தில்குல் லட்டு (மஹாராஷ்ட்ரா)
தேவையானவை: ஏலக்காய் எசன்ஸ் (அ) ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு, கொப்பரைத் துருவல், வேர்க்கடலை - தலா கால் கப், வெல்லம் - 250 கிராம், வெள்ளை எள் - அரை கிலோ, நெய் - தேவையான அளவு.
செய்முறை: எள்ளை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். கொப்பரைத் துருவலை பிரவுன் கலரில் வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில், ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, வெல்லத்தைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. நன்றாக கொதித்து இளம் சிவப்பாக மாறியதும்... வறுத்த எள், கொப்பரைத் துருவல், வேர்க்கடலை, எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். நன்றாக கெட்டியானதும் இறக்கவும். கையில் நெய் தடவிக் கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும். பார்ப்பதற்கு நம்மூர் பொரி உருண்டை போல இருக்கும்.
0 comments:
Post a Comment