுகிறது.

இரசாயன மருந்துகள் மூலம், உடலில் சிவப்பு அணுக்களில் ஹைட்ரஜன் சல்பைடு தாமதமாகத்தான் உருவாகுகிறது. ஆனால், பூண்டைச் சாப்பிட்ட உடனேயே ஹைட்ரஜன் சல்பைடு இரத்தத்தில் உருவாவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள் இதனை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

இரத்த செல்களின் மெல்லிய தோல், அதாவது சவ்வுப் பகுதி சீராக இருக்க ஹைட்ரஜன் சல்பைடு மிகவும் முக்கியம்.

உணவில் பூண்டு சேர்த்து வருபவர்களுக்கு இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராக இருப்பதால் இரத்த அழுத்தம் (இரத்தக் கொதிப்பு) வரும் வாய்ப்பும் குறைகிறது. மேலும் நுரையீரல்களுக்கும் ஆக்ஸிஜன் நன்கு கிடைப்பதால் ஆஸ்துமா நோய் உறுதியாகத் தடுக்கப்படுகிறது.

இரத்தஓட்டகம் தடையின்றிச் சீராக இருப்பதால் முக்கியமான எல்லா உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் அதிகமாகவே கிடைத்து ஆரோக்கியமாகவே தொடர்ந்து வாழலாம்.

பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் மருந்துக்கடைகளில் கார்லிக் பூண்டு மாத்திரை (பியர்ல்ஸ்) தாருங்கள் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ஆனால் இதன் விலை அதிகம். பூண்டைத் தள்ளுபடி செய்பவர்கள் பூண்டை முடிந்தவரை சேர்த்துச் சமைத்து நன்கு நலம் பெறலாம்.

NAGARAJI

ருவருப்பான இடங்களில் தயாராகும் உணவுகளே சீதளபேதி ஏற்பட முக்கியக் காரணம். குழந்தைகளை மட்டுமல்ல, எல்லா வயதுக்காரர்களையும் இது தாக்குகிறது. சாலையோரக் கடைகளில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும்.

சுத்தமான இடத்தில் வசிப்பதும், சுத்தமாகச் சமைத்துச் சாப்பிடுவதும் நம் குடலைப் பாதுகாக்க உதவும்.

சீதளபேதிக்கான நோய் நுண்மங்கள் பெருங்குடலில் தோன்றுகின்றன. அசைவ உணவில் உள்ள புரதம் வறுவல்வகை, மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், ஜீரணமாக இயலாத அளவிற்கு அதிகமாக கொழுப்பு உணவுகள் உண்பது போன்றவற்றால் வயிற்று அலைச்சல் ஏற்படுகிறது.

இதனால் மலத்தின் மூலம் இரத்தமும் சலமும் வெளியேறுகின்றன. உடலில் சோர்வும் ஏற்படுகிறது.

சீதளபேதி ஆனவுடனேயே கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு டம்ளர் கெட்டியான மோரில் கலந்து அருந்த வேண்டும்.

குடலில் உள்ள நோய் நுண்மங்களை அழிப்பதில் மஞ்சள் தூளிற்குப் பெரும்பங்குண்டு. எனவே, மஞ்சள் தூள் கலந்த மோரை தினமும் 4, 5 வேளையாவது அருந்தவும்.

கெட்டியான மோர் அல்லது தயிர் சேர்த்து வந்தால் தயிரில் குடலைச் சுத்தம் செய்யும் லாக்டோபாசில்ஸ் அசிடோபிலஸ், மற்றும் ஸ்டிரப்டோகோகஸ்லாட்டிஸ் என்னும் இரு நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன. இத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் ஏஜி (கிநி) என்ற பொருளும் தயிரில் உள்ளது. இதனால் கெடுதல் செய்யும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.

கைக் குழந்தைகளின் சீதளபேதியைக் கட்டுப்படுத்த உடனடியாக மருத்துவரை நாடவும்.

மற்ற வயதுக் குழந்தைகளுக்கு ஆப்பிள் துண்டுகளைக் கொடுக்கவும். ஒரு நாளில் மூன்று ஆப்பிள்களைத் துண்டுகளாக்கிச் சாப்பிட்டுவந்தால் சீதளபேதி கட்டுப்படுவதாக அமெரிக்க மருத்துவக் கழகம் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. டாக்டரின் மருந்துகளுடன் ஆப்பிள் பழமும் சாப்பிட்டுவரவும்.

மற்ற வயதுக்காரர்கள் உணவு மருத்துவத்தைப் பின்பற்றி விரைந்து குணம் பெறலாம். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சீதளபேதி என்றால் மருத்துவரே சிறந்த முறையில் உதவ முடியும்.

முதலில் குடல் பகுதியில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருட்களையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்ற வேண்டும். இதற்கு எளிய வழி ஆரஞ்சுச்சாறும், தண்ணீரும்தான். கெட்டியான மோர் மூன்று முறையும், ஆரஞ்சுச் சாறு மூன்று முறையும் அருந்தினால் போதும். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்தலாம். மூன்று நாட்கள் அருந்தும் ஆரஞ்சுச் சாறும் கெட்டியான மோரும் குடலை நன்கு புதுப்பித்து விடும். சீதளபேதியும் முற்றிலும் குணமாகிவிடும்.

சீதளபேதிக்குப் பிறகு பசித்தால் தயிர்சாதம், ஆப்பிள், வில்வப்பழம், பால், வாழைப்பழம் சாப்பிடலாம்.

மாதுளம் பழமும், எலுமிச்சம் பழமும் வெங்காயமும் சீதளபேதியை உடனுக்குடன் கட்டுப்படுத்தும்.

குழந்தைக்குத் தாய்ப்பாலை நன்கு கொடுத்தால் போதும். குழந்தைகள் மிகவும் வெறுக்கும் உணவை வாயில் திணித்து சாப்பிட வைத்தாலும் சீதளபேதி அபாயம் உண்டு. எனவே, இதில் கவனமாக இருக்க வேண்டும்.

சீதளபேதி குணமானாலும் மூன்று மாதங்கள் வரை வீட்டிலோ வெளியிடங்களிலோ அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.

தினமும் இருவேளை தயிர் சேர்ப்பதன் மூலம் சீதளபேதியை முற்றிலும் தவிர்க்கலாம்.


NAGARAJI B

திகமான மனக்கவலை, மனஇறுக்கத்தில் நரம்புகள் அதிகம் வேலை செய்வதால், இரைப்பைப் புண் உருவாகலாம். காபி, தேநீர், மது, சாப்பாடு என அனைத்தையும் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, உடல் பலவீனம், தூக்கமின்மை, வயிறு மந்தம், இரத்த சோகை முதலிய காரணங்களும் இரைப்பையில் புண்ணை ஏற்படுத்தி விடுகின்றன.

இரைப்பையில் அமிலம் அதிகமாகச் சுரக்கும்போது இப் புண்கள் இன்னும் மோசமடைகின்றன.

நெஞ்சுவலிக்காக ஆஸ்பிரின் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கும் இரைப்பை புண் ஏற்பட வாய்ப்புண்டு. இவர்களும் இரைப்பை புண் வராமல் இருக்க உணவு முறைகளில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

சாப்பிட்டுச் சிறிது நேரம் கழித்துத் திடீரென்று நடுவயிற்றில் சுருக்கென்று வலி எடுக்கும். சிறுகுடல் பகுதியில் புண் இருந்தால் சாப்பாட்டிற்கு முன்பாக வலி எடுக்கும்.

இப்படி வலி ஏற்பட்டாலும், வயிறு காலியாக இருக்கும்போது வலி ஏற்பட்டாலும் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவும்.
கடுமையான இரைப்பைப் புண்ணை குருணைக் கஞ்சியும், கனிந்த வாழைப்பழமும் குணப்படுத்தி விடும். கஞ்சியில் மோர் நன்கு சேர்க்கப்பட வேண்டும். நடு வயிற்றில் வலி ஏற்படும் போது இந்த முறையில் கஞ்சியும் வாழைப்பழமும் மூன்று வேளை சாப்பிடவும்.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் `யு' ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகமாகச் சுரப்பதைக் கட்டுப்படுத்தி விடுகிறது. குருணைக் கஞ்சியில் நார்ச்சத்துக் குறைவு.

இதனால் இந்தக் கஞ்சி செரிமான அமைப்பை இதமாகக் குணப்படுத்துகிறது. புண் இருக்கும் பகுதியில் சிரமம் ஏற்படாமல் தடுக்கிறது.
வயிறு காலியாக இருக்கும்போது நடுவயிற்றில் வலி ஏற்பட்டால் பசும்பாலோ அல்லது ஒரு கோப்பை தயிரோ அருந்தினால் வலி குறையும். பாதாம்பாலும், வெள்ளாட்டுப் பாலும் இரைப்பை புண்ணைக் குணப்படுத்தும் சக்தி கொண்டவை.

உணவை அதிகச் சூட்டிலோ, அல்லது அதிகமான குளிர்ச்சியிலோ சாப்பிடக்கூடாது.


மூன்றுவேளை உணவையே ஐந்து வேளையாகப் பிரித்து வைத்துக் கொண்டு சாப்பிடவேண்டும்.

இரைப்பை புண் ஆறிவிட்டது என்று மருத்துவர் உறுதி செய்யும் வரை வேகவைத்த காய்கறிகள், பழச்சாறு, பழங்கள் போன்றவற்றை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெந்தயக்கீரையும், வெந்தயப்பொடியும் இரைப்பை புண்ணை வேகமாகக் குணப்படுத்தும். காலையில் ஒரு சிட்டிகை வெந்தயப் பொடியை வாயில் போட்டு தண்ணீர் அருந்தி விழுங்கவும். மதிய உணவில் வெந்தயக்கீரை சேர்த்து வரவும். இதன் மூலம் சர்க்கரையும் கட்டுப்படும்.

உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது இதன் அவியலை ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம்.

இளநீர் இரண்டு வேளை அருந்தலாம். தேங்காய் உள்ள இளநீராக அருந்தவும். பால் நன்கு சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் பாலும், வாழைப்பழமும் சாப்பிடுகிறவர்களுக்கு இரைப்பை புண் ஏற்படுவதே இல்லை.

தினமும் இரண்டு வேளை குளிப்பதும் (குளிர்ந்த தண்ணீரில்) இரைப்பையில் அமிலம் அதிகமாகச் சுரப்பதைத் தடுக்கும்.

ஆறிய முட்டைக்கோஸ் சூப், எலுமிச்சைச்சாறு, காரட்சாறு, சாதம், வில்வப்பழம், முருங்கைக்கீரை, சாத்துக்குடி, முருங்கைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய் முதலியன இரைப்பையில் உள்ள புண்களைக் குணப்படுத்தும் வல்லமை உள்ளவை. இரைப்பையில் புண் வராமலும் தடுப்பதால் இந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்க்கவும்.

NAGARAJI B

ருத்துவ சிகிச்சையுடன் உணவு மருத்துவத்தையும் பின்பற்றினால் புற்றுநோயாளிகள் விரைந்து குணம் பெறுவார்கள்.

முதலில் கல்லீரலைப் பலப்படுத்தும் விதத்தில் வைட்டமின் சி தாராளமாக உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, பேரிக்காய், அன்னாசி போன்றவற்றை மாற்றி மாற்றிச் சாறாக அருந்தி வரவேண்டும். ஒருவாரம் பழச்சாறுகளையே அருந்தி வந்தால் கல்லீரல் பலம் பெற்றுவிடும்.

தேவைப்படின் அரிசிக் கஞ்சி அருந்தலாம், பழச்சாறு மட்டும் அருந்தும் காலத்தில்.

