தார்வாட் பேடா (கர்நாடகா)

தார்வாட் பேடா (கர்நாடகா)
தேவையானவை: கோதுமை மாவு - ஒன்றரை கப், சர்க்கரை - ஒரு கப், பால், முந்திரித் தூள் (பொடியாக உடைத்துக் கொள்ளவும்) - தலா அரை கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: அடிகனமான ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, கோதுமை மாவைப் போட்டு மிதமான தீயில் வாசனை போகும் வரை வறுக்கவும். இதில், சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்ததும், கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். எல்லாம் ஒன்று திரண்டு, பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, உள்ளங்கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு, உருண்டைகளாக உருட்டி, முந்திரி தூளில் புரட்டி, தட்டில் வைக்கவும்.

0 comments:

Post a Comment