ஈஸி சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10-12, தக்காளி சாஸ், கொத்தமல்லி சட்னி - தேவையான அளவு, வெங்காயம், தக்காளி, வெள்ளரி - தேவையான அளவு (வட்டமாக நறுக்கியது), ஜாம் - சிறிதளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கி எடுத்து விடவும். முதல் ஸ்லைஸில் தக்காளி சாஸ் தடவி, அதன் மேல் வெள்ளரித் துண்டை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸை மேலே வைக்கவும். அதன் மேல் கொத்தமல்லி சட்னி தடவி, வெங்காயம் அல்லது தக்காளித் துண்டுகளை வைக்கவும். இன்னொரு ஸ்லைஸ் வைத்து, அதன் மேல் சிறிது ஜாம் தடவி, முக்கோணமாக வெட்டி வைக்க... சாண்ட்விச் ரெடி!
இது, 5 நிமிடத்தில் செய்யக்கூடிய சத்தான டிஷ்.
0 comments:
Post a Comment