NAGARAJI

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு,காய்கறி உணவுப் பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதேநேரத்தில் எளிதில் ஜீரணமாகக் கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. ஒரு சாதாரண அளவு உருளைக்கிழங்கில் 161 கலோரியும், 4 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. அவியலாகச் சாப்பிட்டதும் பாதுகாக்கப்பட்ட மாவுப்பொருளாக உடலுக்கு உடனே சக்தி கிடைக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து அதிகம் சாப்பிட்ட திருப்தியைத் தருவதால் உடல் எடையும் குறைய வாய்ப்பு அதிகம். இதனால் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் பருமனாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் உடல் எடையும் அதிகரிக்காமல் பாதுகாப்பாக வாழலாம்.

குறைவாகச் சாப்பிட்டு சக்தியுடன் வாழ உருளைக்கிழங்கு அவியலைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் சாதம் குறைவாக உண்ணலாம். பாலைவிடப் புரதச்சத்து அதிகமாய் உள்ளது உருளைக்கிழங்கில். சாதாரண அளவில் உள்ள உருளைக்கிழங்கில் 3.2 கிராம் அளவு புரதம் இருக்கிறது.

உடல் எடையைக் குறைப்பதுடன் நோய்களையும் தவிர்க்கிறது. இக்கிழங்கில் குயிர்சிட்டின் என்ற தாவர இரசாயனக்கூறு இருக்கிறது. இது, இதயத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் மற்றும் பிராஸ்டேட் சுரப்பி போன்ற உறுப்புகளில் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

இரத்தக்கொதிப்பு வராமல் தடுக்கத் தோலுடன் சாப்பிடும் உருளைக்கிழங்கில் பொட்டாசியம் உப்பும், குக்கோமைன்ஸ் என்ற தாவர இரசாயனப் பொருளும் நிறைய உள்ளன. ஒரே உருளைக்கிழங்கில் ஒருநாள் தேவையான பொட்டாசியம் உப்பில் 20% கிடைத்துவிடுகிறது.

எனவே, தினமும் காலையோ, மதியமோ ஒரு கிண்ணம் (இரண்டு, மூன்று உருளைக்கிழங்குகள்) உருளைக்கிழங்கு அவியல் சாப்பிடுங்கள். தோலை குப்பையில் வீசாமல் சாப்பிடுங்கள். உருளைக்கிழங்கு சிப்ஸும் நல்லதே! இதற்கு முன்பு உருளைக்கிழங்கு சிப்ஸ் புற்றுநோயை உருவாக்கும் என்றார்கள். ஆனால், அண்மைக் கண்டுபிடிப்புகள் வைட்டமின் `சி' தாராளமாக இருப்பதால் உடலில் புற்றுநோய்க் காரணிகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் உருளைக்கிழங்கு சிப்ஸை மட்டும் அளவுடன் சாப்பிட்டு வந்தால் போதும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை அடியோடு தவிர்ப்பது நல்லது.

அரிசியைவிட முழுமையான உணவு எது?

பசி, பட்டினி, பஞ்சத்தின்போது அரிசியைவிட மிகச் சிறந்த உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருந்து உதவி புரிந்துள்ளது. இக்கிழங்கில் சர்க்கரை உண்டு. ஆனால், அதிகமில்லை.

மெதுவாக ஜீரணமாகும் உணவு இது. இதனால்தான் இதைச் சாப்பிட்டதும் நீண்ட நேரத்திற்கு பசி கட்டுப்படுத்தப்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராது. இதனால் நீரிழிவு நோயாளிகளும் விரும்பிச் சாப்பிடவேண்டும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை.

அமெரிக்காவின் சார்ல்ஸ்னில் உள்ள காய்கறி ஆய்வு மையம் `மாவுச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாய் உள்ள இக்கிழங்கைச் சாப்பிட்டால் அடிக்கடி எதையாவது சாப்பிடவேண்டும் என்ற உணர்வு தோன்றாது' என்று கூறியுள்ளது.

நோய்கள் உருவாவதைத் தடுத்து மற்றும் இளமையில் முதுமைத் தோற்றம் வராமல் தடுத்தும் காப்பாற்றும் வைட்டமின் `ஏ', வைட்டமின் `சி' நிறைந்த கிழங்கு இவை. ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் அதிகம் சுரக்காமல் இந்த இரு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும் கட்டுப்படுத்துவதால் இரத்தக்குழாய்களில் அடைப்பு, இதயநோய், பெருங்குடல் புற்றுநோய், மிகக் கடுமையான நிலையில் உள்ள ஆஸ்துமா, மூட்டுவீக்கம் முதலியவை முற்றிலும் தடுக்கப்படுகின்றன. மேலும் மாங்கனீஸ், பொட்டாசியம், செம்பு, இரும்பு ஆகிய தாது உப்புகளும் தாராளமாய் உள்ள அரிய கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சீசன் சமயத்தில் தினமும் ஓரிரு கிழங்குகள் சாப்பிட்டு வந்தால் உடல் பருமனும், அதிக எடையும் உடல் சக்தி இழக்காமல் குறைக்கப்படும் என்பது உறுதி.

0 comments:

Post a Comment