sds

sdsd

sd

sdsd

h u

hu

ஸ்டஃப்டு டமாட்டர்
தேவையானவை: தக்காளி - 10, பொட்டுக்கடலை - 50 கிராம், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 50 கிராம், தேங்காய் துருவல் - கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் - சிறிதளவு
செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் எல்லவற்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் நீர் விட்டுக் கெட்டியாக அரைக்கவும். தக்காளியை நன்கு கழுவி, அதன் மேல் பக்கத்தில் கீறவும். அதற்குள் அரைத்த கலவையை வைத்து, மேலே நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
குறிப்பு: இதை அடிக்கடி செய்து சாப்பிட ரத்த சோகை விலகி, இளமை மேம்படும். உடல் தொப்பை, கொலஸ்ட்ரால், அதிக உடல் எடையை சரிசெய்யும்.


தக்காளி\அவல் ஜீமிக்ஸ் மீல்ஸ்
தேவையானவை: அவல் - 600 கிராம், தக்காளி - 2 கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், வெங்காயம் - 2, மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பூண்டு - 3 பல், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து.. தண்ணீர் விட்டுக் கழுவி வடிகட்டவும். தக்காளியை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டுக் கெட்டியாக அரைத்து... சாறு எடுத்துக் கொள்ளவும். அல்லது தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல், தக்காளிச் சாறு அல்லது தக்காளித் துண்டுகள், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி, பிளாக் சால்ட் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதற்குத் தொட்டுக் கொள்ள பச்சடி ஏற்றது.
குறிப்பு: மதிய உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த கலோரி உணவு இது.

நேச்சுரல் பிரியாணி
தேவையானவை: அரிசி அவல் - 250 கிராம், முளை கட்டி, உலர வைத்த கோதுமை - 250 கிராம், வெங்காயம் - 2, கேரட், தக்காளி - தலா 3, முட்டைகோஸ், பீன்ஸ், வெண்பூசணி, புடலங்காய், சௌசௌ - தலா 100 கிராம், வெள்ளரி - 2, உருளைக்கிழங்கு, குடமிளகாய் - தலா 1, மாதுளை முத்துக்கள் - அரை கப், முளைகட்டிய பாசிப்பயறு - 50 கிராம், முளை கட்டிய வேர்க்கடலை - 100 கிராம், முளைகட்டிய எள் - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பட்டை - 2, கிராம்பு - 3, ஏலக்காய் - 4, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு- 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், இஞ்சி - 50 கிராம், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். முளைகட்டி உலர வைத்த கோதுமையையும் ரவையாக அரைக்கவும். ரவையாக அரைத்த அவல், கோதுமையை தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து... ஊற வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும். முந்திரி, திராட்சையைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில், ஊற வைத்த ரவையாக அரைத்த அவல், கோதுமையுடன் நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, முளை கட்டிய தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சைச் சாறு, இந்துப்பு அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற... நேச்சுரல் பிரியாணி ரெடி!

எலுமிச்சை\அவல் மிக்ஸ் மீல்ஸ்
தேவையானவை: அவல் - 600 கிராம், எலுமிச்சைச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், வெங்காயம், குடமிளகாய் - தலா 2, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பூண்டு - 5 பல், வறுத்த வேர்க்கடலை - 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, கழுவி தண்ணீரை வடித்து ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும்.
ஊற வைத்த அவலுடன் எலுமிச்சைச் சாறு, தேங்காய் துருவல், வறுத்துத் தோல் நீக்கிய வேர்கடலை, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு கலந்து நன்கு கிளறி பரிமாறவும்.

அவல் மிக்ஸர்
தேவையானவை: அரிசி அவல் (அ) சோள அவல் - அரை கிலோ, தேங்காய் துருவல் - அரை கப், நறுக்கிய குடமிளகாய் - ஒன்று, வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 50 கிராம், பொரி - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பொடித்த வெல்லம் - 250 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தப்படுத்தவும். சுத்தப்படுத்திய அவலை, ஒரு பாத்திரத்தில் போட்டு... அதனுடன் வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை, பொரி, நறுக்கிய குடமிளகாய், பொட்டுக்கடலை, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: மாலை நேர டிபனாகவும் பயணத்தின்போது நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடலாம். மணிபர்சுக்கும், உடல் நலத்துக்கும் சேஃபானது இது!

சீரியல்ஸ்\பல்ஸஸ் ஹெல்த் டிரிங்க்
தேவையானவை: கேழ்வரகு, கோதுமை - தலா 250 கிராம், கம்பு - 150 கிராம், பச்சைப்பயறு - 100 கிராம், கொண்டைக்கடலை - 100 கிராம், கொள்ளு - 50 கிராம், வெல்லம் (அ) தேன் - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: தானியங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, 8 மணிநேரம் ஊற வைக்கவும். நீரை வடித்து, துணியில் கட்டி வைக்க, முளைவிடும். முளைவிட்டதும், அவற்றை நன்கு உலர வைத்து அரைக்கவும். அரைத்த மாவை ஈரமில்லாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
தேவைப்படும்போது, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து... வெல்லம் அல்லது தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். காரம் வேண்டும் என்பவர்கள், வெல்லத்துக்கு பதிலாக மிளகுத்தூள், பிளாக் சால்ட் கலந்து பருகலாம். சூடாக சாப்பிட விரும்புபவர்கள்... தண்ணீரில் மாவைக் கரைத்து நன்கு சூடு செய்து வெல்லம் அல்லது மிளகுத்தூள் கலந்து பருகலாம்.
குறிப்பு: இந்த பானம் உடலை வலுவடைய செய்யும். சத்து இல்லாத குழந்தைகளுக்கு இதனை ரெகுலர் உணவாகத் தர... சக்தி கிடைக்கும்.

நொறுக்ஸ் அவல்
தேவையானவை: அவல் - அரை கிலோ, வறுத்த வேர்க் கடலை - 50 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பொடித்த வெல்லம் - 100 கிராம்.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்று சேர்த்து, கலந்து பரிமாறவும். காரம் வேண்டுபவர்கள், நறுக்கிய குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்பு: குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர டிபனாக சாப்பிடக் கொடுக்கலாம்.

வெண்பூசணி அல்வா
தேவையானவை: வெண்பூசணி - அரை கிலோ, தேன் (அ) வெல்லம் - 250 கிராம், பேரீச்சை - 100 கிராம், முந்திரி, திராட்சை - தலா 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - அரை கப்.
செய்முறை: வெண்பூசணியை தோல் சீவி, கழுவி, துருவிக் கொள்ளவும். பேரீச்சையை நன்கு கழுவி, கொட்டை நீக்கி, சிறிதாக நறுக்கவும். வெண்பூசணி துருவலுடன் நறுக்கிய பேரீச்சை, தேன் (அ) பொடித்த வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இதேபோல், கேரட்டிலும் தயார் செய்யலாம்.
குறிப்பு: இது ஒபிஸிட்டி, அல்சர், மூலம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், தொப்பை, மூட்டுவலி பிரச்னைகளை சரி செய்யும். பித்தத்தை சரிசெய்யும். சிறுநீரகக் கல் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால், பலன் கிடைக்கும்.

நேச்சுரல் தயிர்
தேவையானவை: தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். அதனை 'ஹாட் பேக்'கில் விட்டு நன்கு மூடி வைக்க.. தயிர் போல் உறைந்து விடும். இந்த நேச்சுரல் தயிரை நறுக்கிய பழங்களுடன் கலந்து சாப்பிடலாம்.
குறிப்பு: இது, அடுப்பில் வைக்காத பால் என்பதால் கொழுப்பு உண்டாகாது. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சளி தொந்தரவை நீக்கும்.

நெல்லி ஜாமூன்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 50, தேன் - ஒன்றரை கிலோ, பனங்கற்கண்டு - அரை கிலோ.
செய்முறை: நெல்லிக்காயை நன்கு கழுவவும். பிறகு, சுத்தமான ஊசியால்... ஒவ்வொரு நெல்லிகாய் முழுவதிலும் சிறு சிறு துளைகள் இடவும். கண்ணாடி பாட்டிலில் தேனை விட்டு, அதில் துளையிட்ட நெல்லிக்காய், பனங்கற்கண்டு போட்டு ஊற விடவும். கண்ணாடிப் பாட்டிலின் மேல் பகுதியில், மெல்லிய காட்டன் துணியைக் கட்டி.. வெயிலில் ஒரு வாரம் வரை வைத்தெடுத்தால், நெல்லி ஜாமூன் ரெடி!
குறிப்பு: முதுமையை விரட்டும் அற்புத மருந்து இது. தினம் தவறாமல் சாப்பிட... உயர் ரத்த அழுத்தம், ஒபிஸிட்டி போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். சளி, இருமல், தலைவலி விலகும்; கண்பார்வை மேம்படும்.

வொண்டர் ஃபுட்
தேவையானவை: பாசிப்பயறு - 200 கிராம், பொடித்த வெல்லம் - 250 கிராம்.
செய்முறை: பாசிப்பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து ஈரத் துணியில் கட்டி வைக்கவும். அடுத்த எட்டு மணி நேரத்தில் நன்கு முளை விட்டிருக் கும். முளைவிட்ட பாசிப்பயறை, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து, பாலெடுக்கவும். பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இதனை, நீரழிவு நோயாளிகள் வெல்லம் சேர்க்காமல் சாப்பிடலாம். உடம்பில் சக்தியும், நல்ல அழகும் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், காலை உணவாக தினமும் எடுத்துக் கொள்ளலாம். முளைகட்டிய பயிர்களை ஆங்கிலத்தில் வொண்டர் ஃபுட் என்கிறார்கள்.

கேரட் கீர்
தேவையானவை: கேரட் - அரை கிலோ, தேங்காய் துருவல் - அரை கப், பொடித்த வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: கேரட்டை கழுவி, நறுக்கி மிக்ஸியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் அரைத்து வடிகட்டி, தேங்காய்ப்பால் எடுக்கவும்.
வடிகட்டிய கேரட் ஜூஸ், தேங்காய்பால், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், குடல் புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் சாப்பிட... நல்ல பலன் கிடைக்கும்.

கோவைக்காய் ஊறுகாய்
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, இஞ்சி - 100 கிராம், எலுமிச்சம்பழம் - 5, இந்துப்பு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு பிழியவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி, சாறு பிழிந்தெடுக்கவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, நறுக்கிய கோவைக்காய், இந்துப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்க... எண்ணெய் இல்லாத கோவைக்காய் ஊறுகாய் ரெடி!
குறிப்பு: இது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.

கோலா லட்டு
தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ், கோதுமை, கம்பு - தலா 100 கிராம், பொடித்த வெல்லம் - ஒரு கப், முந்திரி - 20, ஏலக்காய்த்தூள் - சிட்டிகை.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தானியங்களையும் 8 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும். பிறகு, ஈரத்துணியில் கட்டி முளைகட்டவும். அந்த முளைகட்டிய தானியங்களை வெயிலில் உலர வைத்து. அரைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி அதில் அரைத்த மாவு, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்க.. கோலா லட்டு தயார்!.
குறிப்பு: உடலில் வலுவில்லாதவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட... சக்தி பெறுவார்கள்.

நெல்லிக்காய் சிப்ஸ்
தேவையானவை: முழு நெல்லிக்காய் - 100
செய்முறை: முழு நெல்லிக்காய்களை கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு, அவற்றை மிதமான வெயிலில் 5-6 நாட்கள் காய வைத்து எடுக்கவும். காய்ந்ததும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.
குறிப்பு: இளமையாக இருக்க வேண்டும் என்பவர்கள் இதைத் தினமும் சாப்பிடலாம்; மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவறாமல் சாப்பிட... நல்ல பலன் கிடைக்கும்.

நேச்சுரல் லட்டு
தேவையானவை: முந்திரி - 200 கிராம், பாதாம், திராட்சை - தலா 100 கிராம், பிஸ்தா - 50 கிராம், பேரீச்சை - 250 கிராம் (கொட்டை நீக்கியது), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பேரீச்சை, திராட்சையை நன்கு கழுவிக் கொள்ளவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து... கடைசிச் சுற்றில் பேரீச்சை, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த இந்தக் கலவை லேசான சூடுடன் இருக்கும்போதே, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க... நேச்சுரல் லட்டு தயார். ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
குறிப்பு: நீண்ட நேரம் பசி தாங்கும் இந்த லட்டு, உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு, மாலை நேர டிபனாக கொடுக்கலாம்.

ஃப்ரூட்ஸ்\அவல் மிக்ஸ்
தேவையானவை: அவல் - அரை கிலோ, திராட்சை - 50 கிராம், நறுக்கிய கொய்யா, ஆப்பிள், பேரீச்சை, முந்திரி - ஒரு கப், பொடித்த வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - ஒரு கப்.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். திராட்சைப் பழத்தை நீரில் ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். பேரீச்சையை கழுவி கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். கழுவிய அவலுடன் நறுக்கிய பழங்கள், திராட்சை, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இது, அசிடிட்டி மற்றும் நெஞ்சு எரிச்சலை சரிசெய்யும்.

பப்பாளிபழ பாயசம்
தேவையானவை: பப்பாளிபழம் (நறுக்கியது) - ஒரு கப், தேங்காய்ப்பால் - அரை கப், வெல்லம் (பொடித்தது) - அரை கப், முந்திரி, திராட்சை - தலா 20, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: நறுக்கிய பப்பாளியை மிக்ஸியில் போட்டு, குறைந்த அளவு வேகத்தில் வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பழக் கலவையை பாத்திரத்தில் விட்டு, அதில் தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் (வெல்லத்துக்கு பதில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்), முந்திரி, திராட்சை, ஏலகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்தால்... பப்பாளிபழப் பாயசம் ரெடி!
ஆப்பிள், மாம்பழம், அன்னாசி, வாழைப்பழம் ஆகிய பழங்களிலும் இதே முறையில் பாயசம் செய்யலாம்.
குறிப்பு: மலச்சிக்கல், தொப்பை, பசியின்மை, குடல்புண், உடல் சூடு போன்ற உடல் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் குணம் இந்த பழ பாயசத்துக்கு இருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும்.

ரபரப்பு-நவீனகால அகராதியில் முதல் சொல். பாராட்டுதலுக்காக ஏங்கும் மனிதமனத்துக்குத் பெரும்பாலும் குழந்தைப்பருவத்தைத் தாண்டியதும் அது கிடைப்பதில்லை.
மாய்ந்து மாய்ந்து உழைக்கும் ஒருவருக்கு‘இந்தா பிடிங்க பத்மபூஷண்’ என கொடுக்க வேண்டாம். ‘‘அட! பரவாயில்லையே. அசத்திட்டியேப்பா!’’ என்ற குறைந்தபட்ச அங்கீகாரம் கூட கிடைக்காத போது பெருகும் சோர்வு. மன அழுத்தமாய் மாறி அது இரத்தக் கொதிப்பாய்க் குத்தவைக்கும்.  இயல்பாய் 120/80 என இருக்க வேண்டிய இரத்தக் கொதிப்பிற்கு வயதாகும் போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90. இதில் மேலே சொல்லப்படும் 140 என்பது இதயம் சுருங்கும் போது உள்ள இரத்த அழுத்தம், 90 என்பது இதயம் விரிவடையும் போது வரும் இரத்த அழுத்தம்.இதயம் விரியும் போதும் இரத்த அழுத்தம் உயர்ந்தால், அதாவது 90-ஐத் தாண்டி 100-110 என அறிவித்தால். ஆபத்து என்பதை உணர வேண்டும். மேல் கணக்கு 140-ஐத் தாண்டும் போது அதற்கான உணவும் மருந்தும் மிக அவசியம்.

சரி எப்படி நமக்கு இரத்தக் கொதிப்பு கூடுகிறது என்பதை அறிந்து கொள்வது? சிலருக்கு காலைவேளைத் தலைவலி,தலைசுற்றல், உட்கார்ந்து எழும் போது லேசான தள்ளாட்டம். ஒரு விதமாய் உடல், கை, கால்களில் ஏற்படும் மதமதப்பு என அறிகுறிகளை காட்டலாம். பல நேரங்களில் அது மணிரத்னம் திரைப்படம் போல அதிகம் பேசாமல் அமைதியாகவும் ஆட்டிப்படைத்துவிடும்.

அப்பா, அம்மாவுக்கு பிரஷர் இருந்தால்.... இரத்தத்தில் சர்க்கரை நோய் இருந்தால்... மன அழுத்தம் நிறைந்த வாழ்விருந்தால்.... சரியான தூக்கம் இல்லாது இருந்தால்.... சிறுநீரக இயக்கம் சரியாக இல்லாதிருந்தால்.... இரத்தக் கொதிப்பு ஏற்படலாம். 40 வயதைக் கடந்த எவரும் ‘குடும்ப டாக்டரிடம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இரத்தக் கொதிப்பை பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். அதிக கட்டுப்படாத சரியாக மருத்துவம் செய்யப்படாத கவனிக்கப்படாத இரத்தக் கொதிப்புதான் மாரடைப்பிற்கு முதல் காரணம்.

அதிக உப்பு ரொம்பத் தப்பு.இயல்பாகவே பல காய்கறிகளில் நமக்குத் தேவையான உப்புச் சத்து அதிகம் உள்ளது. அதைத் தாண்டிய தேவைக்கு மிகச் சிறிய அளவு மட்டும் உப்பு போதுமானது.அதுவும் இரத்தக் கொதிப்பு உள்ளதென்றால், உப்பை மறப்பது நல்லது.

சரி...பாரம்பரியச் சொத்தாக பாட்டியின் காதிலிருந்த பாம்படம் கிடைக்கவில்லை. பாட்டன் வச்சிருந்த பி.பி. மட்டும் வந்திடுச்சு. என்ன சாப்பிடலாம்? தினசரி காலை வேளையில முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப்பாக்கிச் சாப்பிடுங்கள். மதிய உணவில் 5-10 பூண்டுப்பற்கள், தினசரி 50 கிராமிற்கு குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரை அதிகரிக்கும் அத்தனை உணவுகளும் இரத்தக் கொதிப்பைக் குறைக்கும். வாழைத் தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியன அடிக்கடி உணவில் இருப்பது அவசியம். உணவில் எண்ணெய் குறைவாக இருப்பதும்,புலால் உணவை கூடிய மட்டும் தவிர்ப்பதும் நல்லது. ரொம்ப விருப்பப்பட்டால், பொரிக்காத வேகவைத்த மீன் வாரம் ஓரிருமுறை சேர்க்கலாம்.

சீரகம் ரத்தக் கொதிப்பைக் குறைக்கக் கூடியது.நல்ல மணமுள்ள சீரகத்தை எடுத்து வந்து, லேசாய் வறுத்து அதனை மூன்று நாள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாள் எலுமிச்சை சாறிலும், இன்னும் மூன்று நாள் கரும்புச்சாறிலும் ஊற வைத்து உலர்த்தி எடுங்கள். நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வாருங்கள். ‘நாங்க இன்ஸ்டெண்ட் விரும்பி’ என்கிறீர்களா? அருகாமை சித்த மருத்துவரை அணுகுங்கள். சீரகச் சூரணமாய் இது தயார் நிலையில் கிடைக்கும். அதே போல் வெந்தயம் தினசரி பொடி செய்து சாப்பிட,இரத்தக் கொதிப்பிற்கு காரணமாக கொழுப்போ அல்லது கொழுப்பின் வகையான ட்ரைகிளைசரைடு இருப்பின் அதனைக் குறைக்க உதவிடும்.

வெள்ளைத்தாமரை தமிழரின் தமிழ் மருத்துவத்தின் ஒரு ஒப்பற்ற கண்டுபிடிப்பு. அதன் பூவிதழை உலர்த்தி பொடி செய்து நீராகவோ அல்லது நேரடி பொடியாகவோ சாப்பிடுவது இரத்தக் கொதிப்புக்கு சிறப்பான உணவு. அதே போல்  மருதமரப் பட்டை இரத்தக் கொதிப்பைக் குறைக்க உதவுவதுடன், மாரடைப்பைத் தடுக்கும் என்று உலகளாவிய ஆய்வுகள் உறுதிப்படுத்தி வருகின்றன.

இரத்தக் கொதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால்,சரியான இடைவெளியில் அதன் அளவைத் தெரிந்து கட்டுக்குள் உள்ளதா என்பதை குடும்ப மருத்துவரிடம் தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம். மருத்துவர் பரிந்துரைக்காமல் மருந்தை நிறுத்துவதோ, மாற்றுவதோ கூடாது.

மனம் விட்டுச் சிரிப்பதும் குதூகலப்படுவதும் அடிக்கடி நிகழ வேண்டும்.  சின்னதாய் நடனமோ, சிலிர்ப்பூட்டும் அரவணைப்போ, நினைத்து நினைத்து மகிழ வைக்கும் நகைச்சுவையோ ஏதோ ஒன்றிற்காகக் கொஞ்சம் தினசரி மெனக்கெடுங்கள்.அவைதரும் மகிழ்ச்சி இதயம் வரை எட்டிப்பார்த்து ரத்தக்கொதிப்பைக் கட்டாயம் குறைக்கும்.

2 ஆழாக்கு முருங்கைக் கீரையை உப்பு போட்ட தண்ணீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 3 பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாய் இவற்றை பொடிப் பொடியாக நறுக்கி இரண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

லு லிட்டர் தண்ணீரை உப்பு போட்டு கொதிக்க விடவும்.இதில் ஒரு ஆழாக்கு அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரியான முறையில் கிளறவும். இதே கரைசலில் முருங்கைக்கீரையையும் சேர்த்து கிளறிக்கொண்டே வரவேண்டும்.கூழ் பதத்திற்கு இந்த கரைசல் வரும் வரை கிளற வேண்டும்.பின்னர் அரை டீஸ்பூன் பெருங்காயத் தூளை போட்டு சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.

வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் வேகவிடவும்.

200 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் துணியைக் (நீரில் படாமல்) கட்டி வெங்காயத்தை நீராவியில் வேக விடவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வேகவைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வெங்காய மசாலா ரெடி!


ஒரு கப்  வாழைப்பூவை சுத்தம் செய்து வேகவைத்துக் கொள்ளவும். லு கப் கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், கால் டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு இவையனைத்தையும் கடலைப்பருப்பு, வாழைப்பூவுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையெனில் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொண்டு இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.

(ஆவியில் வேக வைத்து எடுப்பதால் B.P. உள்ளவர்களுக்கு நல்ல ஆரோகியமான உணவு.)





* வெங்காயம்

* பூண்டு

* வாழைத்தண்டு

* வாழைப்பூ

* சுரைக்காய்

* பீர்க்கங்காய்

* பார்லி

* சீரகம்

* வெந்தயம்

* பொரிக்காத வேகவைத்த மீன்

* வெள்ளைத்தாமரை

* மருதமரப் பட்டை

* மனம் விட்டுச் சிரிப்பது