பசியின் கொடுமையைத் தணிப்பதற்காக உண்ணக் கூடாது. உண்பது என்பது ஒருவர் வயிற்றை நிரப்பும் விஷயமில்லை. வாழ்வதற்காக உண்கிறோம். கருப்பை தொடங்கி மண்ணில் பிறந்து முதுமைக் காலம் எட்டும் வரை வாழ்வதற்காக நாம் தொடர்ந்து உண்டுகொண்டே இருக்கிறோம். எனவே பிறப்பு முதல் இறப்பு வரை ஆரோக்கிய உணவை உட்கொள்ள நாம் வலுவான அடித்தளம் அமைக்க வேண்டியது கட்டாயம். இது ஆயுள் முழுமைக்கும் தரமான வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் நமது வாழ்வில் `குழந்தைப் பருவம்' தொடங்கி பல்வேறு பருவங்கள் உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்குமான உணவு வகைகள் வேறுபடுகின்றன. அந்தந்த பருவத்திற்கான சமச்சீரான உணவு முழுமையான வளர்ச்சிக்கு உதவுகிறது. 1. தொடர்ந்து எடை அதிகரித்தல்
புதிதாய்ப் பிறந்த பச்சிளம் குழந்தை (0 முதல் 7 நாட்கள் வரை) மற்றும் (0 முதல் 1 மாதம் வரை) மற்றும் பால் குடிக்கும் குழந்தை (0-6 மாதம் வரை)
இந்த வயது பச்சிளம் குழந்தையை `வொரேஷியஸ் டிரிங்கர் அதாவது `அதிகம் பருகும்' குழந்தையாகக் கொள்ள வேண்டும். முதல் நாள் 100 மி.லி. தொடங்கி ஆறு மாதங்களில் 1000 மி.லி. வரை இந்தக் குழந்தைகள் அதிக அளவில் பால் அருந்தும். 12 வார அல்லது 4 கிலோ எடை கொண்ட குழந்தைக்கு தாய்ப்பாலுடன் பழரசச் சாறும் கொடுக்க வேண்டும். பழரசம் தேவையான வைட்டமின் சி சத்தைத் தரும். இருப்பினும் ஆரஞ்ச், அன்னாசி, திராட்சை, தக்காளி பழச்சாறுகளை ஆறு மாதங்கள் வரை நிறுத்தி வைப்பது நல்லது. நாளொன்றுக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுப்பது? என்ற கேள்வி பலருக்கு எழலாம். அதற்கான விடை இதோ:
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு - 24 மணி நேரத்தில் 8 முதல் 10 தடவைகள்
1 மாதக் குழந்தைக்கு - 3 மணி நேர இடைவெளியில், 2-3 மாதக் குழந்தைக்கு - 4 மணி நேர இடைவெளியில். இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுத்தால் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கும்
தாய்ப்பாலுடன் மாற்று உணவு உட்கொள்ளும் குழந்தைப் பருவம் (6 முதல் 12 மாதங்கள்)
தாய்ப்பால் மட்டுமே அருந்தி வந்த நிலையில் இருந்து மாறி திரவ மற்றும் கெட்டியான உணவை உட்கொள்ளும் பருவம். ஆனால், இந்தக் குழந்தையால் கெட்டி உணவை மென்று உண்ண முடியாது. இதற்கு `டிரான்சிடரி டிரிங்கர் / ஈட்டர்' என்று பெயர். எனவே, குழந்தை கொஞ்சம் வளர்ச்சி அடைந்ததும், அதாவது, அதன் எடை இரு மடங்காகும்போதுதான் குறிப்பாக 7 கிலோ எடை அல்லது 6 மாதங்கள் ஆன பிறகே கெட்டி உணவைக் கொடுக்க வேண்டும். குடிப்பதற்கு பால் / பழரசங்கள், தானியங்கள், பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை நன்றாக மிக்சியில் மசித்த நிலையில் கூழாகவோ அல்லது கஞ்சியாகவோ உண்ணக் கொடுக்க வேண்டும். திரவ மற்றும் கெட்டி இரண்டும் சம அளவு இருத்தல் அவசியம். இல்லாவிட்டால் குழந்தைக்கு செரிமானம் ஆகாமல் வாந்தி எடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்க மிதமான சீதோஷணம் தேவை. குழந்தை எடுத்துக் கொள்ளும் உணவு திரவம், அரை கெட்டி, மென்மை கெட்டி நிலை என அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும். குழந்தை தான் உண்ணும் உணவு எத்தகையது என்று தெரிந்துகொள்ள அதைக் கிளறி இறைக்கத் துவங்கும்.
* `திரவ வடிவில் இருப்பதைக் குடிப்பதற்கும் கெட்டியாக இருப்பதை ஸ்பூனில் எடுத்து மென்று தின்பதற்கும் உள்ள வேறுபாட்டை குழந்தைக்கு உணர வைக்க வேண்டும்.
* குழந்தை தனக்குத்தானே உண்ண பழக்க வேண்டும்
* இன்றைய குழந்தைகள் மார்புக் காம்பைச் சுவைத்து பால் அருந்துவது பின்னர் கோப்பை மூலம் பால் அருந்துவது சாதாரண விஷயம்.
* ஏழு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும்போது கோப்பையில் அருந்தத் தொடங்கும். இருப்பினும் தாய்ப்பால் அருந்துவதையே விரும்பும். எனவே, இந்த வயதில் நாளொன்றுக்கு ஒரு முறையேனும் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
* `கெட்டியான உணவைச் சில சமயம் அறிமுகப்படுத்தும்போது குழந்தை எதிர்ப்பைக் காட்டும்.
* ``குழந்தை வெவ்வேறு வகையான உணவுகளை ஏற்றுக் கொள்ளும் சராசரியான வயது :
இரண்டரை முதல் மூன்று மாதங்களில் தானியங்கள்
ஐந்தரை முதல் ஆறு மாதங்களில் இறைச்சி மற்றும் இறைச்சி சூப்
இரண்டரை முதல் மூன்று மாதங்களில் பழங்கள்.
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உப்பின் அளவுதான். இது குறித்த சில நிரூபிக்கப்படாத அறிவியல் தகவல்களைப் பார்ப்போம்.
1. குழந்தைகளின் உணவில் உப்பைச் சேர்த்தால் அது ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
2. உப்பைச் சேர்த்துக் கொள்வது ஆபத்தானது என்ற கருத்துக்கும் போதிய ஆதாரம் இல்லை.
3. குழந்தை சேர்த்துக்கொள்ளும் உப்பு அதன் செயல்பாடுகளின் பளுவை அதிகரிக்கும்.
தாயின் தனக்குச் சேர்க்கும் அளவு உப்பை குழந்தைக்குத் தரும் உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. அதிகபட்சம் 0.25% மட்டுமே சேர்ப்பது நல்லது.
ஊட்டச் சத்து தேவையைக் கணக்கிடுவது எவ்வாறு?
2. கொழுப்புச் சத்து சராசரியாக அதிகரித்தல்
3. தசைகள் இறுக்கம் பெறுதல்
4. சந்தோஷமான, நன்கு தூங்கும் குழந்தை தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தல்
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் :
* `வாந்தி, வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல்
`டாட்லர்' : 1 - 2 ஆண்டுகள் வயதுள்ள குழந்தை இவ்வகைப் பிரிவு குழந்தைகளை `எக்ஸ்ப்ளோரேடரி ஈட்டர்' அதாவது எல்லா உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து உண்ணும் பருவம். எதைக் கண்டாலும் அதை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் இயல்பு. உணவை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் அதைக் கிளறி, கைகளால் எடுத்து உண்ண நினைத்து இறைக்கும். எனவே, கொஞ்சம் மசித்தோ அல்லது நறுக்கியோ குழந்தையின் கைகளில் தர வேண்டும். ஒரு வயதாகும்போது குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்துகொண்டு உண்ணத் தொடங்கும். தாய் உண்ணும் உணவில் சரி பாதி உண்ணும். தானியம், பருப்பு, காய், கனி, பால் மற்றும் பால் பொருட்கள் இதில் அடங்கும். இரண்டு வயதில் முழு முட்டை, இறைச்சி, மீன், கோழி ஆகியவற்றைக் கொடுக்கலாம். புதிய உணவுப் பொருட்களுக்கு மாறும்போது உண்ண மறுத்து கொஞ்சம் அடம் பிடிக்கலாம். தானாக உண்பதற்கு பழக்கப்படுத்துதல் நலம். சுற்றுச் சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்.
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் :
* ``அதிக அளவு பால் ஊட்டச் சத்து சோகைக்கு வழி வகுக்கும்
* ``சாக் பீஸ், களிமண் ஆகியவற்றை உண் விருப்பம்
ப்ரீ ஸ்கூலர் 3-5 ஆண்டுகள் வயதுள்ள குழந்தை
இவ்வகைக் குழந்தைகள் `ஃபினிகி ஈட்டர்' அதாவது உணவு உண்ண தீவிர முனைவுகள் மேற்கொள்ளும். ஆனால், அனுபவம் இன்மை காரணமாக ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளல் அல்லது வேண்டாம் என்று தவிர்த்தல். சில சமயம் ஒரே மாதிரியான உணவு வகைகளையே உண்ண விரும்பும். ஆனால் இதுவும் நீண்ட நாட்கள் நிலைக்காது.
வீட்டில் மற்றும் பள்ளியில் ஊட்டச் சத்துள்ள உணவை உட்கொள்ள ஊக்கப்படுத்துதல். பிசுபிசுப்பான சர்க்கரைப் பொருட்களை தவிர்க்கவும்.
உணவு உண்ணும் முறை
* `முன் மாதிரியான அறிமுகப்படுத்துதல்
* ``உண்ணும் உணவு குறித்த சில முடிவுகளைக் குழந்தைகளே எடுக்க அனுமதித்தல்
* ``மேஜையில் உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்
உணவு நேரத்தில் அமைதி
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் :
* ``நோய்க் காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறுதல்
* கொழுப்பு உடலில் சேர்தல்
* பல் சொத்தை
டிவீனேஜர் : 6-9 ஆண்டுகள் வயதுள்ள குழந்தை
இந்தப் பிரிவு குழந்தைகளை `இமிடேடர் ஈட்டர்'அதாவது வீட்டிற்குள்ளேயே ரோல் மாடல்களைத் தேடி அவர்களைப் போன்ற உணவு உண்ண முயலுதல். குழந்தைகள் நன்கு உண்ண உதவுதல். குழந்தைகளின் உணவில் தேவையான ஊட்டச் சத்து இருப்பதை உறுதி செய்தல்.
* ``5-7 ஆண்டுகள் குழந்தை சாதாரண உணவுகளை விரும்பும்
* 6-7 ஆண்டுகள் குழந்தை புதிய உணவு வகைகளை - முன்பு வெறுத்தவற்றை - உண்ண விரும்பும்
* 8 ஆண்டுகள் குழந்தை - உணவுகளால் ஈர்க்கப்படும் - அதீத பசி - முதலில் மறுத்தாலும் பின்னர் உணவின் வாசனை, வண்ணம் ஆகியவற்றால் ஈர்க்கப்படுதல்.
* 9 ஆண்டுகள் குழந்தை - சுவாரஸ்யமான உணவுகள் - உணவு வகைகளை தானே தயாரிக்க விரும்புதல் - வேண்டும் / வேண்டாம் என்று முடிவெடுக்கும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை அறிமுகப்படுத்துதல். உணவு உண்ணும் முறைகளை சொல்லிக் கொடுத்தல். வழிகாட்டுதல்.
* காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்துதல்.
* ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்ண ஊக்கப்படுத்துதல்
* இனிப்பு வகைகளைக் குறைத்தல்
* உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்க உணவு மற்றும் உடற்பயிற்சிகளை ஊக்கப்படுத்துதல். பல் சொத்தை உள்ளிட்ட இடர்கள் ஏற்படாத வகையில் பாதுகாத்தல்
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள்
* ``நோய்க் காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறுதல்
* ``கொழுப்பு உடலில் சேர்தல்
* பல் சொத்தை
டீனேஜர் அல்லது பருவ வயது 10 -18 வயதுள்ள குழந்தை
இந்தப் பிரிவு குழந்தைகள் `சேலஞ்சர் ஈட்டர்' என்று அழைப்பார்கள். எதையும் சவாலாக எடுத்துக் கொள்ளும் வயதினர் இவர்கள். முன் பருவ வயது (10-12 வருடங்கள்), பருவ வயது (13-15 வருடங்கள்) மற்றும் பின் பருவ வயது (16-28 வருடங்கள்) என்று மூன்றாக இந்தப் பிரிவைப் பிரிக்கலாம்.
போதிய ஊட்டச் சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?
* எடை, உயரம் தொடர்ந்து அதிகரித்தல், பாலியல் உறுப்புகள் தோன்றுதல், மாதவிடாய் எய்தல்
* முழுமையான வளர்ச்சிக்கு போதிய கொழுபேற்றல் அவசியம்
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள்
* சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாடுகள்
* சிறுமிகளுக்கு எடை பற்றிய சிந்தனை
ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீரான உணவு குழந்தையின் வளமான எதிர்காலத்திற்கு உதவும்.
Welcome
Blog Archive
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment