NAGARAJI B இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க தினமும் ஐந்தாறு பூண்டுப் பற்களை நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் போதும். இதயநோய், ஆஸ்துமா என எதுவும் எட்டிப் பார்க்காது. இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாகவே உணவில் வெள்ளைப்பூண்டு சேர்த்து வருகிறார்கள். 2008ஆம் ஆண்டு பிர்மிங்ஹாமிலுள்ள அலபாமா பல்கலைக்கழக நிபுணர்கள் நோய் நுண்மங்கள், நோயைப் பரப்பும் காளான்கள் ஆகியவை உடலுக்குள் செல்லாதபடி தடுக்கும் சக்தி வெள்ளைப்பூண்டிற்கு உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இதயம் மிக வலுவாக இருந்து இயங்கும் என்பதும் இவர்களது கருத்தாகும்.
டேவிட் கிராஸ் என்ற மருத்துவர் தலைமையில் அமைந்த அமெரிக்க ஆராய்ச்சிக் குழுவினர் வெள்ளைப்பூண்டு நுட்பமான மதிப்புமிக்க உயர்ந்த டானிக் என கண்டுபிடித்துள்ளனர். இது உடலுக்குள்ளேயே குறிப்பிட்ட பொருளைத் தயாரித்து இரத்தக்குழாய்கள் குறுகிவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இரத்த உறைவு ஏற்படாமல் தடுக்கிறது.
இதனால் இருதயம் சிறப்பாக தொடர்ந்து இயங்குகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.
பூண்டில் ஒருவித நெடி நிலவக் காரணம் அதில் உள்ள தாவரக் கந்தகம்தான். இந்தப் பொருளுக்கு அலிசின் என்று பெயர். பூண்டு நாற்றம் பலருக்குப் பிடிக்காது.
ஆனால், இந்த அலிசின் என்ற பொருள் இந்த ஓட்டம் தடைபடாமல், இரத்தம் உறையாமல், இரத்தக்குழாய்களை வலுவாக வைக்கிறது. கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது. எனவே பூண்டை இதன் வாடைக்காகத் தவிர்ப்பது நல்லது அல்ல.
அலபாமா மாநில மருத்துவக் கழக ஆராய்ச்சியின் புதிய முடிவில் அலிசினுடன் பூண்டில் உள்ள இன்னொரு இரசாயணம் தூதுவராகச் சேர்ந்து வளர்சிதை மாற்றம் அடைகிறது. இந்தப் பொருளும் இரத்தக்குழாயின் துப்புரவுத் தொழிலாளிபோல் வேலை செய்கிறது. இதனால் இருதயத்திற்கும் சீராக இரத்தம் செல்கிறது.
அலிசின் பொருள் பிரிகிறது. அதில் இருந்து அலிசின் இரத்த சிவப்பு அணுக்களுடன் நன்கு இணைந்து ஹைட்ரஜன் சல்பைடாக பி2ஷி மாறுகிறது. இந்த ஹைட்ரஜன் சல்பைடு இரத்தக்குழாய் செல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நல்ல பாதுகாவலனாகும். இது குறைந்த அளவே சுரந்தாலும் இரத்தக் குழாய்களில் உள்ள அனைத்து செல்களிலும் இந்த இரசாயனம் சங்கமித்துவிடுகிறது.
இரசாயன மருந்துகள் மூலம், உடலில் சிவப்பு அணுக்களில் ஹைட்ரஜன் சல்பைடு தாமதமாகத்தான் உருவாகுகிறது. ஆனால், பூண்டைச் சாப்பிட்ட உடனேயே ஹைட்ரஜன் சல்பைடு இரத்தத்தில் உருவாவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள் இதனை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
இரத்த செல்களின் மெல்லிய தோல், அதாவது சவ்வுப் பகுதி சீராக இருக்க ஹைட்ரஜன் சல்பைடு மிகவும் முக்கியம்.
உணவில் பூண்டு சேர்த்து வருபவர்களுக்கு இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராக இருப்பதால் இரத்த அழுத்தம் (இரத்தக் கொதிப்பு) வரும் வாய்ப்பும் குறைகிறது. மேலும் நுரையீரல்களுக்கும் ஆக்ஸிஜன் நன்கு கிடைப்பதால் ஆஸ்துமா நோய் உறுதியாகத் தடுக்கப்படுகிறது.
இரத்தஓட்டகம் தடையின்றிச் சீராக இருப்பதால் முக்கியமான எல்லா உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் அதிகமாகவே கிடைத்து ஆரோக்கியமாகவே தொடர்ந்து வாழலாம்.
பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் மருந்துக்கடைகளில் கார்லிக் பூண்டு மாத்திரை (பியர்ல்ஸ்) தாருங்கள் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ஆனால் இதன் விலை அதிகம். பூண்டைத் தள்ளுபடி செய்பவர்கள் பூண்டை முடிந்தவரை சேர்த்துச் சமைத்து நன்கு நலம் பெறலாம்.
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment