NAGARAJI B

திகமாகப் பசியும் தாகமும் இருக்கிறதா? அப்படிச் சாப்பிட்டபிறகும் மனமும் உடலும் சோர்வாக இருக்கிறதா? சிறுநீர் அடிக்கடி கழிகிறதா?

அப்படி எனில் இரத்தப்பரிசோதனை செய்யவும். 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 மில்லி கிராமிலிருந்து 120 மில்லிகிராம் வரைதான் இருக்கவேண்டும். உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து இரத்தத்தைப் பரிசோதனை செய்தால் அது 180 மில்லிகிராமைக் காட்டும். இதுவே இரத்தத்தில் இருக்கவேண்டிய சர்க்கரையின் அளவு. இந்த அளவுகள் அதிகமாக இருந்தால் இது நீரிழிவு நோய்!

கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பது குறைந்தால்தான் நீரிழிவு நோய் தோன்றுகிறது.

உணவுமுறை, உடற்பயிற்சி, கவலை இல்லாத மனநிலை ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோயிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

காய்கறிகள், பழம் (ஆப்பிள் மட்டும்) பயறு வகை, முழுத்தானிய வகை என்று மாவுச்சத்து உள்ள உணவுகள் 70 முதல் 75 சதவிகிதம் இருக்கவேண்டும். இதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் கட்டுப்பாட்டில் இருக்கும். 15 முதல் 20 சதவிகிதம் புரதம், 5 முதல் 10 சதவிகிதம் கொழுப்பு என்று இவர்கள் உணவுமுறை இருக்கவேண்டும்.

சைவ உணவுப் பழக்கத்தையே பின்பற்றினால் நீரிழிவு நோயாளிகள் நீண்ட நாள்கள் உயிர் வாழலாம். இருப்பினும் வாரம் ஒரு நாள் மீனும், கோழிக்கறியும் ருசிக்காகச் சேர்த்துக்கொள்ளலாம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் பார்த்துக்கொள்கிறது வெங்காயமும் வெள்ளைப்பூண்டும். மூன்றுவேளை உணவிலும் பூண்டு சேரட்டும். வெங்காயத் தயிர்ப்பச்சடியும் சேர்த்துக்கொள்ளவும். இவை இரண்டையும் எந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்கிறோமோ அந்த அளவு வாழ்நாளும் நீடிக்கும்.


பாகற்காய்ச் சாறு வாரத்தில் நான்கு நாட்களாவது அருந்தவும். இதில் உள்ள இன்சுலின் போன்ற ஒரு வகைப் பொருள் இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

காலையில் எழுந்ததும் ஒரு சிட்டிகை வெந்தயப் பொடியை தண்ணீருடன் விழுங்கினாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதுடன் உடல் பருமனையும் தக்காளிச்சாறும், கறிவேப்பிலைத் துவையலும் கட்டுப்படுத்துகின்றன. எனவே, இவற்றைத் தக்காளிப்பச்சடி, கறிவேப்பிலைப் பொடி என்ற வழிகளிலும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

இவர்களுக்கு இயற்கையாகவே இன்சுலின் சுரக்க மாங்கனிஸ் தாதுஉப்பு தாராளமாக உள்ள பச்சைப்பட்டாணி, காரட், மீன், சிட்ரஸ் பழங்கள், ஈரல், கீரைவகை போன்றவை உதவுகின்றன. இந்த உணவுகள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை வளர்சிதை மாற்றம் அடையச் செய்துவிடுகின்றன. மேலும், இந்த உணவுகளில் உள்ள நார்ச்சத்தும் கொழுப்பையும் கரைக்கின்றன. இந்த உணவுகளால் தசைத்திறன் சீராக இருக்கும். குழப்பமான மனநிலையும், ஞாபக சக்திக் குறைவும் ஏற்படாது. கொண்டைக்கடலை, சுண்டல், நாவல் பழம், எலுமிச்சை, அவரைக்காய், பீன்ஸ், வெள்ளரிக்காய், பால், தயிர், கேழ்வரகு, கோதுமை போன்ற உணவுகளின் மூலம் வைட்டமின் ஏ, துத்தநாகம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து கிடைப்பதால் கண்கள் பாதிப்படைவது தடுக்கப்படும். சர்க்கரையையும் உடல் நன்கு பயன்படுத்திக்கொள்ளும்.

தினமும் இருவேளைகள் குளிப்பதால் (குளிர்ந்த நீரில்) இரத்த ஓட்டம் அதிகரித்து சர்க்கரையை தசைகள் நன்கு பயன்படுத்திக்கொள்ளும். தினமும் அரைமணி நேரம் கையையும், காலையையும் நன்கு வீசி நடைப்பயிற்சி செய்யவும்.

வீட்டிலும், வீட்டுக்கு வெளியேயும் எம்.சி.ஆர். நடையன்களையே பயன்படுத்தவும். இவை, காலில் புண் வராமல் பார்த்துக்கொள்ளும்.

0 comments:

Post a Comment