சர்க்கரைவள்ளி லெமன் புட்டு
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சுட்டு உதிர்த்துக் கொள்ளவும்) - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை, எள் பொடி (இரண்டும் சேர்த்து) - கால் கப், கடுகு, பெருங்காயம், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் புரட்டி, உதிர்த்த வள்ளிக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை, எள் பொடிகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இறக்கும்போது, எலுமிச்சைச் சாறு விட்டு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
0 comments:
Post a Comment