NAGARAJI B
டற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங் என்ற நடைப்பயிற்சியே திகழ்வதாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பயிற்சியை மேற்கொண்டு வந்தால் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து நீண்டநாள்கள் வாழலாம் என்கிறார் ஜெய் பாடி பில்டிங் மாஸ்டர் ஏ. மலையமான்.

ஒவ்வொருவரும் அதிகாலையில் மேற்கொள்ளும் முப்பது நிமிட துரித நடைப்பயிற்சியால் முழுமையான உடற்பயிற்சியை பெற்றுவிடலாம் என்கிறார் இவர்.

இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது. ஒரு மாதம் மட்டுமே நடைப்பயிற்சி செய்துவிட்டு ஒரு பலனும் கிடைக்கவில்லையே என்று எதிர்பார்க்கக் கூடாது. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் நமது இதயம் பூரண நலத்துடன் இருந்து உழைக்கிறது. இதயமும் ஒரு தசைதான். அந்தத் தசை மூலம் இரத்தம் வேகமாகப் பாய்வதால் இதயம் எப்போதும் நல்ல வடிவிலும் ஆரோக்கியத்திலும் இருக்கும்.

வீட்டில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பதைவிட ஒரு மணிநேரம் வீட்டிற்குள் ஓடி ஆடி வேலை செய்தாலும் அல்லது வீட்டிற்குள்ளேயே நடைப்பயிற்சி செய்தாலும் 100 கலோரிகள் எரிந்து போய்விடுவதால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வாழலாம்.

இத்துடன் அதிகாலையில் நடக்கும் நடைப்பயிற்சியால் 200 கலோரிகள் எரிந்து காலியாகி விடுவதால் மேலும் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் என்டார்பின் என்ற ஹார்மோன் தாராளமாக உற்பத்தியாகி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நடைப்பயிற்சி தினமும் என்டார்பின் உற்பத்தியைத் தூண்டி விடுவதால் மனக் கவலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, உடல் உற்சாகமாக இயங்க வைக்கப்படுகிறது.

நடைப்பயிற்சியால் உடலின் செயல்திறன் அதிகரிக்கிறது. இரத்த ஓட்டமும் சீராகிறது. ஞாபக சக்தியும் வளர்கிறது.

தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்வதால் நான்கு அபாயகரமான நோய்கள் தடுக்கப்படுகின்றன. அவை: இரத்தக்கொதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு, கெட்ட கொலஸ்ட்ரல் அதிகரிப்பு.

நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாதபடி தடுக்கப்படுகிறது. நம் இரத்தத்தில் நல்லது செய்யும் ஹெச்.டி.எல். என்ற கொலஸ்ட்ரலின் அளவும் அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் தடுக்கப்படுகிறது. அதாவது 50% தடுக்கப்படுகிறது. மூளைக்கு வெள்ளம் போல ஆக்ஸிஜன் பாய்வதால் மூளை சுறுசுறுப்படைகிறது.

நீரிழிவு நோயாளிகளும், மூட்டு வலிக்காரர்களும் எடையைக் குறைத்தால் நோய்களின் பிடியிலிருந்து விடுபடலாம். இதற்கு ஒரே வழி 45 நிமிடங்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வதே. உணவுக் கட்டுப்பாடும் தொடர்ந்தால் உடல் எடை குறையும். மூட்டுத் தசைகளும், வலுவாகி மூட்டு வலி குறையும்.

``ஷூ அணிந்தே வாக்கிங் செல்லுங்கள். அதிலும் முன்பகுதியில் பாதம் விரிவதற்கு ஏதுவாக இருக்கும்படியான ஷூக்களையே அணியுங்கள். முதலில் மெல்ல ஆரம்பித்து படிப்படியாக வேகம் காட்டுங்கள். வெறும் வயிற்றுடன் நடந்தால்தான் நாம் விரும்பும் பலன்கள் கிடைக்கும். விரும்பினால் ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் அருந்திவிட்டு நடைப்பயிற்சியை ஆரம்பிக்கவும். டீ, காபி, உணவு என்று சாப்பிட்டுவிட்டு நடந்தால் ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்புக்கரைய வாய்ப்பில்லை. அதிகாலையில் பூங்காக்களில் நடப்பதே நல்லது. உடற்பயிற்சிகளின் `கிங்' `வாக்கிங்'தான்'' என்கிறார் பாடி பில்டிங் மாஸ்டரான ஏ.மலையமான்.

இதயநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் மருத்துவர் சொல்படி நடைப்பயிற்சியை வைத்துக் கொள்ளவும்.

பாதயாத்திரை, கிரிவலம் போன்றவை இதயத்தை ஆரோக்கியமாக்கி, மூளையைப் புதுப்பிக்கிறது. எனவே, இது போன்ற பாதயாத்திரைகளிலும் பங்கு கொள்வதும் ஆயுளை நீடித்துத் தரும்.

0 comments:

Post a Comment