மூன்று வேளையும் அசைவ உணவு சாப்பிடும் மனிதர்கள் தினமம் மாதுளம் பழச்சாறு அருந்த வேண்டும். காரணம், புற்று நோய்க் கழலைகளை வளரவிடாமல் தடுக்கும் எல்லா ஜிக் அமிலம் மாதுளம் பழத்தில்தான் நிறைய உள்ளது. எனவே, தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிட முயற்சி செய்யுங்கள். குறிப்பாக ஆரோக்கியமாக உள்ளவர்களும்!
ஒரு வாரத்திற்குப் பிறகு டாக்டரின் மருந்துகளுடன் ஊட்ட உணவையும் பின்பற்றி வந்தால் புற்றுநோய் முற்றிலும் குணமாகும்.

புற்றுநோய் என்றால் என்ன?

உடலுக்குள் நம்மையுமறியாமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்து இறுதியில் உயிரைக் கேட்கிற ஒரு சதை வளர்ச்சிதான் புற்றுநோய்.

சுற்றுப்புறச் சூழ்நிலைதான் புற்றுநோய் ஏற்பட மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. தொழிற்சாலைகள் அருகில் வசிப்பவர்களுக்கும், ஊட்டக் குறைவு உள்ள உணவுவகைகளைச் சாப்பிட்டு வருகிறவர்களுக்கும் புற்றுநோய் வரும்.

குறிப்பாக இறைச்சியில் உள்ள புரதம் புற்றுநோயைத் தோற்றுவிக்கிறது. இதில் உள்ள அமோனியா புற்று நோய்க் கழலைகளை உற்சாகமாக வளரச் செய்கிறது. அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள், சோள எண்ணெய், மது அதிகமாக அருந்துதல், புகைபிடித்தல், செயற்கை நிறங்கள் சேர்த்த இனிப்பு உணவுகள் போன்றவையும் புற்று நோய்க் கழலைகளை வேகமாக வளரச் செய்கின்றன.

வெள்ளைப்பூண்டு பற்களை (6, 7 பற்கள்) நல்லெண்ணெயில் வதக்கிக் காலை உணவுடன் சாப்பிட்டு வரவும். சமையலிலும் பூண்டு சேர வேண்டும். முட்டைக்கோஸ், சோயாமொச்சை, வெங்காயம், காரட், தக்காளி, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கறிகள், பழங்கள், மீன், தேநீர், பால் போன்றவை புற்று நோய் வராமல் தடுக்கும் அரிய உணவுகளாகும்.


புற்றுநோய் வந்து விட்டால் இதை வளரவிடாமல் தடுப்பவை, வெள்ளைப் பூண்டு, மீன், நண்டு, முட்டைக் கோஸ், ப்ராக்ககோலி போன்ற உணவுகளே!
சமையலில் எண்ணெயைத் தவிர்ப்பது நல்லது.

தினமும் இரண்டு டம்ளர் ஆரஞ்சுச்சாறு அருந்தவும். அல்லது மூன்று பழங்களாவது சாப்பிடவும். புற்றுநோய்க் கழலைகளை இதில் உள்ள சத்துகள் வேருடன் அழிக்கின்றன. புற்றுநோய் இருந்தாலும் முழுவதும் குணமாகி நீண்ட நாட்கள் நலமுடன் வாழ முளைவிட்ட கோதுமை, பார்லி அரிசி, மீன், சம்பாரவை, ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி, மாதுளை, டர்னிப் கீரை, ஆரஞ்சு, பூண்டு போன்ற உணவுகள் தினமும் உணவில் சேருமாறு பார்த்துக் கொண்டால் உடலின் திசுக்களுக்கும், இணைப்பு அமைப்புகளுக்கும் செலினியம் தாது உப்பு தாராளமாகக் கிடைத்து இவை நச்சு முறிவு மருந்தாகச் செயல்பட்டு புற்றுநோய்க் கழலைகள் உருவாகாதபடி பாதுகாக்கும். வளர்ந்துள்ள கழலைகளையும் கட்டுப்படுத்தி ஆயுளை நீட்டிக்கும். ஆரோக்கியமானவர்களும் இதனால் புற்றுநோயின்றி நீண்டநாட்கள் நலமாக வாழலாம்.

NAGARAJI B

ஞ்சள் காமாலை நோய் வைரஸினால்தான் பரவுகிறது. கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பது, சுத்தமில்லாமை, சுகாதார வசதிக்குறைவு, முதலியவற்றால் இந்த நோய் வருகிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யவும், விஷப்பொருள்களை அகற்றவும் உதவும் உறுப்பு, ஈரல். இது வயிற்றின் அடியில் வலது அடி விலா எலும்புக்குக் கீழே இருக்கிறது.

இந்த ஈரலோடு தசையாலான ஒரு சிறு பை இணைக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பித்தப்பை என்று பெயர். ஈரலில் பச்சை நிறமுள்ள திரவம் சுரக்கிறது. இந்தத் திரவம் பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது.

கொழுப்புச் சத்து நிரம்பிய உணவு வகைகளைச் செரிக்க வைக்க உதவுகிறது இந்த நீர்.

இந்த நீர் அதிகமாகச் சுரந்தால் இரத்தத்தில் பித்த நீர் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக கண்களும், தோலும் மஞ்சள் நிறமாகின்றன. சிறுநீரும் மஞ்சள் நிறமாக பிரிகிறது. சில சமயங்களில் வலது அடி விலா எலும்புக்குக் கீழே வலி வருவதும் உண்டு.

இதுவே மஞ்சள் காமாலை நோய்.

கடுமையான மஞ்சள் காமாலை நோயைத் தடுத்துக் கொள்ளும் தடுப்பு ஊசியை முன்கூட்டியே எல்லா வயதுக்காரர்களும் போட்டுக் கொள்வது நல்லது.

மேற்கண்ட அறிகுறிகள் தோன்றியவுடனேயே காய்ச்சலும், பசியின்மையும் ஏற்படும். உடனடியாக அலோபதி மருத்துவத்தின் மூலம் ஓய்வில் இருந்து சிகிச்சை பெறுவதே பாதுகாப்பு. முழுமையாகக் குணம் பெற டாக்டரின் நேரடிக்கண்காணிப்பே சிறப்பானது.


இத்துடன் உணவு மருத்துவத்தைப் பின்பற்றினால் விரைந்து நலம் பெறலாம்.

கீழாநெல்லியை அரைத்துச் சாப்பிடலாம். கரிசலாங்கண்ணிக்கீரையையும் சமைத்துச் சாப்பிட வேண்டும். இக்கீரை சிறுநீர் மலம் முதலியவற்றை வழக்கமான நிறத்திற்கு உடனே மாற்றும்.

கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் திராட்சை சாறு குணப்படுத்துகிறது. 100 கிராம் திராட்சையில் 87% தண்ணீரும் பொட்டாசியம் உப்புமே உள்ளன.

இவை நீண்ட நாள்களாக இருக்கும் அஜீரணக் கோளாறுகளையும், கல்லீரல் கோளாறுகளையும் குணப்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக இரத்தத்தையும் நன்கு உற்பத்தி செய்கின்றன.

காலையில் தக்காளிப் பழச்சாறு அருந்தவும். இந்தச் சாறில் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு சிட்டிகை மிளகுத்தூளும் சேர்த்து அருந்தவேண்டும். இது கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகளை குணமாக்கும். தினமும் காலையில் ஒரு டம்ளர் தக்காளி சாறு அருந்தி வருவது குடிகாரர்களுக்கும், கொழுப்பு, இனிப்பு உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கும் நல்லது. மஞ்சள் காமாலையை முன் கூட்டியே இதன் மூலம் இவர்கள் தடுத்துக் கொள்ளலாம்.

இளநீர், ஆரஞ்சுசாறு, எலுமிச்சம் பழச்சாறு, சாத்துக்குடி, பேரிக்காய் போன்றவை கல்லீரல் சம்பந்தப்பட்ட எல்லாவிதமான நோய்களையும் குணமாக்கும். மஞ்சள் காமாலை குணமாகும் வரை மேற்கண்ட உணவுகள் தினமும் இடம் பெற வேண்டும். இளநீர் இரண்டு வேளை அவசியம் அருந்த வேண்டும்.

கரும்பை மென்று சாப்பிட வேண்டும். முட்டைக்கோஸ், சோயாமொச்சை, பச்சைப்பட்டாணி முதலியவற்றால் தயாரிக்கப்பட்ட காய்கறி சூப்பில் கல்லீரலைப் பலப்படுத்தும் வைட்டமின் கே (ரி) தாராளமாக இருக்கிறது. எனவே, இந்த சூப்பையும் ஒரு வேளை அருந்தவும். மஞ்சள் காமாலையை முன் கூட்டியே தவிர்க்க மதுவைத் தொடவே கூடாது.

காய்ச்சிய தண்ணீரையே குடிப்பது, வெளி இடங்களில் சுடுதண்ணீரே அருந்துவது, பழங்கள் காய்கறிகளை நன்கு கழுவிய பிறகே சாப்பிடுவது, சுத்தமாக இருப்பது, சமையலில் இஞ்சியைத் தவறாமல் சேர்ப்பது, கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை முதலியவற்றை வாரம் ஒரு முறை சேர்ப்பது.

இவை எல்லாம் மஞ்சள்காமாலை நோய் வராமல் தடுக்கும் பாதுகாப்பான எளிய வழிகளாகும்.

NAGARAJI B

திகமாகப் பசியும் தாகமும் இருக்கிறதா? அப்படிச் சாப்பிட்டபிறகும் மனமும் உடலும் சோர்வாக இருக்கிறதா? சிறுநீர் அடிக்கடி கழிகிறதா?

அப்படி எனில் இரத்தப்பரிசோதனை செய்யவும். 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 மில்லி கிராமிலிருந்து 120 மில்லிகிராம் வரைதான் இருக்கவேண்டும். உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து இரத்தத்தைப் பரிசோதனை செய்தால் அது 180 மில்லிகிராமைக் காட்டும். இதுவே இரத்தத்தில் இருக்கவேண்டிய சர்க்கரையின் அளவு. இந்த அளவுகள் அதிகமாக இருந்தால் இது நீரிழிவு நோய்!

கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பது குறைந்தால்தான் நீரிழிவு நோய் தோன்றுகிறது.

உணவுமுறை, உடற்பயிற்சி, கவலை இல்லாத மனநிலை ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோயிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

காய்கறிகள், பழம் (ஆப்பிள் மட்டும்) பயறு வகை, முழுத்தானிய வகை என்று மாவுச்சத்து உள்ள உணவுகள் 70 முதல் 75 சதவிகிதம் இருக்கவேண்டும். இதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் கட்டுப்பாட்டில் இருக்கும். 15 முதல் 20 சதவிகிதம் புரதம், 5 முதல் 10 சதவிகிதம் கொழுப்பு என்று இவர்கள் உணவுமுறை இருக்கவேண்டும்.

சைவ உணவுப் பழக்கத்தையே பின்பற்றினால் நீரிழிவு நோயாளிகள் நீண்ட நாள்கள் உயிர் வாழலாம். இருப்பினும் வாரம் ஒரு நாள் மீனும், கோழிக்கறியும் ருசிக்காகச் சேர்த்துக்கொள்ளலாம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் பார்த்துக்கொள்கிறது வெங்காயமும் வெள்ளைப்பூண்டும். மூன்றுவேளை உணவிலும் பூண்டு சேரட்டும். வெங்காயத் தயிர்ப்பச்சடியும் சேர்த்துக்கொள்ளவும். இவை இரண்டையும் எந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்கிறோமோ அந்த அளவு வாழ்நாளும் நீடிக்கும்.


பாகற்காய்ச் சாறு வாரத்தில் நான்கு நாட்களாவது அருந்தவும். இதில் உள்ள இன்சுலின் போன்ற ஒரு வகைப் பொருள் இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

காலையில் எழுந்ததும் ஒரு சிட்டிகை வெந்தயப் பொடியை தண்ணீருடன் விழுங்கினாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதுடன் உடல் பருமனையும் தக்காளிச்சாறும், கறிவேப்பிலைத் துவையலும் கட்டுப்படுத்துகின்றன. எனவே, இவற்றைத் தக்காளிப்பச்சடி, கறிவேப்பிலைப் பொடி என்ற வழிகளிலும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

இவர்களுக்கு இயற்கையாகவே இன்சுலின் சுரக்க மாங்கனிஸ் தாதுஉப்பு தாராளமாக உள்ள பச்சைப்பட்டாணி, காரட், மீன், சிட்ரஸ் பழங்கள், ஈரல், கீரைவகை போன்றவை உதவுகின்றன. இந்த உணவுகள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை வளர்சிதை மாற்றம் அடையச் செய்துவிடுகின்றன. மேலும், இந்த உணவுகளில் உள்ள நார்ச்சத்தும் கொழுப்பையும் கரைக்கின்றன. இந்த உணவுகளால் தசைத்திறன் சீராக இருக்கும். குழப்பமான மனநிலையும், ஞாபக சக்திக் குறைவும் ஏற்படாது. கொண்டைக்கடலை, சுண்டல், நாவல் பழம், எலுமிச்சை, அவரைக்காய், பீன்ஸ், வெள்ளரிக்காய், பால், தயிர், கேழ்வரகு, கோதுமை போன்ற உணவுகளின் மூலம் வைட்டமின் ஏ, துத்தநாகம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து கிடைப்பதால் கண்கள் பாதிப்படைவது தடுக்கப்படும். சர்க்கரையையும் உடல் நன்கு பயன்படுத்திக்கொள்ளும்.

தினமும் இருவேளைகள் குளிப்பதால் (குளிர்ந்த நீரில்) இரத்த ஓட்டம் அதிகரித்து சர்க்கரையை தசைகள் நன்கு பயன்படுத்திக்கொள்ளும். தினமும் அரைமணி நேரம் கையையும், காலையையும் நன்கு வீசி நடைப்பயிற்சி செய்யவும்.

வீட்டிலும், வீட்டுக்கு வெளியேயும் எம்.சி.ஆர். நடையன்களையே பயன்படுத்தவும். இவை, காலில் புண் வராமல் பார்த்துக்கொள்ளும்.

02.09.09 தொடர்கள்

ம்முடைய சிறுநீரகங்கள் திரவக் கழிவுகளை வடிகட்டி சிறுநீராக மாற்றி வெளியேற்றுகின்றன.

வடிகட்டும்போது கழிவுகளில் உள்ள இரசாயனப் பொருட்களும், உப்புகளும் சிறுநீரகங்களில் தங்கிவிடுகின்றன. இவையே ஒன்று சேர்ந்து கல்லாக சிறுநீர்க் குழாய்களை வந்தடைகின்றன.

அப்போது சிறுநீர் கழிக்க முடியாமல் எரிச்சல் ஏற்படுகிறது. கற்கள் பெரிதாக இருந்தால் அடி முதுகு, அடிவயிற்றில் சுரீரென்று வலி ஏற்படக்கூடும்.

சிலருக்குக் கற்கள் அமைதியாக இருந்து திடீரென்று சிறுநீர் கழிக்க முடியாமல் வேதனை தரும்.

சிறுநீர் கழிக்க எரிச்சலாக இருந்தாலும் சரி. அடிக்கடி அடி முதுகில் வலி மற்றும் விலாவில் திடீரென்று வலி ஏற்பட்டாலும் சரி, உடனே மருத்துவர் மூலம் சிகிச்சை பெறவேண்டும்.


மருத்துவச் சிகிச்சையுடன் உணவு மருத்துவத்தையும் பின்பற்றினால் சிறுநீரகக் கற்களையும், கோளாறுகளையும் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

சிறுநீரகக் கற்களை உடைத்துக் கரைத்துவிடும் சக்தி படைத்தது, ஆப்பிள் சாறு, காலையில் பழத்தை நன்கு கழுவி தோலைச் சீவாமல் கடித்தோ அல்லது சாறாகவோ அருந்தவும்.

கடுமையான வலியைக் குறைத்து கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது, திராட்சை சாறு.

மாதுளம் பழச்சாறும் கற்களைக் கரைக்கும். மாதுளம் பழ விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு அரைக்கவும். இதை வாயில் போட்டுக்கொண்டு ஒரு டம்ளர் கொள்ளு ரசமும் அருந்தி வர வேண்டும்.

வாழைப்பழத்தில் புரதம் குறைவு, மாவுச்சத்து அதிகம். இதனால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் பாதுகாப்பாக வாழலாம். தினமும் இரண்டு மூன்று வாழைப்பழங்கள் சாப்பிடவும். சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க அன்னாசிப்பழச்சாறு, கற்களும் பிரச்னைகளும் இருந்தால் ஆப்பிள், திராட்சை, மாதுளை என்று பழ உணவிற்கு முன்னுரிமை கொடுத்து சாப்பிட்டு வரவும்.

நாவல்பழம், இலங்தைப்பழம், பீச் போன்றவையும் சிறுநீரகக் கோளாறுகளையும், கற்களைக் கரைத்து வலியையும் குணமாக்கும் தன்மை கொண்டவை.

எலுமிச்சம் பழ சர்பத் சிறுநீரகங்களில் தங்கியுள்ள உப்புக்களை கரைத்து சிறுநீர் நன்கு பிரியச் செய்யும்.


சிறுநீர் கழிக்க எரிச்சலாகவும், கஷ்டமாகவும் இருந்தால் பரங்கிக்காய், மணத்தக்காளிப்பழம், வெள்ளரிக்காய் முதலியவற்றை உடனடியாக உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் சிறுநீர் வலியின்றி உடனுக்குடன் பிரியும்.

