வெண்பூசணி அல்வா
தேவையானவை: வெண்பூசணி - அரை கிலோ, தேன் (அ) வெல்லம் - 250 கிராம், பேரீச்சை - 100 கிராம், முந்திரி, திராட்சை - தலா 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - அரை கப்.
செய்முறை: வெண்பூசணியை தோல் சீவி, கழுவி, துருவிக் கொள்ளவும். பேரீச்சையை நன்கு கழுவி, கொட்டை நீக்கி, சிறிதாக நறுக்கவும். வெண்பூசணி துருவலுடன் நறுக்கிய பேரீச்சை, தேன் (அ) பொடித்த வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இதேபோல், கேரட்டிலும் தயார் செய்யலாம்.
குறிப்பு: இது ஒபிஸிட்டி, அல்சர், மூலம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், தொப்பை, மூட்டுவலி பிரச்னைகளை சரி செய்யும். பித்தத்தை சரிசெய்யும். சிறுநீரகக் கல் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால், பலன் கிடைக்கும்.
0 comments:
Post a Comment