ஹார்வார்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தினமும் ஐந்து வேளை வீதம் பதினான்கு நாள்கள் வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி நான்கு மடங்கு அதிகரித்து விடும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

காரணம் என்ன? தேயிலையின் சாற்றில் தியானைன், காட்சின்ஸ், ஈஜிசிஜி என்ற மூன்று நோய் நச்சு முறிவு மருந்துகள் உள்ளன. இவை மிகவும் சக்தி வாய்ந்தவை.

தேநீரை மூன்று வேளைகளுக்கு மேல் அருந்தினால் இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்து குறையவும், நாக்கு வறட்சி அதிகரிக்கவும் உடனடியாக வாய்ப்பு அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்புச் சக்திக்காக மருந்துபோல தேநீரை அளவுடன் அருந்தினால் போதும். கூடவே இரும்புச்சத்து, வைட்டமின் சி நிரம்பிய உணவுகளையும் தாராளமாகச் சேர்த்து வருவது மிகவும் முக்கியம்.

தினமும் 5 வேளை தேநீர் என்பவர்கள் மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோரின் ஆலோசனைப்படி இரண்டு வாரங்கள் தேநீர் அருந்தி பூரண உடல் நலம் பெற வேண்டும்.

கவர்ச்சியான தோற்றத்திற்கு...

எதிர்ப்புச் சக்தியுடன் முழு ஆரோக்கியமாகவும், கவர்ச்சியுடனும் திகழ விரும்பினால் பழங்கள், காய்கறிகள் நன்கு சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த வயது, ஆண், பெண் என்றாலும் இரண்டு வேளை பழங்கள் காய்கறி சாலட்டுகள் உணவில் சேரட்டும்.

மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, கொய்யா, கத்தரிக்காய், பாகற்காய், கோவைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், தக்காளி போன்ற முக்கியமான பழங்கள், காய்கறிகள் கவர்ச்சியான தோற்றம் தரும்.

ஏனென்றால், இவற்றில் உள்ள கரோட்டீனாய்டு என்ற நிறமி தோலின் நிறத்தை வெளிர் மஞ்சளாக மாற்றிவிடுகிறது. இத்தகைய தோல் கொண்டவர்கள் முழு ஆரோக்கியத்துடன்,கவர்ச்சிகரமான தோற்றத்துடனும் காணப்படுவதை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மற்றும் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

கரோட்டீனாய்டு நிறமி இரத்தம் தோலில் சேர்ந்திருப்பவர்களுக்கு நோய் தாக்குவது சிரமம். இத்துடன் தோலின் நிறத்தையும் மெருகேற்றி கவர்ச்சியாக மாற்றிவிடுகிறது.

தோலின் நிறத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது.

கொழுத்த சரீரத்துடன் இருப்பவர்கள் கவர்ச்சியாக முதலில் மாற நம்பிக்கை தேவை. இதற்காக தினமும் இரண்டு காரட்டுகளை நன்கு கழுவி தோல் சீவாமல் மிக்ஸி மூலம் மைய அரைக்கவும். இதை இரண்டு டம்ளர் மோரில் கரைத்து காலையில் அருந்தி விடவும். வேறு எதுவும் சாப்பிட வேண்டாம். அப்படியும் பசித்தால் மூன்று தக்காளிப்பழங்கள் மட்டும் சாப்பிடவும். மதியம், இரவு, உங்கள் விருப்பப்படி சாப்பிடலாம்.

காரட் சாறு + மோர் உணவு மருத்துவத்தை பத்து நாள்கள் வரை தொடரவும். இதன் பிறகு வேண்டாம். காரணம், இந்தச் சாறில் உள்ள கரோட்டீனாய்டும் கால்சியமும் உடலில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைத்து நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரித்து இருக்கும்.

உடலும் கலகலப்பாக இருக்கும். உள்ளமும் துடிப்புடன் இருக்கும். இது அப்படியே நீடிக்க காரட், தக்காளி போன்றவற்றை சாலட்டாகவும், சீசனில் கிடைக்கும் பழங்கைளயும் பிற உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் போதும்.

எடை அதிகரிப்பும் களைப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டால் காரட் + மோர் சாறு அருந்தலாம். மற்ற உணவுகளைக் குறைத்து பழங்களை அதிகரித்துக் கொள்ளலாம்.

காரட்டின் நடுவே மஞ்சளாகத் தெரிவது தான் கரோட்டீனாய்டு என்ற நிறமி. இதுதான் வைட்டமின் `ஏ'யாக மாறி நோய் நச்சு முறிவு மருந்தாகச் செயல்பட்டு முழு ஆரோக்கியத்தைத் தொடர்ந்து வழங்குகிறது. பழங்கள், காய்கறிகள் தாராளமாகச் சேர்த்து வந்தால் கவர்ச்சியான தோற்றமும் உறுதியாக உண்டு.

0 comments:

Post a Comment