பூரணத்துக்கு: சோயா உருண்டைகள் - 20, வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும். கொதி நீரில் சோயா உருண்டைகளைப் போட்டு 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி, பிழியவும். இதனை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றி எடுக்க... துருவல் போல வரும். பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். அதனுடன் சோயா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து சுருளக் கிளறவும். தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து சொப்பு செய்து, சோயா கலவையை வைத்து மூடவும். அதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்த பின் ஆவியில் வேக வைத்து எடுக்க... புரோட்டீன் ரிச் சோயா கொழுக்கட்டை தயார்.
0 comments:
Post a Comment