நேச்சுரல் லட்டு
தேவையானவை: முந்திரி - 200 கிராம், பாதாம், திராட்சை - தலா 100 கிராம், பிஸ்தா - 50 கிராம், பேரீச்சை - 250 கிராம் (கொட்டை நீக்கியது), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பேரீச்சை, திராட்சையை நன்கு கழுவிக் கொள்ளவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து... கடைசிச் சுற்றில் பேரீச்சை, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த இந்தக் கலவை லேசான சூடுடன் இருக்கும்போதே, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க... நேச்சுரல் லட்டு தயார். ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
குறிப்பு: நீண்ட நேரம் பசி தாங்கும் இந்த லட்டு, உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு, மாலை நேர டிபனாக கொடுக்கலாம்.
0 comments:
Post a Comment