ஆப்பிள் சூப்

ஆப்பிள் சூப்
தேவையானவை: ஆப்பிள் - 1, தக்காளி - 2, பால் - ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள், மைதா மாவு - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை வெந்நீரில் போட்டு தோல் உரிக்கவும். ஆப்பிளைத் துருவி பசும்பாலில் வேக விடவும். வெந்ததும் ஆற வைத்து தக்காளியுடன் மிக்ஸியில் அடிக்கவும். மைதா மாவை லேசாக வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆப்பிள்-தக்காளி ஜூஸ், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு கலந்து சூப் ஸ்டிக்குடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment