NAGARAJI>B

தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். இதில் உள்ள துத்தநாக உப்பு லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும். எனவே அதிகம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டாலும் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிகம் சாப்பிட மனமும் அறிவும் விரும்பாது. காலையோ அல்லது மதியமோ சாப்பிடும் இந்த காராமணி (தட்டைப்பயிறு) சுண்டலே போதும். முடிந்தால் மதியம் சாதத்தில் பாசிப்பருப்புக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம். உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இந்த இரண்டு உணவுகளால் விரைந்து அதிக எடையைக் குறைத்துவிடலாம். சுண்டலும் பருப்பும் பசி எடுக்காதபடி தவிர்ப்பதால் ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்பும் எரிந்துவிடும். அதிகம் சாப்பிட ஆசை இருந்தாலும் இந்த இரு உணவுகளும் சாப்பிட முடியாமல் தடுத்துவிடும்.

நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

நார்ச்சத்திற்காக பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு ஆகிய பழங்களை நன்கு மென்று சாப்பிடலாம். சாறாக அருந்த வேண்டாம். கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிடும் பழக்கம் இருந்தால் பழங்களைச் சாப்பிட முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். பழங்கள் மூலம் கிடைக்கும் வைட்டமின் சியும், நார்ச்சத்தும் கொண்டைக்கடலை, தட்டைப்பயறு போன்றவை மூலம் எளிதில் கிடைத்துவிடும். வாழையும், திராட்சைப் பழமும் மூளை வளர்ச்சிக்கு உதவும். ஆனால், இவ்விரு பழங்களையும் நீரிழிவு நோயாளிகள் மருத்துவரிடம் அனுமதி பெற்றே சாப்பிட வேண்டும். இந்த இரு பழங்களுக்கும் பதிலாக மருத்துவர் வேறு பழங்களை சிபாரிசு செய்ய வாய்ப்பிருக்கிறது.

புற்றுநோயைத் தவிர்க்கலாம்!

இதய நோய், எய்ட்ஸ், மஞ்சள்காமாலை ஆகிய நோய்களை விட மனிதனை அதிகம் அச்சுறுத்துவது புற்றுநோய்தான். சீனாவில் கண்டதையும் உண்ணும் மனிதர்கள் அதிகம். இவர்களுள் முழுத்தானியங்கள், கொட்டை வகையான நிலக்கடலை, பாதாம், வால்நட் பருப்பு, பிஸ்தா போன்றவற்றையும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் மீன் உணவு சாப்பிட்டு வருகிறவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய், பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவை 50 முதல் 60 சதவிகிதம் வரை வராத வகையில் ஆரோக்கியமாக இருந்தது. இந்த மூன்று உறுப்புகளாலும் புற்றுநோய் இருந்தால் செலினியம் மாத்திரையை மருத்துவர் மூலம் சாப்பிடலாம். மேற்கண்ட உணவுகளில் செலினியம் உப்பு தாராளமாக இருப்பதால் புகைபிடிப்பவர்களும், அசைவ உணவுப் பிரியர்களும் இந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயைத் தவிர்க்கலாம். குணமாக்கியும் நலம் பெறலாம். இது, சீனாவில் பரிசோதித்து நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

அழத் தெரியாதவன் மனிதனா?

கண்ணீர் விட்டு அழுவதால் மனம் லேசாகி இறுக்கம் குறைகிறது. அடிக்கடி அழுகிறவர்களும் அழுவதைத் தவறாக நினைக்காதவர்களும் மன இறுக்கத்தினால் வருகிற வயிற்றுப்புண், மலக்குடல் வீக்கம் போன்ற நோய்களுக்கு இலக்காவதில்லை. நம் கண்ணீரில் லைசோஸைம் (Lysozyme) என்ற கிருமிக்கொல்லி இருக்கிறது. இது கண்ணில் உள்ள கிருமிகளின் செல்சுவர்களை சில நிமிடங்களிலேயே அழித்து முடமாக்கி விடுகின்றன. எனவே, அழுவதைத் தவிர்க்காதீர்கள். தவறாகவும் நினைக்காதீர்கள்.

இளம் பெண்களுக்கு... முட்டைக்கோஸ்!

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க விரும்பினால் தினமும் முட்டைக்கோஸ் சூப் சாப்பிட்டு வரவேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைபார்க்கும் பெண்கள் முட்டைக்கோஸ் சூப், முட்டைக் கோஸ் பச்சடி, அவியல் என்று சாப்பிட்டு வந்தால் மார்பகப்புற்று நோய் முற்றிலும் தடுக்கப்படும். இன்டோல்-3 கார்பைனல் என்ற கூட்டுப் பொருள் முட்டைக் கோஸில் இருக்கிறது. இது மார்பகப் புற்று நோய் வந்து விடாமல் தடுக்கிறது. மேலும் முட்டைக் கோஸில் உள்ள தாது உப்புகள் கொழுப்பையும் கரைப்பதால் உடல் பருமனும் கரைக்கப்பட்டு ஒல்லியாகவும் மாறவாய்ப்புள்ளது. கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலைபார்க்கும் பெண்கள் சோயாமொச்சையைப் போல தினமும் முட்டைக்கோஸும் உணவில் சேரும் விதத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment