உணவே மருந்து:

NAGARAJI B

கொழுத்த சரீரம் கொண்ட பெண்கள் கருத்தரிக்க இயலாமல் போவது உண்டு. இவர்கள் முதல் கட்டமாக தினமும் பத்து சிறிய வெங்காயத்தை உரித்துச் சாப்பிட்டு வரவேண்டும். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது தயிரில் போட்டுத் தயிர் பச்சடியாக காலை அல்லது பகல் உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். வெங்காயம் சாப்பிடுவதுதான் மிகவும் முக்கியம்.

மேலும், காராமணி, கொண்டைக் கடலை, பாசிப்பருப்பு, பசலைக்கீரை, நல்லெண்ணெய், ஆட்டு ஈரல், முட்டை இவற்றுள் மூன்றையாவது கரு உருவாகி குழந்தை பிறக்கும் வரை தினசரி பெண்கள் சாப்பிட்டு வரவேண்டும். காரணம், இவற்றில் தாராளமாக உள்ள ஃபோலிக் அமிலம் கரு உருவாகவும், ஆரோக்கியமாக வளரவும் பெரிய அளவில் உதவி செய்கிறது. குறிப்பாக, தினமும் 50 கிராம் காராமணிச் சுண்டல் சாப்பிட்டு வருவது நல்லது. பெண்களின் இரத்த சோகை குணமாகி உடலின் ஒவ்வொரு செல்லிலும் சிவப்பு இரத்த அணுக்கள் இருப்பதால் கண்டிப்பாக கரு உருவாகி விடும்.

மனைவி மட்டுமல்ல. கணவனும் வெங்காய மருத்துவத்தையும் ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். மேலும் மாத விலக்கு வந்து முடிந்த பத்தாவது நாள் முதல் அடுத்த பதினான்கு நாட்கள் கருத்தரிக்க உகந்த நாட்கள் என்பதையும் அறிந்து வைத்திருப்பது நல்லது.

உணவே மருந்து:

கொண்டைக் கடலை, சுண்டல், குழம்பு போன்றவற்றில் சீரகத் தூளையும் சேர்த்து சமைத்தால் உடனுக்குடன் உணவு ஜீரணமாகிவிடும்.

ஞாபகசக்தி அதிகரிக்க...

கைக்குத்தல் அரிசி, சம்பா, ரவை, தவிடு சலிக்காத கோதுமை மாவில் சப்பாத்தி, கேழ்வரகு, கம்பு, போன்றவை இடம்பெற வேண்டும். எந்த வேளை உணவிலும் இவற்றில் ஒன்றாவது இடம்பெற வேண்டும்.

உலர் திரட்சை, நெல்லிக்காய், ஆப்பிள், பாதாம்பருப்பு இவற்றுடன் ஒரு வேளை காய்கறி சாலட், இரண்டு வேளை பழசாலட் என்று சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி விழிப்பாக இருக்கும்.

மிக எளிய வழி, ஏழு பாதாம் பருப்புகளை ஒரு கிண்ணத்தில் இரவு ஊறப்போடவும். காலையில் எழுந்ததும் பல் சுத்தம் செய்த பிறகு ஏழு பருப்புகளையும் தோலை நீக்காமல் மென்று சாப்பிட்டு வரவும்.

கலோரி குறைவான சில உணவுகள்:

ஏழைகளின் எளிய உணவாக அவரைக்காய், மொச்சை போன்றவை போற்றப்படுகின்றன. அதே நேரத்தில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், தனிச்சிறப்பு வாய்ந்த புரதச் சத்து, வாரத்திற்கு இரண்டு வேளைகள் சாப்பிட்டால் கூடப் போதுமானது. குறைவான கலோரி என்பதால் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். பச்சைப் பட்டாணி, பீன்ஸ், காராமணி போன்றவற்றை மற்ற நாட்களில் பயன்படுத்தலாம்.

நீலம் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மூளைக்கும், தசைக்கும் பெரிய அளவில் நன்மை செய்கிறது. எனவே, கத்தரிக்காயை ருசியாக சமைத்து அடிக்கடி உணவில் சேர்க்கவும். சத்துஉணவு நிரம்பியது இக்காய் ஆழ்ந்த தூக்கத்திற்கும் கத்தரிக்காய் உதவும்.

ஊனம் இல்லாத குழந்தைகள் பிறக்கவும், எலும்பு மண்டலம் உறுதியாக இருக்கவும் ப்ராக்கோலி உதவுகிறது. காய்கறிகளுள் மிக உயர்தர இரும்புச் சத்து இதில் தான் இருக்கிறது.

கைத்குத்தல் அரிசியை விட இருமடங்கு புரதச்சத்து உள்ள உணவு, ஓட்ஸ் ஆகும். நார்ச்சத்தும் கெட்டியான மாவுச் சத்தும் உள்ள உடனடியாகக் கிடைக்கும் சிறந்த உணவு ஓட்ஸ். சப்பாத்தி, சாதம் தயாரிக்கும்போது ஓட்ஸையும் கலந்து தயாரித்தால் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வாரம் ஒரு நாள் பரங்கிக்காய் உண்டால் தினமும் உங்கள் இளமைத் துடிப்பை எந்த ஒரு சக்தியாலும் கொள்ளையடிக்க முடியாது. நம்முடைய உடலுக்கு அதிக அளவு கரோட்டீனாய்டு தேவை. எனவே, கரோட்டீனாய்டு சத்து உடலில் அதிகமாக இருந்தால் உங்கள் உடல் முதுமையடைவது தாமதப்படுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு கரோட்டீனாய்டு சத்து அதிகமுள்ள முதல் உணவு பரங்கிக்காய்தான். எல்லாவிதமான காய்கறிகளுடனும் பரங்கிக்காயைச் சேர்த்து சமைக்கலாம். கூடவே ஏதேனும் பருப்பு வகை ஒன்றும் சேரவேண்டும். பரங்கி விதைகளும் சாப்பிடலாம்.

மேற்கண்ட கலோரி குறைவான உணவுகள் அனைத்தும் உடல் எடை அதிகரிக்காமலும் கண்டிப்புடன் பார்த்துக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment