அருவருப்பான இடங்களில் தயாராகும் உணவுகளே சீதளபேதி ஏற்பட முக்கியக் காரணம். குழந்தைகளை மட்டுமல்ல, எல்லா வயதுக்காரர்களையும் இது தாக்குகிறது. சாலையோரக் கடைகளில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். சுத்தமான இடத்தில் வசிப்பதும், சுத்தமாகச் சமைத்துச் சாப்பிடுவதும் நம் குடலைப் பாதுகாக்க உதவும். சீதளபேதிக்கான நோய் நுண்மங்கள் பெருங்குடலில் தோன்றுகின்றன. அசைவ உணவில் உள்ள புரதம் வறுவல்வகை, மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், ஜீரணமாக இயலாத அளவிற்கு அதிகமாக கொழுப்பு உணவுகள் உண்பது போன்றவற்றால் வயிற்று அலைச்சல் ஏற்படுகிறது. இதனால் மலத்தின் மூலம் இரத்தமும் சலமும் வெளியேறுகின்றன. உடலில் சோர்வும் ஏற்படுகிறது. சீதளபேதி ஆனவுடனேயே கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு டம்ளர் கெட்டியான மோரில் கலந்து அருந்த வேண்டும். குடலில் உள்ள நோய் நுண்மங்களை அழிப்பதில் மஞ்சள் தூளிற்குப் பெரும்பங்குண்டு. எனவே, மஞ்சள் தூள் கலந்த மோரை தினமும் 4, 5 வேளையாவது அருந்தவும். கெட்டியான மோர் அல்லது தயிர் சேர்த்து வந்தால் தயிரில் குடலைச் சுத்தம் செய்யும் லாக்டோபாசில்ஸ் அசிடோபிலஸ், மற்றும் ஸ்டிரப்டோகோகஸ்லாட்டிஸ் என்னும் இரு நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன. இத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் ஏஜி (கிநி) என்ற பொருளும் தயிரில் உள்ளது. இதனால் கெடுதல் செய்யும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும். கைக் குழந்தைகளின் சீதளபேதியைக் கட்டுப்படுத்த உடனடியாக மருத்துவரை நாடவும். மற்ற வயதுக் குழந்தைகளுக்கு ஆப்பிள் துண்டுகளைக் கொடுக்கவும். ஒரு நாளில் மூன்று ஆப்பிள்களைத் துண்டுகளாக்கிச் சாப்பிட்டுவந்தால் சீதளபேதி கட்டுப்படுவதாக அமெரிக்க மருத்துவக் கழகம் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. டாக்டரின் மருந்துகளுடன் ஆப்பிள் பழமும் சாப்பிட்டுவரவும். மற்ற வயதுக்காரர்கள் உணவு மருத்துவத்தைப் பின்பற்றி விரைந்து குணம் பெறலாம். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சீதளபேதி என்றால் மருத்துவரே சிறந்த முறையில் உதவ முடியும். முதலில் குடல் பகுதியில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருட்களையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்ற வேண்டும். இதற்கு எளிய வழி ஆரஞ்சுச்சாறும், தண்ணீரும்தான். கெட்டியான மோர் மூன்று முறையும், ஆரஞ்சுச் சாறு மூன்று முறையும் அருந்தினால் போதும். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்தலாம். மூன்று நாட்கள் அருந்தும் ஆரஞ்சுச் சாறும் கெட்டியான மோரும் குடலை நன்கு புதுப்பித்து விடும். சீதளபேதியும் முற்றிலும் குணமாகிவிடும். சீதளபேதிக்குப் பிறகு பசித்தால் தயிர்சாதம், ஆப்பிள், வில்வப்பழம், பால், வாழைப்பழம் சாப்பிடலாம். மாதுளம் பழமும், எலுமிச்சம் பழமும் வெங்காயமும் சீதளபேதியை உடனுக்குடன் கட்டுப்படுத்தும். குழந்தைக்குத் தாய்ப்பாலை நன்கு கொடுத்தால் போதும். குழந்தைகள் மிகவும் வெறுக்கும் உணவை வாயில் திணித்து சாப்பிட வைத்தாலும் சீதளபேதி அபாயம் உண்டு. எனவே, இதில் கவனமாக இருக்க வேண்டும். சீதளபேதி குணமானாலும் மூன்று மாதங்கள் வரை வீட்டிலோ வெளியிடங்களிலோ அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும். தினமும் இருவேளை தயிர் சேர்ப்பதன் மூலம் சீதளபேதியை முற்றிலும் தவிர்க்கலாம்.
NAGARAJI
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment