gdg
ஆப்பிள் சூப்
தேவையானவை: ஆப்பிள் - 1, தக்காளி - 2, பால் - ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள், மைதா மாவு - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை வெந்நீரில் போட்டு தோல் உரிக்கவும். ஆப்பிளைத் துருவி பசும்பாலில் வேக விடவும். வெந்ததும் ஆற வைத்து தக்காளியுடன் மிக்ஸியில் அடிக்கவும். மைதா மாவை லேசாக வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆப்பிள்-தக்காளி ஜூஸ், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு கலந்து சூப் ஸ்டிக்குடன் பரிமாறவும்.
பூசணி ஸ்வீட் அப்பம்
தேவையானவை: மஞ்சள் பூசணிக்கீற்று - 1, தேங்காய் துருவல், அரிசி மாவு, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மஞ்சள்பூசணியை நன்றாகத் துருவி, கடாயில் நெய் விட்டு வதக்கி எடுக்கவும். இதனுடன் அரிசி மாவு, தேங்காய் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி, பொன்னிறமாக சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
பச்சைப் பட்டாணி ஃபைபர் வடை
தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், உளுந்து, பச்சைப் பயறு, நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப், துவரம்பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 4, காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - ஒரு கொத்து, மல்லித்தழை - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுந்து, பச்சைப் பயறை சேர்த்தும், துவரம்பருப்பை தனியாகவும் ஊற வைத்து, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து ரவை போல அரைக்கவும். கொதி நீரில் பச்சைப் பட்டாணியைப் போட்டு எடுத்து தட்டி மாவில் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூள், மல்லித்தழை, நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கெட்டியாகக் கலந்து, வடையாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பச்சை மிளகாயை அரைக்கும்போது சேர்க்கலாம். அல்லது நறுக்கியும் போடலாம்.
Subscribe to:
Posts (Atom)