பூசணி ஸ்வீட் அப்பம்

பூசணி ஸ்வீட் அப்பம்
தேவையானவை: மஞ்சள் பூசணிக்கீற்று - 1, தேங்காய் துருவல், அரிசி மாவு, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மஞ்சள்பூசணியை நன்றாகத் துருவி, கடாயில் நெய் விட்டு வதக்கி எடுக்கவும். இதனுடன் அரிசி மாவு, தேங்காய் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி, பொன்னிறமாக சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

0 comments:

Post a Comment