மித்தா தகி (ஒரிஸ்ஸா)
தேவையானவை: திக்கான பால் - ஒரு லிட்டர், திக்கான தயிர் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - கால் கிலோ.
செய்முறை: அடிகனமான கடாயில் பாலை விட்டு, மிதமான தீயில் காய்ச்சவும். பால் பாதியாக சுண்டியதும், பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கி, ஆறவிடவும். மற்றொரு கடாயில் சர்க்கரையைப் போட்டு, அது பழுப்பு நிறத்தில் மாறியதும் காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாலும், சர்க்கரையும் சேர்ந்து வந்ததும் இறக்கி, தயிரைச் சேர்த்து கலக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் விட்டு, சூரிய வெளிச்சம்படாத இடத்தில் வைத்து, நன்றாக செட் ஆனதும் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
0 comments:
Post a Comment