இட்லி, இடியாப்பம், கஞ்சி சாப்பிடாதீர்கள்! உடல் எடை குறைக்க விரும்புவோர் என்ன அதிகம் சாப்பிடலாம்? இளைக்கணும்னா தோசை சாப்பிடுங்க!
எளிதில் ஜீரணமாகும் உணவுகளை ஜிஐ (GI) என்கிறோம். Glycemic intex என்பதுதான் GI.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், ஜூஸ், கஞ்சி, இட்லி, இடியாப்பம் என்று எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடும்போது உணவு விரைவில் செரித்து க்ளுகோஸாக மாறிவிடுகிறது. விரைவில் செரித்து அதிகம் பசி எடுப்பதால், நாம் சாப்பிடும் உணவும் அதிகமாகிவிடும். இது சில நேரங்களில் சர்க்கரை நோய்க்குகூட வழிவகுத்துவிடும்.
கொஞ்சம் சாப்பிடுவதுதான் பிரச்னை!
அதற்காக இட்லி, இடியாப்பம், கஞ்சி, ஜூஸ் சாப்பிட்டாலே சர்க்கரை வியாதி வருமா என்றால், இல்லை. காரணம் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் டயட் என்ற பெயரில் 2 இட்லி, ஒரு டம்ளர் கஞ்சி, ஒரு டம்ளர் ஜூஸ், கொஞ்சம் இடியாப்பம் என்று எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான் இந்த அபாயம். அதுவே நார்மலாக சாப்பிடுபவர்கள் வயிறு நிறைய இட்லி, இடியாப்பம், கஞ்சி, ஜூஸ் என்று சாப்பிடும்போது அது எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.
இதோ சில உணவுகளில் உள்ள நி.மி. அளவுகள்..
நீங்கள் எந்த அளவுக்கு வெயிட் குறைக்க விரும்புகிறீர்களோ அந்த அளவுக்கு நி.மி. அளவு குறைய வேண்டும்.
ராஜ்மாவில் நி.மி. அளவு 29
வாழைப்பழத்தில் நி.மி. அளவு 69
சோயாவில் நி.மி. அளவு 43
ஆப்பிள் பழத்தில் நி.மி. அளவு 39
ஆரஞ்சு, சாத்துக்குடியில் நி.மி. அளவு 40
வெந்தயக் கீரை, காய்கறிகள் சேர்த்த சப்பாத்தி, தோசை, பொஙகல், அடை, பயத்தம்பருப்பு போன்றவை சேர்த்த உணவுகள் சாப்பிடலாம்.
நமது சமையல் முறைப்படி இட்லிக்கு பதில் எண்ணெய்விடாத தோசை சாபிட்டால் விரைவில் செரிக்காது, உடல் எடை குறைக்க விரும்புவோர் அளவாக தோசை சாப்பிடலாம்.
பொங்கல், அடை போன்ற உணவுகளில் நிறைய புரதம், நார் சத்துக்கள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகாது. இவை உடனே சர்க்கரையாக மாறும் உணவுத்தன்மை இல்லாதது. எனவே பொங்கல், அடையையும் அளவோடு சாப்பிடலாம்.
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment