பூரணத்துக்கு: கேரட், முட்டைகோஸ் துருவல் - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
கேரட், முட்டைகோஸ் துருவலை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அவற்றுடன் உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும். பூரணம் ரெடி.
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து எடுத்து... கிண்ணம் போல் செய்து கொள்ளவும். அதனுள் காய்கறிக் கலவையை வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்க... விட்டமின் சத்து நிறைந்த காய்கறி கொழுக்கட்டை ரெடி!
காரத்துக்கு பதில், இனிப்பு சேர்த்தும் செய்யலாம்.
0 comments:
Post a Comment