தற்போது எங்கே பார்த்தாலும் விவாகரத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
NAGARAJI B
குறிப்பாக மாதம் ரூ.70 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் வரை சம்பளம் பெறுகிறவர்களும் நம் திருமண வாழ்க்கை போதும் என்று 30 வயதிற்குள்ளேயே பிரிந்து வாழத் தீர்மானித்துவிடுகின்றனர்.
இப்படிப்பட்டவர்கள் காதல், தாம்பத்தியம், அன்பு, பாசம் போன்றவை குறையாமலிருக்கவும், பிரச்னைகள் படை எடுத்து வந்து தாக்கும்போது ஒற்றுமையாக இருந்து சமாளித்து வாழவும் சில உணவுகள் நேரடியாக உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த உணவுகளைப் புதுமணத் தம்பதிகளும், குடும்ப வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டவர்களும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இனிமையான அன்பான வாழ்க்கை தொடரும்.
இனி, அந்த உணவுகள் :
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இது, உங்களை மனஉறுதி மிக்கவராகவும், தாம்பத்திய வாழ்வில் ஆர்வம் உடையவராகவும் தயார்ப்படுத்தும். ஸ்ட்ராபெர்ரியில் பழச்சர்க்கரையும் அதிகம். இது, மூளையைப் புதுப்பித்து இனிமையான மனத்தையும் வழங்குகின்றது.
அடுத்து, ஏலக்காய். இது நறுமணச் சுவையுள்ள மருந்துப்பொருள். வெற்றிலைப் பாக்குடன் ஏலக்காயும் சேர்த்தும் சாப்பிட்டால் தம்பதிகளுக்கு காதல் உணர்வு பொங்கி எழும்.
உடல் முழுவதும் இரத்தம் தங்கு தடையின்றி பாய்ந்து கொண்டிருந்தால்தான் குடும்பத்தில் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற உணர்வு உச்சத்தில் இருக்கும். தம்பதிகள் விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். நாம் அன்புடன் நடந்துகொண்டால் நமது துணைவி/துணைவர் அன்புடன் நம்மை நேசிப்பார் என்பதை எளிதில் உணர வைக்கிறது வெள்ளைப்பூண்டு. காதல் மணத்தம்பதிகளுக்கு இரண்டு வருடங்களிலேயே வாழ்வு வெறுத்துப் போகாமலிருக்க தினமும் வெள்ளைப்பூண்டில் பத்துப் பற்களை எண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வரவும். பூண்டு, இரத்தத்திற்கு வீரியம் ஊட்டி, நோய் நுண்ம நச்சுப்பொருட்களை வெளித்தள்ளுகிறது. இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்ப நிலையையும் சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள்கூட உடல் மற்றும் மனரீதியாகத் தினமும் இளமைத்துடிப்புடன் முதல்வர் மு.கருணாநிதியைப் போலக் குடும்பப் பாசத்துடன் வாழமுடியும், அன்பு குறையாமல்.
உடலில் உள்ள அதிக வெப்பத்தைக் குறைப்பதால் அஸ்பராகஸ் கீரையை வாரத்தில் இருநாட்கள் சேர்த்து வரவும். உடல், மனஆற்றலை அஸ்பராகஸ் கீரை அதிகப்படுத்துகிறது. மேலும் இதில் பொட்டாசியம், உப்பு அதிகம் இருப்பதால் இரத்தம் திரவ நிலையிலேயே இருந்து மாரடைப்பு. பக்கவாதம் வராமல் தடுக்கிறது. பிரச்னைகள் இருந்தாலும் மனதை அமைதியாக்கிக்கொண்டு மனைவி, மக்களைக் குறை சொல்லாமல் ஆற்றலுடன் வாழ இந்தக் கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்து வரவும்.
சிப்பி (ஷீஹ்மீக்ஷீ), பப்பாளி, பாசிப்பருப்பு போன்ற உணவுகளில் தாராளமாக உள்ள துத்தநாக உப்பு தாம்பத்தியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டமும் புதுப்பிக்கப்படுவதால் சண்டையில்லாமல் திருமண வாழ்க்கையை நடத்திச் செல்லவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் இருபாலர்களுக்கும் இந்த உணவுகளால் புதுப்பிக்கப்படுகின்றன. மதிய உணவில் பாசிப்பருப்புக் கூட்டும். நல்லெண்ணெயும் கலந்து முதலில் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இரவு, மறுநாள் காலை வரை அதிகம் பசிப்பது குறையும். ஆனால், மனமும் மூளையும் விழிப்புடன் இருந்து காரியங்களையும் உறவுகளையும் அழகாக நிர்வகித்து உங்களை அமைதியாக வாழ வைக்கும்.
இத்துடன் வாழைப்பழம், குங்குமப்பூ சர்பத், ஆலிவ் எண்ணெய், தேன் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேருங்கள். பிரச்னைகள் அதிகம் இருந்தால் இரண்டு வாழைப்பழம், ஒரு சாக்லெட் பார் என்று சாப்பிடுங்கள்.
மேற்கண்ட அனைத்து உணவுகளும் கணவன் மனைவியை மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள அனைத்து வயதுக்காரர்களையும் சண்டை சச்சரவில்லாமல் சமாதானத்துடன் வாழத் தூண்டுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment