கேரட் கீர்
தேவையானவை: கேரட் - அரை கிலோ, தேங்காய் துருவல் - அரை கப், பொடித்த வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: கேரட்டை கழுவி, நறுக்கி மிக்ஸியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும் அரைத்து வடிகட்டி, தேங்காய்ப்பால் எடுக்கவும்.
வடிகட்டிய கேரட் ஜூஸ், தேங்காய்பால், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், குடல் புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் சாப்பிட... நல்ல பலன் கிடைக்கும்.
0 comments:
Post a Comment