|
| | | வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்துச் சொல்கிறது வெங்காயம், வெங்காயத்தை உரித்துக் கொண்டே இருந்தால் இறுதியில் ஒன்றுமே இல்லாமல் போகிறது. அது போலத்தான் வாழ்க்கையும்! மிஞ்சுவது இறுதியில் மரணம்தான்!
கிரேக்க விளையாட்டு வீரர்கள் உணவில் வெங்காயத்தை அதிக அளவில் சேர்த்துக் கொண்டார்கள். இடைப்பட்ட காலங்களில் மருத்துவர்கள் தலைவலி, பாம்புக்கடி ஆகியவற்றுக்கு வெங்காயத்தை மருந்தாகக் கொடுத்தார்கள். வெங்காயச்சாம்பார், வெங்காயப்பச்சடி, வெங்காய சட்னி, வெங்காயப் பக்கோடா ஆகியவைகள் நாவில் எச்சிலை வரவழைப்பவை.
வெங்காயத்தை வெட்டும் போது அதன் செல்கள் உடைந்து ``அல்லினாசிஸ்'' என்ற என்ஸைமை உண்டாக்குகிறது. இது ஸ்ல்பைட்டுகளைப் பிரித்து, கந்தக அமிலங்களை உருவாக்கும். இவை சுலபமாக உடனே ஆவியாகும், வாயுவாகச் சிதைந்து காற்றில் பரவும். கண்களை அடையும்போது ஈரத்துடன் கலந்து நீர்த்த கந்தக அமிலமாக மாறும். இது கண்களை உறுத்த, அந்த எரிச்சலைப் போக்கக் கண்ணீர் உற்பத்தியாகும். வெங்காயத்தை நாம் உரிக்கும் போது, நாம் அழுவதற்கு இதுவே காரணம். வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்து வைத்து வெட்டினால், ``அழுகை'' குறையும்.
வெங்காயத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் சத்து நிறைந்தவை. இதில் கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவு, வெங்காயத்தில் வைட்டமின் சி,பி, பொட்டாசியம், தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளன. ஏகப்பட்ட மருத்துவக் குணங்களைக் கொண்டது.
வெங்காயத்தால் உண்டாகும் நன்மைகள்:-
1. வெங்காயத்தில் ``ப்ளாவனாயிட்'' என்னும் வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இதில் உள்ள குயிர்சிட்டின் என்றும் பொருள் கண்புரை, புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றைத் தடுக்கும்.
2. வெங்காயம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும் பணியைச் செய்கிறது.
3. வெங்காயத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகையை முறியடிக்கும்.
4. வெங்காயச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நுரையீரல், மூச்சுக்குழாய் கோளாறுகள் சரியாகிவிடும்.
5. வெங்காயம் இருமல், சளிக்கு அருமையான மருந்தாகும்.
6. வெங்காயம், எலும்புச் செல்களின் சிதைவை நிறுத்துகிறது. osteoporosos என்னும் எலும்பு-மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.
7. வெங்காயச் சாற்றை கட்டிகள், காயங்கள், மரு போன்றவற்றுக்கு ஊற்றலாம்.
8. வெங்காயத்தை வாரத்தில் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புற்றுநோய் வராது. வெங்காயத்தில் கந்தகக் கலவை இருப்பதே இதற்குக் காரணம்.
9. வெங்காயம் ஆண்மை வீரியத்தைப் பெருக்குகிறது. சில வெங்காயத்தை நசுக்கி வெண்ணெயில் வதக்கி, ஒரு தேக்கரண்டி தேனுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வீரியம் பெருகும்.
10. வெங்காயத்தில் Allg Propy disulphide போன்ற கந்தகக் கலவைகள் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி அதிக இன்சுலின் கிடைக்கச் செய்யும்.
11. வெங்காயத்துண்டை பல்லிலோ, ஈறிலோ வைத்துத் தேய்த்தால் பல் வலி குறையும்.
12. வெங்காயம் வாயில் போட்டு மூன்று நிமிடங்கள் மென்றால் கிருமிகள் அழியும். (பச்சை வெங்காயம்).
13. வெங்காயத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் தடையில்லாமல் இருக்கும்.
14. வெங்காயத்தை ஒரு நாளைக்கு 100 கிராம் சேர்த்துக் கொண்டால் இதயம் வலுவாக அமையும்.
15. வெங்காயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் நிறைந்துள்ளதால் இதய அடைப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
16. வெங்காயம் 2 அல்லது 3 கப் உப்புடன் வேக வைத்து இரவு உணவுக்கு முன், சுடு சாதத்துடன் பி சைந்து சாப்பிட இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
17. வெங்காயம் 10 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அது பாதியாகக் குறைந்ததும் வடிகட்டி, ஆறிய பின்பு, சிறுநீர் எரிச்சலுடன் போகிறவர்களுக்குக் கொடுத்தால் குணமாகும்.
18. வெங்காயம் மூல வியாதியைக் குணப்படுத்தும் ஒப்பற்ற மருந்தாகும்.
19. வெங்காயம் ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. பிரியாணி போன்ற கடினமான உணவுகளுக்கு, தயிருடன் வெங்காயத்தையும் சேர்த்துப் பச்சடியாக்கிப் பரிமாறுவது பண்டைக் காலம் தொட்டு இருந்து வருகிறது. |
|
0 comments:
Post a Comment