சிறுநீரகக் கற்கள் கரையும் வரை தக்காளி, பட்டாணி, அசைவ உணவு, கீரை போன்றவற்றைத் தவிர்க்கவும். காபியைக் குறைக்கவும். கீரை தேவை எனில் முள்ளங்கிக் கீரையை மட்டும் சேர்க்கவும்.

வைட்டமின் ஏ குறைந்தாலும் கற்கள் உருவாகும். எனவே காரட், சோயா மொச்சை மூலம் வைட்டமின் ஏ கிடைக்க இந்த உணவுகளையும் நன்கு சேர்க்கவும்.

இரவு உறங்கப் போகுமுன் இரண்டு மணி நேரம் முன்னதாக சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் படுக்கைக்குச் செல்லவும்.

நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் அருந்தி வரவும், தாகம் இல்லையென்றாலும்! எந்தக் கட்டத்திலும் எட்டு மணிநேரத்திற்குமேல் தண்ணீர் அருந்தாமல் இராதீர்கள். இதுவே, சிறுநீரக கற்கள் உருவாகிவிடாமல் தடுக்கும் முதல் மருந்து! அரிய மருந்தும்கூட!

NAGARAJI B

ளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறவர்களுக்கும், பெரியபெரிய துண்டுகளாகவும், கவளங்களாகவும் உணவை விழுங்குபவர்களுக்குமே செரிமானக் கோளாறுகள் வரும்.

உணவு ஜீரணிக்காமல் இருக்கும்போதே மீண்டும் மீண்டும் சாப்பிடக்கூடாது. இதனால் கழிவுகளும் வெளியேறாமல் இருந்து, வயிற்று மந்தத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

உணவு ஜீரணமாகாமல் இருந்தால், அடுத்த இருவேளையும் பட்டினியாக இருப்பது நல்லது. தக்காளிச் சாறு, ஒரு சிட்டிகை உப்பு போட்ட எலுமிச்சம்பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு, இவற்றுள் ஏதேனும் இரண்டை, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தலாம். இதனால் சாப்பிட்ட உணவுகள் ஜீரணமாகிவிடும்.


உணவு சாப்பிட்டதும் வேகமாக மூச்சு வாங்குதல், ஏப்பம், நெஞ்செரிச்சல், பசியின்மை, அதிகமாகி, காற்று வெளியேறுதல், வாய்க் கசப்பு முதலியன செரிமானக் கோளாறின் அறிகுறிகளாகும். சிலருக்கு வாந்தியும் ஏற்படுவது உண்டு.

வயிறு சரியில்லாத நிலையிலும், பசி எடுத்தால் வேக வைத்த காய்கறிகள், பழச்சாறு, மோர் போன்றவற்றையே சாப்பிட வேண்டும். உணவுப் பாதை நன்கு சுத்தமாகிவிட்டால் நன்கு பசி எடுக்கும்.


செரிமான உறுப்புகளுக்கு வலுவைத் தருவதால் காலையில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்த எலுமிச்சம் பழச் சாறில், ஒருடம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்தவும். இல்லையெனில் அன்னாசிப்பழச்சாறு அருந்தலாம். இரண்டில் எதை அருந்தினாலும் ஒரு மணி நேரம் கழித்தே காபி, தேநீர் அருந்துபவர்கள் அருந்த வேண்டும்.

செரிமானக் கோளாறு உள்ளவர்கள் குறைவாகவே சாப்பிடவேண்டும். நன்றாக மென்றபிறகே அடுத்தடுத்து ஒவ்வொரு கவளமாக எடுத்துச் சாப்பிடலாம்.

மாவுச் சத்து உள்ள உணவுகள் உடனே செரிமானமாக வேண்டுமா? சம்பா ரவை முளை விட்ட கோதுமை, பிஸ்தா பருப்பு, பால் போன்ற உணவுகள் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உடனே ஜீரணிக்க வைக்கிறது. இட்லி, தோசையுடன் சட்னி, சாம்பார் நல்லதே!

பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு, பப்பாளி, உலர் திராட்சை (கிஸ்மிஸ் பழம்), ஈரல், முட்டை, பீட்ரூட், கீரை போன்றவை மலச் சிக்கலை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்கின்றன. நாம் ஏற்கெனவே சாப்பிட்ட உணவுகளின் கழிவுகள் வெளியேறாமல் இருந்தால் இந்த உணவுகள் அவற்றை வெளியேற்றி விடுகின்றன. இதற்கு ஓர் எளிய வழி : உலர் திராட்சை, ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் ஆகியவற்றுள் ஏதேனும் இரண்டு பழங்கள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும்.

மூன்று வேளையும் அசைவம் சாப்பிடும் மனிதர்கள், பார்லி கஞ்சி ஓரிரு டம்ளர் அருந்தவும். தரமான புரத உணவான மொச்சையையும், புரதம் நிறைந்த அசைவ உணவுகளையும் பார்லி கஞ்சி, கொண்டைக் கடலை சுண்டல், கீரை வகை போன்றவை உடனே ஜீரணிக்க வைத்துவிடும்.

இரண்டு நாட்களாகப் பசிக்கவே இல்லை. சாப்பிட்டது அப்படியே வயிற்றில் இருக்கிறது என்பவர்கள், அடுத்த மூன்று வேளையும் நன்கு மோர் சேர்த்த ராகிக் கஞ்சி அருந்தினால் போதும். உணவுப் பாதை சுத்தமாகிவிடும்.

கடலைப் பருப்பு, தேங்காய் போன்றவை சேர்த்து பச்சடி, பொரியல் செய்தால், இவை ஜீரணமாகத் தேவையான என்சைம்களைத் தந்துவிடும். செரிமானக் கோளாறுகளை மிக எளிதாக ஒரு நாள் உண்ணாவிரதத்தின் மூலம் குணமாக்கிவிடலாம். இதற்குப் பிறகும் செரிமானக் கோளாறுகள் வராமல் இருக்க அளவான உணவையும், பழங்கைளயும் பத்து முறையாவது மென்ற பிறகே உள்ளே விழுங்கவும். இதனால் குறைவாகவும் உண்ணலாம். நெஞ்செரிச்சலும், அதிகமாகி காற்றுப்பிரிதலும் இருந்தால் மேற்கண்ட முறையில் குறைவான உணவை நன்கு மென்று சாப்பிட்டு வருவதே செரிமானக் கோளாறுகள் வராமல் தடுத்துக் காப்பாற்றும். மேலும் நெஞ்செரிச்சலும் குணமாகும். காற்றுப் பிரிதலும் அடிக்கடி ஏற்படாது.

NAGARAJI B
டலுக்கு ஏற்காத உணவுகளும், ஆரோக்கியமற்ற உணவுகளும் வயிற்றுப்போக்கில்தான் முடியும்.

மாவுப் பொருள்கள் சரியாக ஜீரணமாகததால் வரும் வயிற்று உப்புசம், குடல்பகுதி கெட்டுப் போயிருத்தல், அடிக்கடி பேதி மாத்திரை சாப்பிடுவது, ஆண்டிபயாட்டிக் மருந்துகள் அடிக்கடி சாப்பிடுவது போன்றவையும் வயிற்றுப்போக்கை, பேதியை உண்டாக்கும்.

தண்ணீர், காற்று, உணவுப்பொருள்கள் ஆகியவற்றில் உள்ள கிருமிகள், ஒட்டுண்ணிகள் உடலுக்குள் சென்றாலும் வயிற்றுப்போக்கு உண்டாகும்.

பால், சில குறிப்பிட்ட பழச்சாறு, காபி போன்றவையும் பேதியை அதிகரிக்கும்.

காய்கறி சூப், முழுத் தானியங்கள், தயிர் போன்றவை பேதியை, வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும்.

வயிற்றுப்போக்கு குணமாகும் வரை தேநீர், காபி, அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு போன்றவற்றைத் தவிர்க்கவும். வெந்நீர் மட்டும் அருந்தி ஓரிரு வேளைகள் உண்ணாவிரதம் இருப்பது நல்லது.

வேதனை அதிகம் இருப்பின் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். குறிப்பாக கைக்குழந்தைகளுக்கு மருந்தும், உணவும் மருத்துவரின் ஆலோசனைப்படியே தரப்பட வேண்டும்.

இரண்டு நாள்கள் வெந்நீர் மட்டும் அருந்தி வந்தால் குடலும் உணவுக்குழாய் பகுதியும் நன்கு முழு ஓய்வு எடுத்துக் கொள்ளும்.

வயிற்றுப்போக்கு உடனே குறைய ஆப்பிள் துண்டுகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என சாப்பிடலாம். பெரும்பாலும் நான்கு முறை ஆப்பிள் துண்டுகளைச் சாப்பிட்டாலேயே பேதி குணமாகிவிடும். பீட்ரூட் சூப் சாப்பிடலாம். அன்னாசிப்பழம், வில்வப்பழம் போன்றவையும் பேதியை உடனே குணமாக்கும். இவற்றைச் சாறாக அருந்தினால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவதே மிக முக்கியம்.

வெந்நீர் மருத்துவம், பழச்சாறு மருத்துவம், அடுத்து அரிசிக்கஞ்சி, சோளக்கஞ்சி, கோதுமைக்கஞ்சி போன்றவற்றையும் உணவாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. வெந்நீர் மற்றும் பழ மருத்துவம் பின்பற்றும் வேளைகளில் பசித்தாலோ அல்லது பேதி இருந்தாலோ அரிசிக்கஞ்சியும், கோதுமைக்கஞ்சியும் ஒரிரு வேளை அருந்தலாம்.

மென்பானம் அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கு குணமாகும்வரை பாலையும் தவிர்க்க வேண்டும்.

காரட், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவை வயிற்றுப்போக்கின்போது நன்கு சாப்பிட வேண்டிய உணவுகள்.

முதல் முறை வயிற்றுப்போக்கு ஆனதுமே அரிசிக்கஞ்சி சாப்பிட ஆரம்பித்தால் போதும். மூன்று வேளை சாப்பிடும் இந்த அரிசிக்கஞ்சியால் பேதி உடனே குணமாகிவிடும்.

இத்துடன் அரை தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தவும். ஒரு நாள் மட்டும் மூன்று வேளை வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு இரண்டாவது வேளை சாப்பிட்டதுமே கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

கைக்குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதே பேதியைக் கட்டுப்படுத்தும்.

பேதி குணமாகி ஒரு வாரம் கழித்தே உங்கள் உணவில் மிளகு சேரட்டும். மிளகு சேர்த்த உணவுகள் பேதியை அதிகரிப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வயிற்றுப்போக்கை முன் கூட்டியே தவிர்க்க சமையலில் வெள்ளைப்பூண்டு, மஞ்சள், இஞ்சி, முதலியவற்றைத் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு வேளை கொழுப்பு நீக்கிய தயிர் தலா ஒரு கோப்பை வீதம் சாப்பிடவும். எப்போதும் சுத்தமான உணவுகளையே சாப்பிடவும். ஈமொய்த்த உணவுப்பொருள்களைக் குழந்தைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் அன்னாசிப்பழச்சாறோ, ஆப்பிள் பழச்சாறோ, அருந்தி வருவதும் வயிற்றுப்போக்கு வராமல் முன் கூட்டியே தடுக்கும்.

NAGARAJI B

தயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதுஆயுளை அதிகரிக்கும். எளிய வழிகளை மன உறுதியுடன் பின்பற்றினால் 100% இதய ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இரத்தக் கொதிப்பு வராமல் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் பக்கவாதமும், மாரடைப்பு அபாயமும் முழுமையாக நீங்கும். இதை ஒட்டியே உணவுப் பழக்கங்கள் இருக்க வேண்டும். முழுத்தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், கீரை, மீன், விதைகள், தயிர் போன்ற உணவுகளை நன்கு சேருங்கள். தாராளமாகச் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை.

கால்சியம் பக்கவாதத்தைத் தவிர்க்கும். எனவே, பால், பாலாடைக்கட்டி, கொட்டை வகை போன்றவற்றை தினமும் அளவுடன் சேர்த்து வரவும். குறைவாகச் சாப்பிட வேண்டிய தவிர்க்கக் கூடாத உணவுகள் இவை.

சமையலில் அவசியம் வெள்ளைப்பூண்டு சேர்க்கவும்.

பீட்டா கரோட்டீன் என்ற சத்து நிறைய உள்ள காரட், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, புதினாக்கீரை நன்கு சேர்க்கவும்.

உணவில் உப்பைக் குறைக்கவும். நேரடி உப்பு வேண்டாம். தினமும் ஒரு தேக்கரண்டி உப்பே அதிகபட்ச அளவாகும்.

அப்பளம், சிப்ஸ், ஊறுகாய் அதிகம் உப்பு நிறைந்தவை. இவற்றைத் தவிர்க்கவும்.

மூன்று வேளையோ அல்லது ஐந்து வேளையோ நேரம் தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். அளவான உணவே போதும்.

நிறையத் தண்ணீர் அருந்தவும்.

காபியிலிருந்து தேநீருக்கு மாறவும்.

தினமும் பத்து நிமிடம் வீதம் மூன்று வேளையும் உடற்பயிற்சி செய்யவும்., இதனால் தினமும் உடற்பயிற்சி செய்ய முடியும்.

உடற்பயிற்சியாக நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி என எது ஒன்றை நீங்கள் செய்து வந்தாலும், உங்கள் அறையைச் சுத்தம் செய்வது, தினமும் தோட்டத்தைச் சுத்தம் செய்வது போன்றவை உடலின் எல்லா உறுப்புகளும் சக்தி பெற உதவும்.

கட்டடங்களில் லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றைத் தவிர்த்து மாடிப்படிகளில் ஏறி இறங்குவதில் கவனம் செலுத்துங்கள். இதனால் இதயத்திற்கு ஆக்ஸிஜன் நன்கு கிடைக்கும்.


வீட்டில் எடை இயந்திரம் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தினமும் எடைபார்த்து, அதற்கு ஏற்ப உணவைக் குறைத்து உடற்பயிற்சி நேரத்தை அதிகரியுங்கள்.

புகை பிடிக்காதீர்கள்,
மது அருந்தாதீர்கள்.


போதுமான அளவு தினமும் தூங்குங்கள். குறைந்தது ஏழுமணி வரை நன்கு தூங்கவும். அதாவது இரவுத் தூக்கம்.

சோயாபால், சோயாமொச்சை போன்றவை உடலில் கெட்ட கொலஸ்ட்ரல் சேர்வதைத் தடுத்து, நல்ல கொலஸ்ட்ரல் அதிகரிக்க வழி செய்யும்.

சுண்டைக்காய், ஓட்ஸ், கொத்துமல்லிக்கீரைத் துவையல், கொள்ளு, முருங்கைகீரை, பீன்ஸ், டபுள்பீன்ஸ், கேழ்வரகு, பச்சைப்பட்டாணி போன்றவை எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து மிகுந்த உணவுகள். இவை கெட்ட கொலஸ்ட்ராலையும், கொழுப்பு உடலில் சேர்வதையும் தடுக்கின்றன. மேலும் மலச்சிக்கலும் ஏற்படாமல் தடுக்கின்றன.

இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரல் போன்றவற்றை மாதம் ஒருமுறையாவது பரிசோதித்து, அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவும்.

வீட்டிலும், அலுவலகத்திலும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கவனம் சிதறாமல் கடமையாற்றுங்கள். இதனால் அதிக நேரம் பணியாற்றி மன இறுக்கத்தால் அவதிப்படுவதைத் தவிர்த்திடுங்கள்.

மருந்து மாத்திரைகளைத் தவிருங்கள். ஒருமுறை உடல் நலத்திற்காக வாங்கிய மருந்துகளை மீண்டும் அதேபோல உடல் நலப் பிரச்னை வந்தால் பழைய சீட்டுப்படி மருந்து வாங்காதீர்கள். மருத்துவரைச் சந்திப்பதே பிரச்னைகளையும் செலவையும் குறைக்கும்.

வயதாக வயதாக இரவு உணவிற்குப்பிறகு மாதுளம் பழம் சாப்பிடும் பழக்கம் தொடர்வது நல்லது. இந்தப் பழத்தில் உள்ள எல்லாஜிக் என்ற அமிலம் இதயம் எப்போதும்

சிறப்பாக இயங்க உதவுகிறது. மாதுளம்பழம் இல்லையெனில், கறுப்பு நிறத் திராட்சையில் 50 கிராம் சாப்பிடவும். இதுவும் இதயத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்கும்.

மன இறுக்கம், வாழ்க்கையில் வெறுப்பு, தனிமை உணர்வு போன்றவை வராமல் தடுக்க ஆழ்ந்து மூச்சுவிடுதல், யோகாசனம், தியானம் போன்ற
வற்றைத் தினமும் பயிற்சி செய்து வாருங்கள். இதற்கென நேரம் ஒதுக்குவது எந்த வகையிலும் வீணானசெயல் அல்ல. எல்லா நேரமும் பதற்றமின்றி வாழலாம்.

மனம் விட்டுச் சிரிப்பது மிகச்சிறந்த குணப்படுத்தும் மருந்தாகும். தொலைக்காட்சியில் காமெடி காட்சிகளை இரவு தூங்குவதற்கு முன்பு பார்ப்பது நல்லது. மனம், இதயம், உடல் என மூன்றும் இறுக்கங்களில் இருந்து விடுபட உதவும்.