மதுப்பழக்கம் உள்ளவர்களும் தினமும் தேனீர் கடைகளில் பஜ்ஜி, வடை என்று சாப்பிடுகிறவர்களும் கல்லீரலைக் கெடுத்துக் கொள்கின்றனர். மஞ்சள் காமாலை நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு ஒரு டம்ளர் வீதம் சாப்பிடவும். வாரத்தில் மூன்று தினங்களாவது இந்த முறையில் சாப்பிடவும். மேலும் கல்லீரலைப் பலப்படுத்துவதில் இளநீரின் பங்கு அதிகம். பக்கவாதம் வராமலும் தடுப்பதால் தினமும் ஒன்றிரண்டு இளநீர் அருந்துவது நல்லது. இளநீரால் நன்கு பணம் செலவானாலும் இதயமும், கல்லீரலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
NAGARAJI B
வலிகள் குணமாக...
மூட்டுவலி, வீக்கம், உடம்பு வலி என்பவர்கள் தினமும் இரண்டு வேளை சாத்துக்குடிச் சாறு அருந்தி வந்தால் போதும் வீக்கமும், வலியும் குணமாகும்.
மூட்டுவலி குணமானாலும் மூன்று மாதங்களுக்கு காலையில் மட்டும் ஒரு கப் பாகற்காய் சாறு அருந்த வேண்டும். இந்தச் சாற்றில் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் ஆறு வால்நட் பருப்புகளும் சாப்பிட வேண்டும். அதிகம் சேர்த்தால் கொழுப்பு கூடிவிடும்.
மூட்டு வலி, தசை வலி, உடம்பு வலி குறைய முதல் நான்கு நாட்களும் ஆரஞ்சுப் பழமும், ஆரஞ்சுப் பழச்சாறுமே சாப்பிடலாம். ஆரஞ்சுக்குப்பதிலாக ஓரிரு வேளை திராட்சையும் மாதுளம்பழமும் பயன்படுத்தலாம். நான்கு நாட்கள் இந்த மூன்று வகைப் பழங்களையும், அவித்த காய்கறிகளையும் சாப்பிட்டு வந்தாலேயே உடலில் வளர்சிதை மாற்றமும் சுறுசுறுப்பாக இருக்கும். பாகற்காய் சாறு கெட்ட இரத்தத்தை நல்ல இரத்தமாக மாற்றியிருக்கும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள சுண்ணாம்புச் சத்து எலும்புகளையும் இணைப்புகளையும் சாந்தப்படுத்தி அனைத்துவிதமான வலிகளையும் குணமாக்கிவிடும்.
உடம்பில் எந்தவிதமான வலி ஏற்பட்டாலும் அசைவத்திற்குத் தடா போட வேண்டும். மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தேநீர், காபி அளவுடன் அருந்தலாம். முடிந்தால் இவ்விரண்டையும் தவிர்க்கலாம்.
மூட்டு வலி, தசை வலி போன்றவை எட்டிப் பார்க்காமல் இருக்க தினமும் ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி பழச்சாறு அருந்தும் பழக்கம் இருவேளை தொடர வேண்டும்.
செரிமானக் கோளாறுகளா?
சாப்பாட்டிற்கு முன்பாக ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து நன்கு பசித்துச் சாப்பிட வயிற்றைச் சுத்தமாக்கிவிடும். ஒரு வேளையோ அல்லது இரண்டு வேளையோ இந்த முறையில் அருந்தலாம். தக்காளிச் சாறும் ஜீரணமாகாத உணவுகளையும்உடனடியாக செரிக்க வைக்கும் ஓர் அதிசயச் சாறு.
சாப்பாட்டிற்குப் பிறகு விரைந்து ஜீரணமாக அன்னாசியில் அரைப்பழம், அல்லது அன்னாசிப்பழச்சாறு அரை டம்ளர் அருந்தலாம். இது டானிக் போல செயல்பட்டு அஜீரணம் ஏற்படாமல் உதவும்.
மிக எளியவழி ஒரு டம்ளர் மோரில் கால் தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்த்து அருந்துவது, அல்லது கொத்துமல்லித்தூளில் கால்தேக்கரண்டி சேர்த்து அருந்தலாம்.
வெந்தயக்கீரை, காரட், மாதுளம்பழம், புதினாக்கீரை, போன்றவையும் ஜீரணமாகாத உணவுகளை உடனே ஜீரணிக்க வைக்கும்.
வயதாக வயதாக உணவைக் குறைக்க வேண்டும். குறைவாகச் சாப்பிடும் உணவும் எளிதில் செரிக்க இரவு உணவிற்குப் பிறகாவது 100 கிராம் திராட்சைப் பழங்கள் மட்டுமாவது சாப்பிடும் பழக்கம் இருந்தால் செரிமானக் கோளாறுகள் எட்டிப்பார்க்கா!
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment