NAGARAJI B வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலமும், நோய் எதிர்ப்புச்சக்தியை புதுப்பித்து இதயத்தைப் பாதுகாக்கும் எல்லாஜிக் அமிலமும் தாராளமாக இருக்கிறது. பலர் மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால்தான் அவர்களுக்கு எல்லாஜிக் அமிலம் தொடர்ந்து கிடைத்து இதயம் பாதுகாக்கப்படுகிறது. மூன்று வேளையும் அசைவம் சாப்பிடுகிறவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிடுவது போல், சைவ உணவுக்காரர்கள் மாதுளம் பழத்துடன் வால்நட் பருப்பையும் சாப்பிட்டுவந்தால் இதயநோயோ தொற்றுநோயோ மற்றவகை உடல் நலப்பிரச்னையின்றியோ நலமுடன் வாழலாம். வால்நட் பருப்பும், மாதுளம் பழமும் தினமும் சாப்பிடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சற்று செலவு அதிகமானாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை மருந்து மாத்திரை இன்றி இந்த இரு உணவுகளின் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம்.
சோர்வை விரட்ட...
தொடர்ந்து உடலுக்கு சக்தி தரும் உணவுகளாக ஆப்பிள், ஆரஞ்சு, சோயாபால், மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்), தயிர், வறுத்த சூரியகாந்தி விதைகள் போன்றவை இருக்கின்றன. நாள் முழுவதும் சோர்வு எட்டிப்பார்க்காமல் இருக்க ஆரஞ்சு சாறு இரண்டு வேளை, இரண்டு ஆப்பிள், ஒரு கப் தயிர், மதிய உணவில் சோயாமொச்சை போன்றவைகூடப் போதும்.
பச்சை மிளகாய் நல்லதா?
உடல் எடையை வேகமாகக் குறைக்க விரும்பினால் பச்சை மிளகாயை உணவில் தவறாமல் சேர்த்து வரவும். அதே நேரத்தில் அளவும் அதிகரிக்கக் கூடாது. பச்சை மிளகாயில் வைட்டமின் `சி' அதிகமாக இருக்கிறது. இது வேகமாக சாப்பிட்ட உணவுகளை வளர்சிதை மாற்றம் அடையச் செய்கிறது. இது மட்டுமா? கூடுதல் கலோரி இருந்தாலும் எரித்துக் கரைத்து விடுகிறது. எல்லாவற்றையும் விட இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற பசியார்வத்திற்கும் கடிவாளமிடுகிறது. மேலும் பச்சைமிளகாய் உறைத்ததும் மூளையில் டாப்பமைன், எபிநெப்ரைன், நார்பைன்டரின் போன்றவை உடனே சுரந்து எழுச்சியுடன் வாழ நம்மைக் கட்டுப்படுத்தும். கவலையையும் முற்றிலும் குறைக்கும். இதனால் தேங்காய் சட்னியில் பச்சை மிளகாயை நன்கு சேருங்கள். சமையலிலும் சேருங்கள்.
சுறு சுறுப்புடன் வாழ...
எலுமிச்சம் பழம் ஒன்றை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்திருங்கள். அதை எடுத்து முகர்ந்து பார்த்தால் உடனே எச்சரிக்கை உணர்வும், சுறுசுறுப்பும் உடனே புதுப்பிக்கப்பட்டுவிடும். எலுமிச்சம் பழ வாசனைக்கு மட்டுமே இத்தகைய தனிச்சிறப்பு உண்டு. மேலும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க பட்டாணி, மொச்சை, கொண்டைக்கடலை, அசைவம் எனில் மீன், கோழிக்கறி, கொழுப்பு நீக்கிய தயிர், போன்றவை உணவில் இடம் பெற வேண்டும். பழங்களுள் ஆப்பிள், திராட்சை, பீச், அன்னாசி போன்றவை உடலுக்கும் மனதிற்கும் உடனடியாக சக்தியை ஊட்டுகின்றன. காய்கறிகளில் ப்ராக்கோலி இந்த வகையில் முதலிடத்தில் இருக்கிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்க...
கையில் குறிப்பு ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லா வேலைகளையும் வரிசையாகப் பார்த்து முடிக்கவும், பள்ளி, கல்லூரித் தேர்வுகளை பதட்டமின்றி எழுதி முடிக்கவும் மூளையில் உள்ள சோலினெர்ஜிக் (சிபிளிலிமிழிணிஸிநிமிசி) என்ற நரம்புகளைப் புதுப்பிக்க வேண்டும். ஒரு முட்டையை ஆம்லட்டாகச் சாப்பிட்டால் இந்த நரம்புகளுக்கு முட்டையின் மஞ்சள் கருவில் இருந்து கோலைன் (சிபிளிலிமிழிணி) என்ற சத்து கிடைத்து ஞாபக சக்தி உடனடியாகப் புதுப்பிக்கப்படுகிறது. ப்ரூன் (ஜீக்ஷீஸீமீ) பழமும், ஓட்ஸ் மீல் ஒரு டம்ளரும் (கஞ்சியாக) அருந்தலாம். முதுமை அடையும்போது ஏற்படும் ஞாபகசக்தி குறையை தினை, அவரைக்காய், ஆப்பிள், வேர்க்கடலை, பீட்ரூட், நண்டு, மீன் போன்றவை நீக்குகின்றன. ஓட்ஸ் கஞ்சியும், முட்டையும் சாப்பிடுகிறவர்கள் மேற்கண்டவற்றையும் உணவில் சேர்த்து வரவும். சாவியை எங்கேயாவது வைத்துவிட்டுத் தேடுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தவும். ஒன்று அல்லது இரண்டு காரட்டுகளை தோல் சீவாமல் அழுக்குப் போக நன்கு கழுவி ...விட்டு மிக்ஸியில் அரைக்கவும். பிறகு கொஞ்சம் மோர் சேர்த்து இந்த காரட் சாற்றை அருந்தி வரவும். பார்வைத் திறனையும் போனஸாக இந்தச் சாறு பாதுகாக்கும்.
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment