அதிகமான மனக்கவலை, மனஇறுக்கத்தில் நரம்புகள் அதிகம் வேலை செய்வதால், இரைப்பைப் புண் உருவாகலாம். காபி, தேநீர், மது, சாப்பாடு என அனைத்தையும் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, உடல் பலவீனம், தூக்கமின்மை, வயிறு மந்தம், இரத்த சோகை முதலிய காரணங்களும் இரைப்பையில் புண்ணை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் இந்தக் கஞ்சி செரிமான அமைப்பை இதமாகக் குணப்படுத்துகிறது. புண் இருக்கும் பகுதியில் சிரமம் ஏற்படாமல் தடுக்கிறது. உணவை அதிகச் சூட்டிலோ, அல்லது அதிகமான குளிர்ச்சியிலோ சாப்பிடக்கூடாது.
NAGARAJI B
இரைப்பையில் அமிலம் அதிகமாகச் சுரக்கும்போது இப் புண்கள் இன்னும் மோசமடைகின்றன.
நெஞ்சுவலிக்காக ஆஸ்பிரின் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கும் இரைப்பை புண் ஏற்பட வாய்ப்புண்டு. இவர்களும் இரைப்பை புண் வராமல் இருக்க உணவு முறைகளில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
சாப்பிட்டுச் சிறிது நேரம் கழித்துத் திடீரென்று நடுவயிற்றில் சுருக்கென்று வலி எடுக்கும். சிறுகுடல் பகுதியில் புண் இருந்தால் சாப்பாட்டிற்கு முன்பாக வலி எடுக்கும்.
இப்படி வலி ஏற்பட்டாலும், வயிறு காலியாக இருக்கும்போது வலி ஏற்பட்டாலும் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவும்.
கடுமையான இரைப்பைப் புண்ணை குருணைக் கஞ்சியும், கனிந்த வாழைப்பழமும் குணப்படுத்தி விடும். கஞ்சியில் மோர் நன்கு சேர்க்கப்பட வேண்டும். நடு வயிற்றில் வலி ஏற்படும் போது இந்த முறையில் கஞ்சியும் வாழைப்பழமும் மூன்று வேளை சாப்பிடவும்.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் `யு' ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகமாகச் சுரப்பதைக் கட்டுப்படுத்தி விடுகிறது. குருணைக் கஞ்சியில் நார்ச்சத்துக் குறைவு.
வயிறு காலியாக இருக்கும்போது நடுவயிற்றில் வலி ஏற்பட்டால் பசும்பாலோ அல்லது ஒரு கோப்பை தயிரோ அருந்தினால் வலி குறையும். பாதாம்பாலும், வெள்ளாட்டுப் பாலும் இரைப்பை புண்ணைக் குணப்படுத்தும் சக்தி கொண்டவை.
மூன்றுவேளை உணவையே ஐந்து வேளையாகப் பிரித்து வைத்துக் கொண்டு சாப்பிடவேண்டும்.
இரைப்பை புண் ஆறிவிட்டது என்று மருத்துவர் உறுதி செய்யும் வரை வேகவைத்த காய்கறிகள், பழச்சாறு, பழங்கள் போன்றவற்றை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெந்தயக்கீரையும், வெந்தயப்பொடியும் இரைப்பை புண்ணை வேகமாகக் குணப்படுத்தும். காலையில் ஒரு சிட்டிகை வெந்தயப் பொடியை வாயில் போட்டு தண்ணீர் அருந்தி விழுங்கவும். மதிய உணவில் வெந்தயக்கீரை சேர்த்து வரவும். இதன் மூலம் சர்க்கரையும் கட்டுப்படும்.
உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது இதன் அவியலை ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம்.
இளநீர் இரண்டு வேளை அருந்தலாம். தேங்காய் உள்ள இளநீராக அருந்தவும். பால் நன்கு சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் பாலும், வாழைப்பழமும் சாப்பிடுகிறவர்களுக்கு இரைப்பை புண் ஏற்படுவதே இல்லை.
தினமும் இரண்டு வேளை குளிப்பதும் (குளிர்ந்த தண்ணீரில்) இரைப்பையில் அமிலம் அதிகமாகச் சுரப்பதைத் தடுக்கும்.
ஆறிய முட்டைக்கோஸ் சூப், எலுமிச்சைச்சாறு, காரட்சாறு, சாதம், வில்வப்பழம், முருங்கைக்கீரை, சாத்துக்குடி, முருங்கைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய் முதலியன இரைப்பையில் உள்ள புண்களைக் குணப்படுத்தும் வல்லமை உள்ளவை. இரைப்பையில் புண் வராமலும் தடுப்பதால் இந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்க்கவும்.
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment