சீரியல்ஸ்\பல்ஸஸ் ஹெல்த் டிரிங்க்
செய்முறை: தானியங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, 8 மணிநேரம் ஊற வைக்கவும். நீரை வடித்து, துணியில் கட்டி வைக்க, முளைவிடும். முளைவிட்டதும், அவற்றை நன்கு உலர வைத்து அரைக்கவும். அரைத்த மாவை ஈரமில்லாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
தேவைப்படும்போது, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து... வெல்லம் அல்லது தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். காரம் வேண்டும் என்பவர்கள், வெல்லத்துக்கு பதிலாக மிளகுத்தூள், பிளாக் சால்ட் கலந்து பருகலாம். சூடாக சாப்பிட விரும்புபவர்கள்... தண்ணீரில் மாவைக் கரைத்து நன்கு சூடு செய்து வெல்லம் அல்லது மிளகுத்தூள் கலந்து பருகலாம்.
குறிப்பு: இந்த பானம் உடலை வலுவடைய செய்யும். சத்து இல்லாத குழந்தைகளுக்கு இதனை ரெகுலர் உணவாகத் தர... சக்தி கிடைக்கும்.
0 comments:
Post a Comment