பச்சைப் பட்டாணி ஃபைபர் வடை
தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், உளுந்து, பச்சைப் பயறு, நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப், துவரம்பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 4, காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - ஒரு கொத்து, மல்லித்தழை - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுந்து, பச்சைப் பயறை சேர்த்தும், துவரம்பருப்பை தனியாகவும் ஊற வைத்து, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து ரவை போல அரைக்கவும். கொதி நீரில் பச்சைப் பட்டாணியைப் போட்டு எடுத்து தட்டி மாவில் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூள், மல்லித்தழை, நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கெட்டியாகக் கலந்து, வடையாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பச்சை மிளகாயை அரைக்கும்போது சேர்க்கலாம். அல்லது நறுக்கியும் போடலாம்.

0 comments:

Post a Comment