NAGARAJI B

டற்பயிற்சிகள் செய்ய பலருக்கு விருப்பம் இல்லை. இத்துடன் நேரமும் இல்லை என்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தினமும் மூன்று வேளை கிரீன் டீ என்கிற தேநீரை அருந்தி வந்தால் நமது உடலில் கொழுப்புத் திசுக்கள் வளர்ச்சி அடையாமல் தடுக்கப்படுகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொழுப்புத் திசுக்களை வளர்க்கும் சில வேதிப் பொருள்களை கிரீன் டீ உற்பத்தி ஆகாமல் தடுத்து விடுகிறது. இதனால் எளிதில் கொழுப்பு கரைந்து போய் விடுகிறது. இதற்காக சிலரைத் தேர்வு செய்து கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடச் சொன்னார்கள். சில தினங்களில் இவர்களின் எடை இதனால் அதிகரித்தது. இரத்த அழுத்தமும் அதிகரித்தது. இதன் பிறகு இவர்களுக்கு தினமும் மூன்று வேளை ஒரு கோப்பை வீதம் கிரீன் தேநீர் அருந்தத் தரப்பட்டது ஆச்சரியம். அடுத்த சில தினங்களிலேயே இவர்களின் உடலில் இருந்த கொழுப்புகள் குறைந்ததுடன், இரத்த அழுத்தமும் சாதாரண நிலைக்குத் திரும்பியது.

கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைப்பதற்கு நல்ல மாற்றாக மூன்று வேளை கிரீன் டீ அருந்தி உடல் எடையையும் குறைக்கலாம். இதன்மூலம் இதயநோய், பக்கவாதத்தையும் தடுக்கலாம். பால் சேர்க்காமல்தான் கிரீன் டீ அருந்த வேண்டும்.


கொசுறு: கறுப்பு தேநீர் அருந்தினாலும் இந்த நன்மைகள் உண்டு.


இரண்டாவது எளிய வழி

கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிட்டாலும் அதில் மஞ்சள் தூள் சேர்த்திருந்தால் போதும். மஞ்சள் தூளில் உள்ள தாவர இரசாயன உயிர்க்கூறு கர்குமின் (curcumin) என்ற துடிப்புள்ள கூட்டுப் பொருள் கொழுப்புத் திசுக்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது. எலிகளிலும் மனிதனிலும் உள்ள செல்களில் கொழுப்புத் திசுக்கள் வளர்ச்சி பெறாமல் தடுக்க இந்தக் கூட்டுப் பொருள் அதிக ஆற்றலுடன் எதிர்த்து முறியடிப்பதை பிஸ்டனில் டஃப்ஸ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து அறிவித்துள்ளது.

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டாலும், இத்துடன் மஞ்சள் சேர்த்து சமைத்த உணவுகள் சாப்பிட்டு வந்தால் போதும். இல்லையெனில் கொழுப்பு உணவில் மஞ்சள் தூளும் சேர்த்து சமைக்கப்பட்டிருக்க வேண்டும். எலிகளை வைத்து ஆராய்ந்தபோது கொழுப்பு உணவுகளுடன் ஒவ்வொரு வேளையும் 500 மில்லிகிராம் கர்குமின் மாத்திரையும் சேர்த்து ஒரு பிரிவு எலிகளுக்குத் தரப்பட்டது. இந்த எலிகளை 12 வாரத்திற்குப் பிறகு பரிசோதித்தபோது இந்த எலிகள் எடை குறைந்து காணப்பட்டன. ஆனால், கர்குமின் மாத்திரை தரப்படாத இன்னொரு பிரிவு எலிகளின் எடை அதிகரித்திருந்தது.

எனவே, இரவில் பால் அருந்தி விட்டுப் படுக்கிறவர்களும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூளைச் சேர்த்து அருந்தவும்.

மூன்றாவது வழி: நமக்கு மிகவும் தெரிந்த வழி. இரண்டு வேளை 100 முதல் 200 மில்லி லிட்டர் அளவுள்ள தயிரை சாப்பிட்டு வருவதுதான். தயிரில் இனிப்பு, உப்புச் சேர்க்க வேண்டாம். தயிரில் உள்ள கால்சியம் உப்பு கொழுப்பு எங்கே சேமிப்பாக இருந்தாலும் கரைத்து விடுகிறது. ஏற்கெனவே உள்ள கொழுப்பை கரைப்பதுடன் நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்பையும் தயிர் கரைத்து விடுகிறது. குறைந்த அளவு சாதத்தில் தயிரை நன்கு சேர்த்தும் சாப்பிடலாம். தயிர் மூலம் தொடர்ந்து கால்சியம் கிடைப்பதே மிக முக்கியம்.

மேற்கண்ட மூன்று அரிய உணவுகளும் எடையைக் குறைத்து ஆரோக்கியத்தைப் பாதுகாப்புடன் கிரீன் டீ இதய நோயையும், மஞ்சள் தூள் புற்றுநோயையும், பாலும் தயிரும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோயையும் முன் கூட்டியே தடுக்கின்றன.

தவிர்க்க முடியாமல் கொழுப்பு உணவுகளை சாப்பிடுகிறவர்களும், வாரத்தில் மூன்று நான்கு நாள்கள் மட்டுமே நடைப்பயிற்சி செய்பவர்களும் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள மேற்கண்ட மூன்று வழிகளையும் பின்பற்றினால் ஒல்லியாக மாறி ஆரோக்கியமாக நீண்ட நாள்கள் வாழ்வது உறுதி.

0 comments:

Post a Comment