தண்ணீர் சிகிச்சை

NAGARAJI

1. பல் துலக்குவதற்கு முன், காலையில் எழுந்ததும் 160 னீறீ டம்ளர் x 4 டம்ளர் குடிக்கவும்.

2. பிறகு பல் துலக்கவும், வாய் கொப்பளிக்கவும், பிறகு 45 நிமிடம் எதுவும் சாப்பிடக்கூடாது. குடிக்க வும் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பிறகு ஏதாவது குடிக்கலாம்.

4. 15 நிமிடங்களுக்குப் பிறகு ஃடிபன் சாப்பிடலாம்.

5. காலை, மதியம், இரவு_டிஃபன், லஞ்ச், டின்னர் முடித்த பிறகு 2 மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.

6. வயதானவர்கள், நோயாளிகள், மேலும் ஒரே சமயத்தில் 4 டம்ளர் தண்ணீர் குடிக்க முடியாதவர்கள் ஆரம்பத்தில் ஒரு டம்ளர், பிறகு 2 டம்ளர் என படிப்படியாக அளவை உயர்த்திக் கொள்ளலாம்.

7. மேற்கண்ட சிகிச்சை பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தும்.

தண்ணீர் சிகிச்சை மூலம்

1. உயர் ரத்த அழுத்தம்- 30 நாட்களில் குணமாகும்.

2. கேஸ்ட்ரபுள் (வாயுக்கோளாறு) - 10 நாட்களில் குணமாகும்.

3. சர்க்கரை நோய் - 30 நாட்களில் குணமாகும்.

4. மலச்சிக்கல் (அடிக்கடி) - 10 நாட்களில் குணமாகும்.

5. கேன்ஸர் - 180 நாட்களில் குணமாகும்.

6. TB (டிபி) - 90 நாட்களில் குணமாகும்.

7. ARTHRITIS பேஷண்ட்ஸ் இந்த தண்ணீர் சிகிச்சையை முதல் வாரத்தில் 3 நாள், மேலும் 2 வாரத்தில் தினமும் மேற்கொள்ளலாம்.

தண்ணீர் சிகிச்சையில் பக்க விளைவுகள் கிடையாது. ரெகுரலாக யூரின் போவதை விட இந்த சிகிச்சையால் யூரின் போகும் அளவு அதிகமாகும். உதாரணமாக ஒருநாளைக்கு 6 முறை நீங்கள் யூரின் போனால் தண்ணீர் சிகிச்சையில் அது 8 முறை ஆகும். வேறு எந்த பக்கவிளைவும் இல்லை.

இந்த சிகிச்சைப்படி தினமும் தண்ணீர் குடித்து வந்தால் உங்களுக்குப் பழகிவிடும். அது ஒரு தினப்படி நிகழ்ச்சியாக மாறிவிடும். தினமும் தண்ணீர் குடியுங்கள். மேலும் ஆக்டிவாகவும், ஆரோக்கியமாகவும் வாழுங்கள். சீனர்களும், ஜப்பானியர் களும் குளிர்ந்த நீர் (Coldwater) அருந்துவதில்லை. வெந்நீரே குடிக்கிறார்கள். சாப்பிடும்போது சூடான டீ மட்டும் சேர்க்கின்றனர். நாமும் அதைப் பின்பற்றினால் நிறைய பயன் உண்டு. இழப்பதற்கு எதுவுமில்லை. அனைத்தும் லாபமே.


நோய் வந்துவிட்டால் மருந்து சாப்பிட்டுத்தான் அதைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அவரவர் உண்ணும் உணவு மூலமாகவே அதைச் சரி செய்து கொள்ளலாம். கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! ஆனால் உண்மை அதுதான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. அதை நாம் சரிவரப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம் என்பதை உணர வேண்டும்.

உணவில் சேர்க்க வேண்டியதைச் சேர்த்துக் குறைக்க வேண்டியதைக் குறைத்தால் நோய் தானாகவே சரியாகிவிடும். ஒழுங்கான உணவுப் பழக்கத்தினால், எந்தப் பிணியும் வராமல் தடுத்துக் கொள்ளலாம். நமது உடல் எப்போதும் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருக்கிறது. தூக்கத்தில் நாம் சுவாசிக்கும்போது, நுரையீரல் சுருங்கி காற்றை உள்வாங்கியும், பிறகு வெளிவிடவும் செய்கிறது. இதன் மூலம் இதயம் சுருங்கி விரிந்து இரத்தத்தைச் சீராக உடல் முழுவதும் பரப்புகிறது.

நாம் தினமும் வேலை செய்வதால், உடல் மெலிந்து போக வேண்டுமல்லவா! ஏன் அப்படி நடப்பதில்லை? கடினமான உழைப்பில் உடலில் தேய்த்து போகும் பாகங்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகின்றன. அப்படிப் புதுப்பிக்கும் பணியினைத் தொடர்ந்து செய்வது இரத்தமாகும். இரத்தம் உடலெங்கும் ஓடி, ஒவ்வொரு பாகத்திற்கும் வேண்டிய சத்துப் பொருளைக் கொடுத்துக் காப்பாற்றுகிறது. இப்படி நாம் உயிர்த்திருப்பதற்குரிய சரும பணியைச் செய்து வரும் இரத்தம், அவரவர் உண்ணும் உணவிலிருந்தே ஏற்படுகிறது. அவரவர் உண்ணும் உணவு, அவர்களுக்கு வேலை செய்யும் சக்தியை அளிக்கிறது.

சிறுவர்களாக இருக்கும்போது தேகத்தின் பல உறுப்புகளை நன்கு வளர்க்கிறது. நாம் உண்ணும் உணவு, உடல் நன்கு வளர்ச்சியடைவதற்கும், உடலின் உறுப்புக்கள் நன்கு வேலை செய்தவற்கும் உதவும்படியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயமாகும் மற்றும் உடலை எந்த நோயும் அண்டாமல் பாதுகாத்து ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் உடல் வளர்ச்சிக்கு அவசியம் வேண்டிய ஐந்துவித சத்துப் பொருள்கள் அடங்கியுள்ளன. அவை, கார்போஹைட்டிரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், கனிச்சத்து ஆகியவை ஆகும். அரிசி போன்ற உணவுகளில் வேண்டிய மாவுச் சத்து கிடைக்கிறது.

பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாகக் கிடைக்கிறது. சமையல் எண்ணெயில் கொழுப்புச் சத்தும் அதிகம். பால்போன்ற உணவு வகைகளிலும் காய்கறியிலும் பலவிதச் சத்துக்கள் உள்ளன. இவற்றுள் மாவுச் சத்தும், புரோட்டீனும், கொழுப்புச்சத்தும், உடலுக்கு வேண்டிய சக்தியை வாங்கி அதைத் தொடர்ந்து இயங்கச் செய்வதால், உடலின் வளர்ச்சி சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது. வைட்டமினும், கனிச்சத்தும் உடலுக்கு அதிக அளவில் சக்தியைத் தருவதில்லை என்றாலும், உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான இயக்கங்கள் சீராகவும், செம்மையாகவும் நிகழ்வதற்குச் சிறிது அடிப்படை சக்தி எப்போதும் தேவைப்படுகிறது.

இதற்கும் மேலாக அவரவர் தொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறு சக்தி தேவைப்படுகிறது. உடலுழைப்பு அதிகமாக அதிகமாக சக்தியும் அதிகமாகத் தேவைப்படுகிறது. அதனால் சோற்றில் இந்தக் கஞ்சியை ஊற்றி ஊற வைத்து காலையில் உண்டு வர உடல் பலம் பெறும். இதில் மோர் கலந்து பருகினால் அதிக சூதகப் போக்கைக் கட்டுப்படுத்தும். உளுந்துப் பருப்பும் அரிசியும் கலந்து தயாரிக்கும் கஞ்சி உடலுக்கு நல்ல வலுவைத் தரும். வாயுவை உண்டு பண்ணும். வாத நோயாளிகள் இதை உண்ணாமல் இருப்பது நல்லது. வயதானவர்கள் கொள்ளும் அரிசியும் கலந்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பலம் பெறும். கோதுமையைக் காய வைத்து இடித்து உமியை நீக்கிவிட்டு உடைத்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வாத சுரம், கபநோய்கள், சன்னி முதலியவை குணம் பெறும். அடிக்கடி குடித்து வர அதிகமாகப் போகும் சூதகம் கட்டுப்படும். இதில் பால் சேர்த்து உண்பது உடல் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.

சோளக் கஞ்சியை, மோர் அல்லது தயிர் சேர்த்து உண்பது நன்மை பயக்கும். மலக்கட்டு நீங்கும். குழந்தைப் பேறில்லாத ஆண் பெண்கள் நாற்பத்தெட்டு நாட்களுக்கு இரவில் தினைக்கஞ்சியுடன் தேன் கலந்து உண்டு வர குழந்தைப் பேறு உண்டாகும். நெல் பொரியைக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் பித்தம் நீங்கும். பைத்தியம் பிடித்தவர்களுக்கு தினமும் ஒரு வேளையாவது இதைக் குடிக்கக் கொடுத்து வருவது நன்மை பயக்கும். பச்சரியும், சிறுபயறும் கலந்து வைக்கப்படும் கஞ்சி உடலுக்கு நல்ல வலுவைத் தரும்: பித்தத்தையும் குணப்படுத்தும். பார்லிக் கஞ்சியை பகலில் மட்டுமின்றி இரவிலும் சாப்பிடலாம்.

அனைத்து வித நோயாளிகளுக்கும் பார்லிக் கஞ்சியே சிறந்தது. 200 கிராம் பார்லியுடன் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து இளம் கறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு தேக்கரண்டித்தூளில் 250 மி.லி. நீர் விட்டு கஞ்சி காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து இரவு உணவுக்குப் பின் அருந்த மலக்கட்டு நீங்கும். குழந்தைகளுக்குக் காலை உணவாக இதையே கொடுக்க மலச்சிக்கல் தீரும். வெந்தயக் கஞ்சி, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு நல்லது. காபி காய்ச்சலின் வேகத்தைக் குறைக்கும்.

சளியை முறிக்கும். தினமும் காபி குடிப்பவர்களுக்கு சுவாசகாசம் வரும் வாய்ப்பு மூன்றில் இரண்டு பங்கு குறைவாக இருக்கும். அதிகமாக தேநீர், காபி குடித்தால் தாது மற்றும் உயிர்ச்சத்து இழப்பு ஏற்படும். சிறுநீரை அதிகளவு வெளியேற்றிவிடும். பித்தத்தை உற்பத்தி செய்யும் இதய நோயாளிகள் பருகக்கூடாது. அதிக காரச் சுவை உள்ள குழம்பு வாதத்தை அதிகப்படுத்தும். புளிப்புச் சுவை குறைத்துத் தயாரிக்கப்படும் குழம்புகள் வாத, பித்த கப நோய்களைப் போக்கும். உப்புச் சுவையையும் குறைத்துத் தயாரிக்கப்படும் குழம்புகள் வாத, பித்த, கப நோய்களைப் போக்கும்.

உப்புச் சுவையையும் குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். கேழ்வரகுக் கூழ் களி, உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். பித்த நோய்களைப் போக்கும். வாத நோயைத் தோற்றுவிக்கும். கொழுக்கட்டை, இது உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். தாதுவை விருத்தி செய்யும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். பித்தத்தையும் வாதத்தையும் அதிகப்படுத்தும்.

கோதுமை அடை : உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். தாதுவை விருத்தி செய்யும். கோதுமை ரொட்டி உட்கொள்வதால் உடலில் இரத்தம் உண்டாகும். உடல் பலம் பெறும். உடல் சூட்டை சிறிது அதிகரிக்கும். சவ்வரிசி நோயாளிகளின் பலவீனத்தைப் போக்கும். வெண்குட்டம், வெள்ளைப் போக்கை குணப்படுத்தும் அதிகமாக உட்கொண்டால் சளிப்பிடிக்கும். அதிக சூடான கெடுதலை விளைவிக்கும். சூடாக உண்டால் மனநோய், பித்த நோய் ஏற்படும். இரத்த பித்தம், தலை, சுற்றல், மயக்கம், எரிச்சல், பலக்குறைவு அதிக தாகத்தை ஏற்படுத்தும். உணவுப் பொருட்களை சூடாக உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். இளஞ்சூடான சோற்றை உண்பதே நம் உடலுக்கு நன்மை பயக்கும். வாத, பித்த கப நோய்கள் குணமடையும். நம் உடலுக்கு நல்ல வலிமையைத் தரும் மிகவும் குழைந்துவிட்ட சோறு உடலின் வெப்ப சமனிலையைக் கெடுக்கும்.

உலர்ந்துள்ள சோறு அஜீரணத்தை உண்டாக்கும். காந்தலான சோறு சீரண உறுப்புகளைப் பாதிக்கும். நன்றாக வேகாத சோறு மந்தத்தை உண்டாக்கும். உணவு உண்ணும்பொழுது கடைசியில் தயிர்விட்டு சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் வாத, பித்த, கபக் குற்றங்களை நீக்கும்.

கபக் குற்றங்களைச் சமன் செய்யும். சோறில் மோர் கலந்து சாப்பிடுவதால் நல்ல சீரணசக்தி உண்டாகும். பித்தம், மேகம், மூலமுளை குணமாகும். பாண்டு கிராணி நோய்களும் குணமாகும். உளுந்துச் சோறு உடலுக்கு நல்ல வலிமை தரும். பித்தநோய்களைப் போக்கும். வாதத்தை அதிகரிக்கும். எலுமிச்சம் சாதம் பித்தத்தைப் போக்கும். கண்பார்வையைத் தெளிவடையச் செய்யும். உடல் சூட்டைத் தணித்து சம நிலையில் வைக்கும். எள் கலந்து தயாரிக்கப்படும் சோறும், உடலுக்கு நல்ல வலிமை தரும். வாத பித்தக் குற்றகங்ளை நீங்கும். கபத்தைத் தோற்றுவிக்கும். ஓரளவு நெய் சேர்த்து சோற்றைத் தாளித்து உண்டு வந்தால் பித்த நோய்கள் குணமடையும். கண்களுக்கு ஒளியைக் கொடுக்கும். உடலுக்குப் பல நன்மைகளை உண்டாக்கும். கடுகு போட்டு, சிறிது புளியும் சேர்த்துத் தயாரிக்கப்படும் சோறு வாத, கப நோய்களைப் போக்கும். கம்புச் சோறு இரத்தத்தைச் சுண்டச் செய்துவிடும். புண்கள் விரைவில் ஆறாது. இருமல், இரைப்பு இவைகளைத் தோற்றுவிக்கும். சாமை அரிசியைக் குத்தி சோறாகவோ, கஞ்சியாகவோ செய்து உட்கொண்டு வந்தால் தாது விருத்தியடையும். வாத, கபநோய்களைப் போக்கும்.

சுத்தமான நல்லெண்ணெய் கலந்து தாளித்துத் தயாரிக்கப்படும் சோறு வாத நோய்களைக் குணப்படுத்தும். நம் உடலுக்கு நல்ல வலுவையும், புணர்ச்சியில் விருப்பத்தையும் உண்டாக்கும். பசும்பாலைக் கொதிக்க வைத்து, அரிசியை போட்டு வேக வைத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து உண்டு வர மிகுந்த நன்மை உண்டாக்கும். வாயுவை உண்டாக்கும். இதை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. புளியைக் கரைத்து வரமிளகாய், பெருங்காயம், கடுகுபோட்டுத் தாளித்துத் தயாரிக்கப்டும் சோறு பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். மேக நோயைக் குணப்படுத்தும். இருமலை உண்டு பண்ணும். உடல் வலியை உண்டாக்கும். ருசியின்மையைப் போக்கும். மிளகு கலந்துத் தயாரிக்கப்படும் சோறு. வாயுத் தொந்தரவுகளைப் போக்கும். நல்ல சீரண சக்தியை உண்டாகும்.

பித்தம், கபம் இவற்றைப் போக்கும் துவரம் பருப்பு மசியல்.. துவரம் பருப்புக் குழம்பு அல்லது மசியலுடன் நெய் சேர்த்து உண்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல், வாத, கப நோய்கள் குணமடையும். உடலுக்கு நல்ல வலுவையும் பார்வைத் தெளிவையும் உண்டாக்கும்.

துவரம் பருப்பு இரசம், துவரம் பருப்பு வேக வைத்த நீரில் மிளகு பூண்டு பெருங்காயம் சேர்த்து வைக்கப்படும் இரசத்தை உண்பதால் அக்னி மாந்தம் நீங்கும். வாத நோய்களைக் குணப்படுத்தும். புளிப்புச் சுவை அதிகமாகச் சேர்த்துச் செய்யப்படும் துவையல் இரத்தத்தைச் சுண்டச் செய்துவிடும். கார சுவையுள்ள துவையல் நல்ல பசியை உண்டாக்கும் புதினாத் துவையல் பித்தக் கோளாறுகளைப் போக்கும். ருசியின்மையைப் போக்கும். கொத்துமல்லித் துவையல் உடலின் அதிக சூட்டைத் தணிக்கும் ஏப்பம் வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சலைப் போக்கும். சீரணத்தைத் தூண்டும். இஞ்சித் துவையல் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும். பசியைத் தூண்டும். வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி இஞ்சி, பூண்டு, புளி சேர்த்துச் செய்யப்படும் துவையலை காக்கை வலிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து உண்டு வர குணம் கிடைக்கும். பீர்க்கங்காய்த் துவையல் ருசியின்மையைப் போக்கும். தேநீர் தயாரிக்க முன்பு கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்தக்கூடாது. நீர் கொதிக்கத் துவங்கும்பொழுதுதான் தேநீர் தூளைக் கலக்க வேண்டும். இதயத்தைத் தூண்டும். நரம்புகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாவதைத் தடுக்கும். சீதபேதியைப் போக்கும். சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தூண்டும். நஞ்சு உட்கொண்டவர்களுக்கு முதலுதவியாக தேநீரைப் பருகக் கொடுக்கலாம். பால் சேர்க்காத தேநீர் இதய நோய், புற்று நோய் வருவதைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்கும். பக்கவாத நோயாளிகளுக்கு நல்லது. பக்கவாதம் வராமலும் தடுக்கும். அதிகமாக பருகக்கூடாது.

தோசை : உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். பித்தக் கோளாறுகளைப் போக்கும். புளிப்புச் சுவையுள்ள பச்சடி பித்த நோயைத் தோற்றுவிக்கும். உறைப்புச் சுவையுள்ள பச்சடி வாத நோயைத் தோற்றுவிக்கும். வாழைத் தண்டு பச்சடி உடல் சூட்டைத் தணிக்கும், வாத, பித்த கபக் குற்றங்களைக் குறைக்கும். இறைச்சி கலந்து தயாரிக்கப்படும் பிரியாணி, இவ்வுணவு நம் உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மந்தத்தைத் தோற்றுவிக்கும்.

புட்டு : பத்தக் கோளாறுகளைப் போக்கும். உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். சர்க்கரைப் பொங்கல் உடலில் புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். ருசியின்மையைப் போக்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். பித்த, வாதத் தொடர்பான கோளாறுகளைக் குறைக்கும். மிளகு அதிகமாகப் போட்டுத் தயாரிக்கப்படும் பொங்கல் பசியின்மையைப் போக்கும். குடல், இறைச்சல், வாயுப் பொருமல், பித்தம், கபம் ஆகியவற்றைப் போக்கும். பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பு கலந்து தயாரிப்பது உடலுக்கு நல்ல பலம் தரும். உடல் சூட்டை அதிகப்படுத்தும்.
சீரணமாக நேரமாகும். வயிறு உப்புசத்தைத் தோற்றுவிக்கும். வாத நோயுள்ளவர்களுக்கு சூட்டை அதிகப்படுத்தும். சீரணமாக நேரமாகும். வயிறு உப்புசத்தைத் தோற்றுவிக்கும். வாத நோயுள்ளவர்களுக்கு ஆகாது. பால் பொங்கல் உடல் சூட்டை சமப்படுத்தும். வாதத் தொடர்பான நோய்களை அதிகப்படுத்தும்.

பொரியல் வகைகள் : நிறைய எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் பொரியல் வகைகளில் உப்புச் சுவை அதிகமானால் கபத்தைத் தோற்றுவிக்கும். காரம் அதிகமானால் பசியின்மை. வாத நோய்கள் உண்டாகும். துவர்ப்புச் சுவை அதிகமானால் சுறுசுறுப்பு உண்டாக்கும். வயிற்றுப் பூச்சிகளைப் போக்கும்.

முறுக்கு : அரிசி, உளுந்து மாவு சேர்த்து செய்யப்படும் இதைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். வாதத் தொடர்பான கோளாறுகளைப் போக்கும். பித்தத்தை உற்பத்தி செய்யும்.

மோதகம் : புழுங்கல் அரிசி, மாவு, வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து செய்யப்படும் இதை உண்பதால் உடல் பலம் பெறும். இரத்த விருத்தி, தாது விருத்தி உண்டாகும்.

வறுவல் : எண்ணெய் சேர்த்து வறுத்துத் தயாரிக்கப்படும் உணவு வகைகளை இளம் வறுவலாக வறுத்து உண்டால் மந்தத்தை உண்டாக்கும். நடுத்தரமாக வறுத்து உண்டால் நீர்க் கோர்வையை நீக்கும். கறுக வறுத்து உண்டால் வாத, பித்த, கபக் குற்றங்களைத் தோற்றுவிக்கும்.

வடை : உளுந்து வடை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைக் குறைக்கும். வாத நோய் உள்ளவர்களுக்கு ஆகாது. தயிர்வடை உடலுக்கு பலம் கொடுக்கும். உடல் சூட்டைத் தணித்து சமன்படுத்தும். வாதத் தொடர்பான கோளாறுகளைக் குறைக்கும். நிறைய அளவு வெங்காயத்தை உளுந்து மாவில் போட்டு வெங்காய வடை செய்து சாப்பிட்டு வர, உடல் சூடு தணிந்து சமன்படும். உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

எண்ணெய் வகைகள்

நல்லெண்ணெய் : கண், காது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். அறிவுத் தெளிவை உண்டாக்கும். தோல் நோய்களைப் போக்கும். அடிப்பட்ட காயம், புண், ஆவி அல்லது கொதி நீரால் ஏற்பட்ட புண்ணுக்கு நல்லெண்ணெயை எலுமிச்சை சாறில் கலந்து பூசி வர குணம் கிடைக்கும்.

கடலெண்ணெய்: உடலுக்கு நல்ல பலம் தரும். வாதத் தொடர்பான நோய்களைத் தணிக்கும். எலும்புக்கு பலத்தைக் கொடுக்கும். இரத்தக் கொதிப்பை சமன் செய்யும், ஊைளச்சதையைக் குறைக்கும். தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்பைப் போக்கும். நீர்ச்சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பிரிக்கும். உடல் எரிச்சல், நீர் எரிவைப் போக்கும். சிறுநீர்ப்பைக் கற்களைக் கரைத்து சுத்தமாக்கும்.

வாய்ப்புண், வாய்நாற்றத்தைப் போக்கும். மாதவிலக்குக்கு முன்னர் சாப்பிட மாதவிலக்கு வயிற்று வலியைப் போக்கும். மாதவிலக்கிற்குப் பின்னர் சாப்பிட களைப்பைப் போக்கும். வெள்ளைப் போக்கை குணமாக்கும். பித்தத்தை உண்டு பண்ணும். சுவாசகாசம், வாத நோயாளிகள் காய்ச்சல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தலைவலி உள்ளவர்கள் உண்ணாமல் இருப்பது நல்லது. மாதவிலக்கு நாட்களிலும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

கடுகெண்ணெய்: உணவில் உள்ள நச்சுத்தன்மையைப் போக்கும். உடலுக்குப் பொலிவைத் தரும். தசை வலியைப் போக்கும். வயிற்றில் உள்ள கிருமிகளைப் போக்கும்.

தேங்காய் எண்ணெய்: வாய்ப்புண், வயிற்றுப்புண், கருப்பைப் புண்ணை குணமாக்கும். புற்றுநோய் உள்ளவர்களுக்கு நல்லது.

பனையெண்ணெய் (பாமாயில்): கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது.

சமைப்பதற்கு ஏற்ற பாத்திரங்கள்:

மண்பாண்டத்தில் சமைப்பது தான் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இரும்புப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு கண்நோய், மூல நோயைப் போக்கும். வெண்கலப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு புத்தியை வளர்க்கும். அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு உடலுக்குக் கெடுதலை உண்டாக்கும். நரம்பு, எலும்புத் தொடர்பான நோய்களைத் தோற்றுவிக்கும்.

உண்கலங்கள்: பொன்னால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தாது விருத்தியடையும். சீரண சக்தி உண்டாக்கும். பித்த, வாத, கப நோய்கள் உண்டாகாது. வெள்ளியால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் கண்களுக்கு நலம் தரும்.

பித்த கப நோய்கள் குணமடையும். உடலுக்குப் பொலிவைத் தரும். மன மகிழ்ச்சியைத் தரும். வாத நோயைத் தோற்றுவிக்கும். செம்பால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் சுறுசுறுப்பு உண்டாக்கும். உடலுக்குப் பொலிவைத் தரும் மன மகிழ்ச்சியைத் தரும். எந்த நோயும் அணுகாது. இரத்தத் தொடர்பான நோய்கள் குணமாகும். பித்தநோய்கள் குணமாகும். வெண்கலத்தில் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் களைப்பு நீங்கும். அனைத்து உடல் தொந்தரவுகளும் தீரும். பித்த நோய்கள் குணமாகும். கண்கள் ஒளிபெறும். தாது வலிமையடையும், உடல் தேறும்.

இரும்பு, கண்ணாடிப் பாத்திரத்தில் சாப்பிட்டால் வீக்கம், சோகை குணமாகும். காமாலையைப் போக்கும். உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். காமாலையைப் போக்கும். உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் வாத, பித்த, கப நோய்கள் குணமாகும். மண்ணால் செய்யப்பட்ட உண்கலத்தில் உண்டு வந்தால் காசநோய் குணமாகும். வாழை இலையில் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் மினுமினுப்பாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஒளியையும் கொடுக்கும். வாத பித்த கப நோய்கள் குணமாகும். உடலுக்கு வலிமையைத் தரும். ஆண்மையை வளர்க்கும். வயிறுமந்தத்தைப் போக்கும். பாலுள்ள வேறு மரங்களின் இலையில் உண்டு வந்தாலும் வாத, பித்த, கப நோய்கள் நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தணிக்கும். பக்க வாதம் குணமாகும். உடல் நடுக்கம் குணமாகும். காச நோய் குணமாகும்.

பலா இலையில் உணவு உண்பது கெடுதலையே தரும். பித்தத்தை அதிகரிக்கும் தாமரை இலையில் உண்டால்; உடல் வெப்பம் அதிகரிக்கும். வாத நோய் மந்தாக்கினியைத் தோற்றுவிக்கும். புரசம் இலையில் உண்பது வாத கபத்தைப் போக்கும். சயம், குன்ம நோயைப் போக்கும். உடலுக்கு சூட்டைத் தரும். உணவு உட்கொள்வதற்கான காலமும், முறைகளும், முன்பு உண்ட உணவு செரித்து பசி உண்டாகியிருக்க வேண்டும். ஏப்பம் சுத்தமாயிருக்க வேண்டும். மலம், சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருந்தால், கழித்த பிறகே உண்ண வேண்டும்.

சூடானவையும், எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகளும் சிறந்தவை. தூய்மையானதாகவும், அறுசுவை நிறைந்ததாகவும், உண்ண வேண்டும். மிகவும் குறைவாகவோ, மிகவும் அதிகமாகவோ உண்ணக் கூடாது. மிக மெதுவாகவோ, மிக வேகமாகவோ இல்லாமல் கூழ்போல் மென்று உண்ண வேண்டும். கோபமாகவும், துன்பப்படும் பொழுதும் உணவு உட்கொள்ளக் கூடாது. உணவு உண்டவுடன் சிறிது நடப்பது நல்லது. உட்காருவதோ, படுப்பதோ, ஓடுவதோ கூடாது. காலை உணவு உண்பது முக்கியமானது மட்டுமல்ல, அவை சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். நீடித்த உடல் நலத்திற்கு அடித்தளமாக இருப்பது காலை உணவுதான்.

உடல் சுறுசுறுப்பாக இருக்கும். கொலஸ்டிரால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதயக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு குறையும். முதலில் கடினமான உணவுப் பொருட்களையும், பிறகு மிருதுவான பொருட்களையும் உண்ட பிறகு திரவப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். வேலை செய்து, நடந்து, வெயிலில் அலைந்து களைத்துள்ள பொழுது உண்பதோ, பருகுவதோ கூடாது. தாகமுள்ள பொழுது, உணவு உட்கொள்வதோ, பசியுள்ள பொழுது நீர் அருந்துவதோ கூடாது. அதனால் முறையே குன்ம நோயும் வயிற்றில் நீர்க்கோர்வையும் ஏற்படும். எண்ணெய்ப் பசையில்லாத உணவு உடல் வலுவையும், ஒளியையும் போக்கிவிடும். தோல் வறட்சி மலக்கட்டை உண்டாக்கும்.

மிகவும் குளிர்ந்து போன உணவு, சளி, களைப்பு, ருசியின்மை, குமட்டல், அஜீரணம் ஆகியவற்றை உண்டாக்கும். மிகவும் கெட்டியான உணவு சிறுநீர் மலத்தை வெளியேற்றுவதில்லை. விரைவில் சீரணமாகாது. மிகவும் இனிப்பான உணவு பசியை அடக்கிவிடும். உப்பு அதிகமாக உள்ளஉணவு கண்களுக்குக் கெடுதலை உண்டாக்கும். காரம், புளிப்பு நிறைந்த உணவு கிழத்தன்மையை உண்டாக்கும் சாப்பிடும் பொழுது முதலில் இனிப்பான உணவையும் பிறகு புளிப்பு உப்பு கார உணவையும் உட்கொண்டு கடைசியாக துவர்ப்புச் சுவையுள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

குளிர்ந்த பொருளுடன் சூடான பொருளையும் புதிய பொருளுடன் பழையதையும், பச்சையான பொருளுடன் வேகவைத்ததையும் கலந்து உட்கொள்ளக் கூடாது. தேன், நெய், எண்ணெய், நீர், கொழுப்பு இவற்றில் ஏதேனும் இரண்டையோ, பலவற்றையோ சம அளவில் கலந்து உட்கொள்ளக் கூடாது.

கள், தயிர், தேன் அவற்றை உடக் கொண்ட உடனே சூடாக எதையும் உட்கொள்ளக் கூடாது. நம் முன்னோர்கள் அறுசுவைகளையும் சுவைக்காக மட்டுமன்றி நோய் நீக்கவும் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு சுவையை ஏற்றத் தாழ்வுகளுடன் உண்டு நோய் வராமலும், வந்த நோய்களைப்போக்கிக் கொள்ளவும் முடியும். இது நம் நாட்டு மருத்துவமான சித்த மருத்துவத்திற்கே உள்ள தனிச்சிறப்பு. எனவே தான் உணவே மருந்து, மருந்தே உணவு எனும் வார்த்தை பொருள் பொதிந்ததாக இருக்கின்றது.

ஆம். நம் உணவு முறை நம் உடலுக்கு மருந்தாகவும் விளங்குகின்றது. இனிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, உப்பு, புளிப்பு எனும் இந்த அறுசுவைகளும், உடலில் முறையே தசை, நரம்பு, உமிழ்நீர், இரத்தம், எலும்பு, கொழுப்பு எனும் ஆறு தாதுக்களையும் உயிர்க்கச் செய்கின்றன. இந்தத் தாதுக்கள் சரியாக இருக்கும் பொழுது இன்னொரு முக்கியமான தாதுவான மூளை சரியாக இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவு இரத்தமாக மாறி பிறகு மற்ற தாதுக்களாக மாறுகின்றன.

இரத்தம் அதிகமானால் கால் குடைச்சல். தூக்கமின்மை, திமிர் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இரத்தம் குறைந்தால், உடல் வெளுத்தல், சோர்வு, காமாலை, கால் வீக்கம் போன்றவை ஏற்படும். இனிப்பு கபத்தை அதிகப்படுத்தும். காரம் கபத்தைக் குறைக்கும். துவர்ப்பு வாதத்தை அதிகப்படுத்தும், புளிப்பு வாதத்தைக் குறைக்கும். இந்த அறுசுவைகளில் ஒன்றுக்கொன்று நட்பு, பகை கொண்டவைகளாவும் உள்ளன.

உப்பு: வலது கை பித்த நாடியில் நம் உடலிலுள்ள உப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். உடலை மென்மையாக்கும். எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்துவை வளர்க்கிறது. சிறுநீர், மலத்தை சுத்தப்படுத்தும், வாயுவைக் குறைக்கும். வியர்வையைப் பெருக்கும். அதிகமானால் வாந்தி பேதி, காய்ச்சல், அதிமூத்திரம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உணர்ச்சி வசப்படுதல், கை கால் முகம் வீக்கம் உண்டாகும். குட்டம், தோல் தொடர்பான நோய்கள் தோன்றும். இரத்த அழுத்தம் உண்டாகும். சிறுநீரகம் அதிகமாகச் செயல்பட வேண்டி வரும். மலச்சிக்கலும் நரம்புப் பதட்டமும் உண்டாகும். கண் கோளாறுகளை உண்டாக்கும். குறைவதால் உடலில் இயற்கையான சூடு 98.4-யிலிருந்து குறைந்துவிடும். பசியின்மை, புளியேப்பம், நெஞ்செறிவு, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

இனிப்பு: வலது கை கப நாடியில் நம் உடலிலுள்ள இனிப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். தசையை வளர்க்கச் செய்கிறது. வயிறுக்கும் மண்ணீரலுக்கும் பலம் கொடுக்கும்.பித்தம் வாயுவை சமப்படுத்தும். அதிகமானால் பருமன், கட்டிகள், நீரிழிவு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். குறைந்தால், நீர்ச்சுருக்கு, உடல் மெலிவு, உடலரிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

புளிப்பு: இடது கை வாத நாடியில் நம் உடலிலுள்ள புளிப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். சீரணத்திற்கு உதவுகிறது. கொழுப்பை வளர்க்கும். இரத்தத்தில் உள்ள அழுக்கை அகற்றுவதுடன், இரத்தத்தின் சூட்டையும் குறைக்கும். அதிகமானால் சோம்பல், மலச்சிக்கல், அதிக தூக்கம், வாயு, பாரிசவாதம் முதலிய தொந்தரவுகள் ஏற்படும். குறைந்தால் வாந்தி, தூக்கமின்மை, கிராணி, அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

கசப்பு: இடது கை பித்த நாடியில் நம் உடலிலுள்ள கசப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். நரம்புக்கு பலத்தைக் கொடுக்கும். உடலின் அனைத்து உறுப்புகளையும் உறுதியடையச் செய்யும். உடலில் தேய்மான உறுப்புகளைப் புதுப்பிக்கும். சீரணத்திற்கு உதவும், கிருமிகளை அழிக்கும். உடல் எரிச்சலைப் போக்கும். கபத்தைக் குறைக்கும். கசப்பு அதிகமானால் உணர்ச்சி வசப்படுதல், கோபம், தூக்கமின்மை, ஊறல், அரிப்பு, சொறி, சிரங்கு, குட்டம் முதலியன ஏற்படும். குறைந்தால் வேலையில் ஆர்வம் குறைந்து சோம்பல் உண்டாகும். உடல் வலிமை குறையும். அசீரணம் பலமின்மை, அடிக்கடி தலைவலி, உடல்வலி, காய்ச்சல் தோன்றும்.

காரம்: இடது கை கப நாடியில் நம் உடலிலுள்ள காரத்தின் அளவை அறிந்து கொள்ளலாம். காரம் உமிழ்நீரை வளர்க்கக் கூடியது. அளவோடு இருந்தால் புண்களை ஆற்றும். அதிகமானால் உடல் சூடு, உணர்ச்சி வசப்படுதல், கோபம் அதிகரிக்கும். கண்கள் சிவந்துவிடும். வயிற்றுவலி, வயிற்றில் எரிச்சல், வயிற்றில் புண், வயிற்றுக் கடுப்பு, வாயுத் தொந்தரவு உண்டாக்கும். சீரணம் பாதிக்கப்படும். நீர்ச்சுருக்கு, ஆசன எரிச்சல், சீதபேதி, மூல நோய் முதலியன உண்டாகும். குறையும் பொழுது நாவறட்சி, மலச்சிக்கல், அஜீரணம், சுவையின்மை முதலிய தொந்தரவுகள் ஏற்படும்.

துவர்ப்பு: வலது கை வாத நாடியில் நம் உடலிலுள்ள துவர்ப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். இரத்தத்தை அதிகரிப்பதுடன் சுத்தமும் செய்யும். பித்தப்பையை புலப்படுத்தும், புண்களை ஆற்றும். தோல் மென்மையாகும். அதிகமானால் கால் குடைச்சல், தூக்கமின்மை, திமிர் முதலிய தொந்தரவுகள் ஏற்டும். நாக்கு தடித்து விடும். வாயுவை அதிகரிக்கும். குறையும் பொழுது, உடல் வெளுத்தல், காமாலை, கால் வீக்கம், சோர்வு முதலிய தொந்தரவுகள் ஏற்படும்.

சுவை நட்பு பகை
உப்பு இனிப்பு புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு
இனிப்பு உப்பு, புளிப்பு கசப்பு, காரம்
புளிப்பு இனிப்பு உப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு
கசப்பு காரம் உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு
காரம் உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு
துவர்ப்பு உப்பு புளிப்பு, கசப்பு, காரம்

திராட்சையில் உள்ள குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் ஆர்கானிக் அமிலம் இரைப்பையை சுத்தம் செய்வதுடன் உடனடி மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. தினமும் 350 கிராம் திராட்சை உண்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாறுகளும் உடனடியாக சரியாகிவிடும்.

இதயக் கோளாறு உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை உணவாக திராட்சையை மட்டும் உண்டு வருவது நல்லது. அவ்வாறு உண்ணும்போது, இதயத்தில் இருக்கும் வலி சிறிது சிறிதாகக் குறைந்து இதயம் பலப்படுவதுடன் நெஞ்சு படபடப்பும் சரியாகும் என்று இயற்கை மருத்துவம் கூறுகிறது. மேலும் பல்வேறு பலன்களையும் திராட்சை அள்ளித் தருகிறது. அடிக்கடி திராட்சை சாப்பிடுபவர்களுக்கு பல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. பல் ஈறும் பலமாகிறது. கல்லீரலைப் பலப்படுத்தி அது நன்கு வேலை செய்யவும் ஊக்குவிக்கிறது. கடைகளில் திராட்சைப் பழத்தை வாங்கி வருபவர்கள் அதை அப்படியே சாப்பிடாமல் சுத்தமான தண்ணீரில் கழுவிய பின்னர் சாப்பிடுவதே சிறந்தது. சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் திராட்சையை தவிர்ப்பது நல்லது.

'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்போல், வாழை வைத்தாரை வாழ வைக்கும் வாழை என வாயார வாழ்த்தி, சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டியிருக்கும் வாழை மரம் கட்டியம் கூறுவதுபோல், இக்கட்டுரைக்குள் புக, வாழைப்பூ போன்ற இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.

மா, பலா, வாழை என முக்கனிகளுள் கடைசியாக இருந்தாலும் பலன்களை அள்ளித் தருவதில் முதலிடம் வாழைக்கே!

சுக்ரோஸ், ஃப்ருக்டோஸ், க்ளுகோஸ் என்ற மூன்று வகை சர்க்கரைச் சத்தும் நார்ச்சத்தும் சேர்ந்த வாழைப்பழம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையானது. பழம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ட்ரைப்டோன் செரடோனின்களாக மாறி உற்சாகத்தை ஊட்டுகிறது. 11/2 மணி நேர உடற்பயிற்சிக்குத் தேவையான சக்தி வாழைப்பழம் தரும்.

மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பரீ மென்ஸ்ட்ரஸ் சின்ட்ரோம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ஙி6 விட்டமின் ரத்தத்தில் குளுகோஸ் அளவை அதிகப்படுத்தி எரிச்சல் இன்றி சாந்தடையச் செய்யும்.

இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தசோகையை நீக்குகிறது. பொட்டாசியம் ஹைப்பர் டென்ஷனைக் குறைக்கிறது. மூளையை சுறுசுறுப்பாக்கி புத்தியை கூர்மையாக்குகிறது.

நெஞ்சு எரிச்சல் குறையும் மலச்சிக்கல் தீரும். உணவுக்கிடையே இரண்டு பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி பசி உணர்வை ஏற்படாமல் செய்கிறது.

நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. ஸ்ட்ரோக்கை தடுக்கலாம். படபடப்பின்றி அமைதியாக பேச நடந்து கொள்ள உதவுகிறது.

பூவன், பேயன், ரஸ்தாலி, மலை வாழைப்பழம், செவ்வாழை, கற்பூர வாழை, மோரீஸ் என பல வகைகள் உண்டு.

பேயன் வாழைப் பழத்தை அம்மை போட்டவர்களுக்கு கொடுத்து சூட்டை வெக்கையை தணிப்பார்கள். ரஸ்தாளிப்பழம் மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதல்ல. பூவன் பழம் மலச்சிக்கலைப் போக்கும். செவ்வாழைப் பழம் சாப்பிட்டால் ரத்த விருத்தியாகும். மலைவாழைப்பழம் முதியவர்களுக்கு ஏற்றது. எளிதில் ஜீரணமாகும். கற்பூரவள்ளி சுவைமிகுந்தது. மோரீஸ் குளிர்ச்சியானது. பேயன் பழம் ருசியானது. வாழை மரம் படித்ததில்லை; கனி கொடுக்க மறந்ததா? என கண்ணதாசன் பாடியது இந்த வகைக் கனிகளைத்தானா?

>>>T I P S>>>

ஊறுகாய்

ஊறுகாயை நாம் விரும்பி உண்கிறோம். பாடம் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் உண்ணக் கூடாது. பாடம் செய்யப்பட்ட பொருட்கள் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த ரசாயனம் நம்மை மந்தமாக்கும். மூளையினைக் கூர்மையாக இயங்க விடாது. புட்டிகளில் விற்கப்படும் பழரசங்கள், சர்பத்துகளும் கெடுதியானவைகளே. எனவே பாடம் செய்யப்பட்ட உணவு வகைகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

தூங்குங்கள்

இதய நோயாளிகள் சாப்பிட்ட பின் சிறிது நேரம் தூங்க, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

நரம்புத்தளர்ச்சி

தினமும் இரவு பசும்பாலில் சிறிது குங்குமப்பூவைக் கலந்து சாப்பிட்டு வந்தால், நாளடைவில் நரம்புத் தளர்ச்சி நோய் குணமாகும்.

தேனும் இஞ்சியும்

ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்து தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது இருமல் இருந்தால் குணமாக்கும்.

வாந்தி

புதினாக்கீரையை இடித்து சாறு எடுத்து அதில் சிறிது சர்க்கரையையும் சேர்த்து சாப்பிட்டால் எந்தவித வாந்தியாக இருந்தாலும் அது உடனே நின்று விடும்.

கொய்யா

கொய்யாப்பழத்தோலில் ஆரஞ்சுப் பழத்தைவிட பத்து மடங்கு அதிகமாக வைட்டமின் `சி' சத்து உள்ளது. எனவே கொய்யாப்பழத்தை எப்பொழுதும் தோலுடன் சாப்பிடுவது நல்லது.

கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு சற்று நேரங்கழித்து அதை இறக்கி வடிகட்டி அந்தக் கஷாயத்தை சிரங்கு, அக்கி போன்ற தோல்வியாதிகள் உள்ள இடத்தை அலம்பினால் அரிப்பு நீங்கி விடும்.

எக்சிமா, சொறி போன்ற தோல் வியாதிகளுக்கு மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் எளிதில் குணமாகும்.

மிளகு

உணவில் தினமும் மிளகை சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதையும், ரத்தம் ஓரிடத்தில் கெட்டியாக அடைத்துக் கொள்வதையும் போக்கக்கூடியது.

லைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு மற்றும் மனிதத் தெளிவுக்கு சரியான மருந்து.

தோல் நோய்கள், ஜலதோஷம் மற்றும் வைரஸ் கிருமிகளால் தோன்றும் வியாதிகளை எதிர்க்கவல்ல சக்தியை உடம்பில் தோற்றுவிக்கும் எந்திரம் ஆப்பிள்.

மற்ற உணவுப்பதார்த்தங்களைப் போல் அல்லாமல் பற்களில் தங்கும் ஆப்பிள் எந்தவித நாற்றத்தையோ அல்லது சொத்தையோ தோற்றுவிப்பதில்லை.

கொலஸ்ட்ரால் அதிகமாக நரம்பினுள் தங்கி ரத்தத்தின் வேகத்தைக் குறைக்கும் போது அதனைத் தடுக்க ஆப்பிளில் மருந்து உள்ளது.

60 கலோரி உள்ள ஒரு ஆப்பிள் உடம்பு எடையை அதிகரிக்காமல் சக்தியையும் ஆற்றலையும் தருகிறது.

எலும்பு தொடர்பான வியாதிகள் எதுவுமே அண்டாது.

தோலை உரிக்காமல் ஆப்பிளை அப்படியே சாப்பிடவேண்டும்.

ஆப்பிள் தோலில் அதிக அளவில் வைட்டமின் `சி' மற்றும் தாமிரச்சத்து உள்ளது.

வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்துச் சொல்கிறது வெங்காயம், வெங்காயத்தை உரித்துக் கொண்டே இருந்தால் இறுதியில் ஒன்றுமே இல்லாமல் போகிறது. அது போலத்தான் வாழ்க்கையும்! மிஞ்சுவது இறுதியில் மரணம்தான்!

கிரேக்க விளையாட்டு வீரர்கள் உணவில் வெங்காயத்தை அதிக அளவில் சேர்த்துக் கொண்டார்கள். இடைப்பட்ட காலங்களில் மருத்துவர்கள் தலைவலி, பாம்புக்கடி ஆகியவற்றுக்கு வெங்காயத்தை மருந்தாகக் கொடுத்தார்கள். வெங்காயச்சாம்பார், வெங்காயப்பச்சடி, வெங்காய சட்னி, வெங்காயப் பக்கோடா ஆகியவைகள் நாவில் எச்சிலை வரவழைப்பவை.

வெங்காயத்தை வெட்டும் போது அதன் செல்கள் உடைந்து ``அல்லினாசிஸ்'' என்ற என்ஸைமை உண்டாக்குகிறது. இது ஸ்ல்பைட்டுகளைப் பிரித்து, கந்தக அமிலங்களை உருவாக்கும். இவை சுலபமாக உடனே ஆவியாகும், வாயுவாகச் சிதைந்து காற்றில் பரவும். கண்களை அடையும்போது ஈரத்துடன் கலந்து நீர்த்த கந்தக அமிலமாக மாறும். இது கண்களை உறுத்த, அந்த எரிச்சலைப் போக்கக் கண்ணீர் உற்பத்தியாகும். வெங்காயத்தை நாம் உரிக்கும் போது, நாம் அழுவதற்கு இதுவே காரணம். வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்து வைத்து வெட்டினால், ``அழுகை'' குறையும்.

வெங்காயத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் சத்து நிறைந்தவை. இதில் கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவு, வெங்காயத்தில் வைட்டமின் சி,பி, பொட்டாசியம், தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளன. ஏகப்பட்ட மருத்துவக் குணங்களைக் கொண்டது.

வெங்காயத்தால் உண்டாகும் நன்மைகள்:-

1. வெங்காயத்தில் ``ப்ளாவனாயிட்'' என்னும் வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இதில் உள்ள குயிர்சிட்டின் என்றும் பொருள் கண்புரை, புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றைத் தடுக்கும்.

2. வெங்காயம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும் பணியைச் செய்கிறது.

3. வெங்காயத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகையை முறியடிக்கும்.

4. வெங்காயச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நுரையீரல், மூச்சுக்குழாய் கோளாறுகள் சரியாகிவிடும்.

5. வெங்காயம் இருமல், சளிக்கு அருமையான மருந்தாகும்.

6. வெங்காயம், எலும்புச் செல்களின் சிதைவை நிறுத்துகிறது. osteoporosos என்னும் எலும்பு-மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.

7. வெங்காயச் சாற்றை கட்டிகள், காயங்கள், மரு போன்றவற்றுக்கு ஊற்றலாம்.

8. வெங்காயத்தை வாரத்தில் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புற்றுநோய் வராது. வெங்காயத்தில் கந்தகக் கலவை இருப்பதே இதற்குக் காரணம்.

9. வெங்காயம் ஆண்மை வீரியத்தைப் பெருக்குகிறது. சில வெங்காயத்தை நசுக்கி வெண்ணெயில் வதக்கி, ஒரு தேக்கரண்டி தேனுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வீரியம் பெருகும்.

10. வெங்காயத்தில் Allg Propy disulphide போன்ற கந்தகக் கலவைகள் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி அதிக இன்சுலின் கிடைக்கச் செய்யும்.

11. வெங்காயத்துண்டை பல்லிலோ, ஈறிலோ வைத்துத் தேய்த்தால் பல் வலி குறையும்.

12. வெங்காயம் வாயில் போட்டு மூன்று நிமிடங்கள் மென்றால் கிருமிகள் அழியும். (பச்சை வெங்காயம்).

13. வெங்காயத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் தடையில்லாமல் இருக்கும்.

14. வெங்காயத்தை ஒரு நாளைக்கு 100 கிராம் சேர்த்துக் கொண்டால் இதயம் வலுவாக அமையும்.

15. வெங்காயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் நிறைந்துள்ளதால் இதய அடைப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

16. வெங்காயம் 2 அல்லது 3 கப் உப்புடன் வேக வைத்து இரவு உணவுக்கு முன், சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

17. வெங்காயம் 10 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அது பாதியாகக் குறைந்ததும் வடிகட்டி, ஆறிய பின்பு, சிறுநீர் எரிச்சலுடன் போகிறவர்களுக்குக் கொடுத்தால் குணமாகும்.

18. வெங்காயம் மூல வியாதியைக் குணப்படுத்தும் ஒப்பற்ற மருந்தாகும்.

19. வெங்காயம் ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. பிரியாணி போன்ற கடினமான உணவுகளுக்கு, தயிருடன் வெங்காயத்தையும் சேர்த்துப் பச்சடியாக்கிப் பரிமாறுவது பண்டைக் காலம் தொட்டு இருந்து வருகிறது.

சியின் கொடுமையைத் தணிப்பதற்காக உண்ணக் கூடாது. உண்பது என்பது ஒருவர் வயிற்றை நிரப்பும் விஷயமில்லை. வாழ்வதற்காக உண்கிறோம். கருப்பை தொடங்கி மண்ணில் பிறந்து முதுமைக் காலம் எட்டும் வரை வாழ்வதற்காக நாம் தொடர்ந்து உண்டுகொண்டே இருக்கிறோம். எனவே பிறப்பு முதல் இறப்பு வரை ஆரோக்கிய உணவை உட்கொள்ள நாம் வலுவான அடித்தளம் அமைக்க வேண்டியது கட்டாயம். இது ஆயுள் முழுமைக்கும் தரமான வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் நமது வாழ்வில் `குழந்தைப் பருவம்' தொடங்கி பல்வேறு பருவங்கள் உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்குமான உணவு வகைகள் வேறுபடுகின்றன. அந்தந்த பருவத்திற்கான சமச்சீரான உணவு முழுமையான வளர்ச்சிக்கு உதவுகிறது.

புதிதாய்ப் பிறந்த பச்சிளம் குழந்தை (0 முதல் 7 நாட்கள் வரை) மற்றும் (0 முதல் 1 மாதம் வரை) மற்றும் பால் குடிக்கும் குழந்தை (0-6 மாதம் வரை)

இந்த வயது பச்சிளம் குழந்தையை `வொரேஷியஸ் டிரிங்கர் அதாவது `அதிகம் பருகும்' குழந்தையாகக் கொள்ள வேண்டும். முதல் நாள் 100 மி.லி. தொடங்கி ஆறு மாதங்களில் 1000 மி.லி. வரை இந்தக் குழந்தைகள் அதிக அளவில் பால் அருந்தும். 12 வார அல்லது 4 கிலோ எடை கொண்ட குழந்தைக்கு தாய்ப்பாலுடன் பழரசச் சாறும் கொடுக்க வேண்டும். பழரசம் தேவையான வைட்டமின் சி சத்தைத் தரும். இருப்பினும் ஆரஞ்ச், அன்னாசி, திராட்சை, தக்காளி பழச்சாறுகளை ஆறு மாதங்கள் வரை நிறுத்தி வைப்பது நல்லது. நாளொன்றுக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுப்பது? என்ற கேள்வி பலருக்கு எழலாம். அதற்கான விடை இதோ:

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு - 24 மணி நேரத்தில் 8 முதல் 10 தடவைகள்

1 மாதக் குழந்தைக்கு - 3 மணி நேர இடைவெளியில், 2-3 மாதக் குழந்தைக்கு - 4 மணி நேர இடைவெளியில். இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுத்தால் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கும்

தாய்ப்பாலுடன் மாற்று உணவு உட்கொள்ளும் குழந்தைப் பருவம் (6 முதல் 12 மாதங்கள்)

தாய்ப்பால் மட்டுமே அருந்தி வந்த நிலையில் இருந்து மாறி திரவ மற்றும் கெட்டியான உணவை உட்கொள்ளும் பருவம். ஆனால், இந்தக் குழந்தையால் கெட்டி உணவை மென்று உண்ண முடியாது. இதற்கு `டிரான்சிடரி டிரிங்கர் / ஈட்டர்' என்று பெயர். எனவே, குழந்தை கொஞ்சம் வளர்ச்சி அடைந்ததும், அதாவது, அதன் எடை இரு மடங்காகும்போதுதான் குறிப்பாக 7 கிலோ எடை அல்லது 6 மாதங்கள் ஆன பிறகே கெட்டி உணவைக் கொடுக்க வேண்டும். குடிப்பதற்கு பால் / பழரசங்கள், தானியங்கள், பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை நன்றாக மிக்சியில் மசித்த நிலையில் கூழாகவோ அல்லது கஞ்சியாகவோ உண்ணக் கொடுக்க வேண்டும். திரவ மற்றும் கெட்டி இரண்டும் சம அளவு இருத்தல் அவசியம். இல்லாவிட்டால் குழந்தைக்கு செரிமானம் ஆகாமல் வாந்தி எடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்க மிதமான சீதோஷணம் தேவை. குழந்தை எடுத்துக் கொள்ளும் உணவு திரவம், அரை கெட்டி, மென்மை கெட்டி நிலை என அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும். குழந்தை தான் உண்ணும் உணவு எத்தகையது என்று தெரிந்துகொள்ள அதைக் கிளறி இறைக்கத் துவங்கும்.

* `திரவ வடிவில் இருப்பதைக் குடிப்பதற்கும் கெட்டியாக இருப்பதை ஸ்பூனில் எடுத்து மென்று தின்பதற்கும் உள்ள வேறுபாட்டை குழந்தைக்கு உணர வைக்க வேண்டும்.

* குழந்தை தனக்குத்தானே உண்ண பழக்க வேண்டும்

* இன்றைய குழந்தைகள் மார்புக் காம்பைச் சுவைத்து பால் அருந்துவது பின்னர் கோப்பை மூலம் பால் அருந்துவது சாதாரண விஷயம்.

* ஏழு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும்போது கோப்பையில் அருந்தத் தொடங்கும். இருப்பினும் தாய்ப்பால் அருந்துவதையே விரும்பும். எனவே, இந்த வயதில் நாளொன்றுக்கு ஒரு முறையேனும் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

* `கெட்டியான உணவைச் சில சமயம் அறிமுகப்படுத்தும்போது குழந்தை எதிர்ப்பைக் காட்டும்.

* ``குழந்தை வெவ்வேறு வகையான உணவுகளை ஏற்றுக் கொள்ளும் சராசரியான வயது :

இரண்டரை முதல் மூன்று மாதங்களில் தானியங்கள்

ஐந்தரை முதல் ஆறு மாதங்களில் இறைச்சி மற்றும் இறைச்சி சூப்

இரண்டரை முதல் மூன்று மாதங்களில் பழங்கள்.

முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உப்பின் அளவுதான். இது குறித்த சில நிரூபிக்கப்படாத அறிவியல் தகவல்களைப் பார்ப்போம்.

1. குழந்தைகளின் உணவில் உப்பைச் சேர்த்தால் அது ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

2. உப்பைச் சேர்த்துக் கொள்வது ஆபத்தானது என்ற கருத்துக்கும் போதிய ஆதாரம் இல்லை.

3. குழந்தை சேர்த்துக்கொள்ளும் உப்பு அதன் செயல்பாடுகளின் பளுவை அதிகரிக்கும்.

தாயின் தனக்குச் சேர்க்கும் அளவு உப்பை குழந்தைக்குத் தரும் உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. அதிகபட்சம் 0.25% மட்டுமே சேர்ப்பது நல்லது.

ஊட்டச் சத்து தேவையைக் கணக்கிடுவது எவ்வாறு?

1. தொடர்ந்து எடை அதிகரித்தல்

2. கொழுப்புச் சத்து சராசரியாக அதிகரித்தல்

3. தசைகள் இறுக்கம் பெறுதல்

4. சந்தோஷமான, நன்கு தூங்கும் குழந்தை தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தல்

கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் :

* `வாந்தி, வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல்

`டாட்லர்' : 1 - 2 ஆண்டுகள் வயதுள்ள குழந்தை இவ்வகைப் பிரிவு குழந்தைகளை `எக்ஸ்ப்ளோரேடரி ஈட்டர்' அதாவது எல்லா உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து உண்ணும் பருவம். எதைக் கண்டாலும் அதை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் இயல்பு. உணவை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் அதைக் கிளறி, கைகளால் எடுத்து உண்ண நினைத்து இறைக்கும். எனவே, கொஞ்சம் மசித்தோ அல்லது நறுக்கியோ குழந்தையின் கைகளில் தர வேண்டும். ஒரு வயதாகும்போது குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்துகொண்டு உண்ணத் தொடங்கும். தாய் உண்ணும் உணவில் சரி பாதி உண்ணும். தானியம், பருப்பு, காய், கனி, பால் மற்றும் பால் பொருட்கள் இதில் அடங்கும். இரண்டு வயதில் முழு முட்டை, இறைச்சி, மீன், கோழி ஆகியவற்றைக் கொடுக்கலாம். புதிய உணவுப் பொருட்களுக்கு மாறும்போது உண்ண மறுத்து கொஞ்சம் அடம் பிடிக்கலாம். தானாக உண்பதற்கு பழக்கப்படுத்துதல் நலம். சுற்றுச் சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்.

கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் :

* ``அதிக அளவு பால் ஊட்டச் சத்து சோகைக்கு வழி வகுக்கும்

* ``சாக் பீஸ், களிமண் ஆகியவற்றை உண் விருப்பம்

ப்ரீ ஸ்கூலர் 3-5 ஆண்டுகள் வயதுள்ள குழந்தை

இவ்வகைக் குழந்தைகள் `ஃபினிகி ஈட்டர்' அதாவது உணவு உண்ண தீவிர முனைவுகள் மேற்கொள்ளும். ஆனால், அனுபவம் இன்மை காரணமாக ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளல் அல்லது வேண்டாம் என்று தவிர்த்தல். சில சமயம் ஒரே மாதிரியான உணவு வகைகளையே உண்ண விரும்பும். ஆனால் இதுவும் நீண்ட நாட்கள் நிலைக்காது.

வீட்டில் மற்றும் பள்ளியில் ஊட்டச் சத்துள்ள உணவை உட்கொள்ள ஊக்கப்படுத்துதல். பிசுபிசுப்பான சர்க்கரைப் பொருட்களை தவிர்க்கவும்.

உணவு உண்ணும் முறை

* `முன் மாதிரியான அறிமுகப்படுத்துதல்

* ``உண்ணும் உணவு குறித்த சில முடிவுகளைக் குழந்தைகளே எடுக்க அனுமதித்தல்

* ``மேஜையில் உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்

உணவு நேரத்தில் அமைதி

கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் :


* ``நோய்க் காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறுதல்

* கொழுப்பு உடலில் சேர்தல்

* பல் சொத்தை

டிவீனேஜர் : 6-9 ஆண்டுகள் வயதுள்ள குழந்தை

இந்தப் பிரிவு குழந்தைகளை `இமிடேடர் ஈட்டர்'அதாவது வீட்டிற்குள்ளேயே ரோல் மாடல்களைத் தேடி அவர்களைப் போன்ற உணவு உண்ண முயலுதல். குழந்தைகள் நன்கு உண்ண உதவுதல். குழந்தைகளின் உணவில் தேவையான ஊட்டச் சத்து இருப்பதை உறுதி செய்தல்.

* ``5-7 ஆண்டுகள் குழந்தை சாதாரண உணவுகளை விரும்பும்

* 6-7 ஆண்டுகள் குழந்தை புதிய உணவு வகைகளை - முன்பு வெறுத்தவற்றை - உண்ண விரும்பும்

* 8 ஆண்டுகள் குழந்தை - உணவுகளால் ஈர்க்கப்படும் - அதீத பசி - முதலில் மறுத்தாலும் பின்னர் உணவின் வாசனை, வண்ணம் ஆகியவற்றால் ஈர்க்கப்படுதல்.

* 9 ஆண்டுகள் குழந்தை - சுவாரஸ்யமான உணவுகள் - உணவு வகைகளை தானே தயாரிக்க விரும்புதல் - வேண்டும் / வேண்டாம் என்று முடிவெடுக்கும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை அறிமுகப்படுத்துதல். உணவு உண்ணும் முறைகளை சொல்லிக் கொடுத்தல். வழிகாட்டுதல்.

* காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்துதல்.

* ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்ண ஊக்கப்படுத்துதல்

* இனிப்பு வகைகளைக் குறைத்தல்

* உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்க உணவு மற்றும் உடற்பயிற்சிகளை ஊக்கப்படுத்துதல். பல் சொத்தை உள்ளிட்ட இடர்கள் ஏற்படாத வகையில் பாதுகாத்தல்

கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள்

* ``நோய்க் காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறுதல்

* ``கொழுப்பு உடலில் சேர்தல்

* பல் சொத்தை

டீனேஜர் அல்லது பருவ வயது 10 -18 வயதுள்ள குழந்தை

இந்தப் பிரிவு குழந்தைகள் `சேலஞ்சர் ஈட்டர்' என்று அழைப்பார்கள். எதையும் சவாலாக எடுத்துக் கொள்ளும் வயதினர் இவர்கள். முன் பருவ வயது (10-12 வருடங்கள்), பருவ வயது (13-15 வருடங்கள்) மற்றும் பின் பருவ வயது (16-28 வருடங்கள்) என்று மூன்றாக இந்தப் பிரிவைப் பிரிக்கலாம்.

போதிய ஊட்டச் சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

* எடை, உயரம் தொடர்ந்து அதிகரித்தல், பாலியல் உறுப்புகள் தோன்றுதல், மாதவிடாய் எய்தல்

* முழுமையான வளர்ச்சிக்கு போதிய கொழுபேற்றல் அவசியம்

கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள்

* சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாடுகள்

* சிறுமிகளுக்கு எடை பற்றிய சிந்தனை

ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீரான உணவு குழந்தையின் வளமான எதிர்காலத்திற்கு உதவும்.