01.12.09 கவர் ஸ்டோரி
`நான் சுத்த சைவமாக்கும்...பால் மட்டும் குடிப்பேன்'
`டீ, காபி குடிக்கிறத நிறுத்தி இரண்டு வருஷமாச்சு...பால் மட்டும்தான் குடிப்பேன்'

இந்த வார்த்தைகளை நண்பர்கள், உறவினர்கள், அலுவலக சகாக்கள் என்று தினந்தோறும் யாரிடமிருந்தாவது கேட்டுக்கொண்டுதானிருக்கிறோம்.

மனிதர்களின் அன்றாட உணவில் பசும்பால் தவிர்க்கவே முடியாத அங்கமாகிவிட்டது. ஆனால் சமீபகாலமாக பசும்பால் பயன்பாட்டைத் தவிர்க்கக்கோரி சுற்றுச்சூழல்வாதிகள் பரவலாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பால்பண்ணைகளால் காடுகள் அழிப்பு, கார்பன்டைஆக்ஸைடு அதிகரிப்பு என சுற்றுச்சூழலுக்கு தீங்கு நேருவதால் பசும்பால் அருந்துவதையும் மாடுகளின் மாமிசத்தை உண்பதையும் தவிர்க்க வேண்டுமென்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சுற்றுச்சூழலை காரணங்காட்டி அடிக்கடி ஏதாவது அதிர்ச்சி அறிவிப்புகளை விடுப்பது அமெரிக்க அறிஞர்களின் வழக்கம்தான். ஆனால் உடல்நலனைக்குறித்தும் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனித உடல் தாய்ப்பாலை தவிர்த்து வேறெந்த உயிரினங்களின் பாலையும் அருந்துவதற்கு ஏற்றவகையில் அமையவில்லை. தாய்ப்பாலையும் குழந்தைப்பருவத்தில் மட்டுமே மனித உடல் ஏற்றுக்கொள்ளும் என்பது அந்த அறிஞர்களின் வாதம்.

எனவே பசும்பாலை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய், ஐஸ் க்ரீம் என்று எந்தப்பொருளை உண்பதாலும் உடல்நலனில் பெரிய மாறுதல்கள் ஏதும் ஏற்படப்போவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க விரும்பும் அமெரிக்கர்கள் உணவிற்குப் பதிலாக பாலருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாலருந்துவதே உடலில் கொழுப்பு அதிகமாகவும் காரணமாக இருக்கிறது. மேலும் வாயுக்கோளாறுகள், வயிற்றுவலி உள்ளிட்ட பல பிரச்சனைகளும் வருகிறது என்று ஹார்வர்ட் பொது சுகாதார பயிற்றகத்தின் ஆய்வொன்று கூறுகிறது.

மனிதர்களுக்குப் போதுமான கால்சியம் அவர்கள் உண்ணும் தாவர உணவிலேயே கிடைக்கிறது. பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவு அதைவிடவும் குறைந்த அளவுதான். பிராணிகளிலிருந்து பெறப்படும் பால்போன்ற உணவுவகைகள், ரத்தத்தால் உட்செரிக்கப்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்கின்றன வேறு சில ஆய்வுகள்.

இதற்கிடையே,பண்ணைமாடுகளின் ஹார்மோன்கள் உயிர்தொழில்-நுட்பத்தைச் சார்ந்தது என்ற பயம் வேறு.

மொத்தத்தில் பசும்பால் மனிதனுக்கு போதுமானதும் அல்ல. பொருத்தமானதும் அல்ல.

அப்படியென்றால் காபி, டீயை தவிர்ப்பதைப்போல பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலையும் பாதுகாத்தமாதிரி இருக்கும்.

எல்லாம் சரி. இது நடைமுறைக்கு சாத்தியமா?

0 comments:

Post a Comment